Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவிடம் வம்பு இழுத்த ஈஸ்வரி, பதிலடி கொடுத்த ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi Serial Episode Update 22-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா சமையல் வேலையை முடித்து எல்லாம் தயாராக இருக்கும் நிலையில் செல்வி பரபரப்பாக ஓடி வந்து நம்ம பரிமாறத்துக்காக வாங்கின குட்டி பானை எல்லாம் கழுவவே இல்லை என்று சொல்ல பாக்யா டென்ஷன் ஆகி உன்கிட்ட தான் சொன்ன ராதா நீதான பண்ணி இருக்கணும் என்று சொல்ல மறந்துட்டேன்கா என்று சொல்லுகிறார். சரி விடுங்க பாக்கு தட்டுல வச்சு கொடுத்துக்கலாம் வேற எதுக்காவது யூஸ் பண்ணிக்கலாம் இப்போ ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லி முடிவெடுத்து ஆர்டர்களை எடுத்து வண்டியில் ஏத்துகின்றன. ஈஸ்வரி நான் போய் சரியா ஏத்துறாங்களான்னு கவனிக்கிறேன் என்று சொல்லிவிட்டு வெளியில் போக பாக்யா லிஸ்ட்டை செக் பண்ணிக் கொண்டிருக்க கோபி பாக்கியாவிடம் பேசுகிறார்.

நீ குக்கிங் பண்ணனும் ஆர்டர் எடுக்கணும்னு சொல்லும் போது எனக்கு தெரியல ஆனா இப்பதான் புரியுது உனக்கு குக்கிங் மேல இருக்கிற பேஷன் சூப்பர் பாக்யா என்று வாழ்த்த பாக்கியம் ஒன்று சொல்கிறார் எல்லாருக்கும் சேர்த்து தான் சமைச்சிருக்கோம் சாப்பிட்டு போங்க என்று சொல்லிவிட்டு பாக்கியா வெளியில் வந்து விடுகிறார். மறுபக்கம் ஈஸ்வரி டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் கிச்சனுக்கு வருகிறார் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது போன் வராமலேயே ஈஸ்வரி ஃபோனை எடுத்து இன்னைக்கு பாக்கியாவும் கோபியம் சேர்ந்து செஞ்ச ஆர்டர் சூப்பரா இருந்தது இதே மாதிரியே அவங்க நிறைய ஆர்டர் பண்ணுவாங்க என்று பேசி ராதிகாவை வெறுப்பேற்றுகிறார்.

ராதிகா எதுவும் பேசாமல் போக ஈஸ்வரி அவரை நிற்க வைத்து வம்பு இழுக்கிறார். நான் பேசுனது ஓட்டு கேட்டியா என்று ஈஸ்வரி கேட்க நான் ஏன் ஒட்டு கேக்கணும் என்கிட்ட சொல்லணும் என்பதற்காக தானே வராத போனை வந்த மாதிரி கத்தி கத்தி பேசிகிட்டு இருந்தீங்க என்று சொல்ல ஈஸ்வரி ஆஃப் ஆகிறார். கோபி இன்னைக்கு அவ்வளவு சந்தோஷமா வேலைய பார்த்துகிட்டு இருந்தா பார்த்து ஆச்சரியப்பட்டா புகழ்ந்து பேசுனா என்றெல்லாம் பேச பிறகு நீ கோபியை விட்டுட்டு போயிடு என்று சொல்லுகிறார். உடனே ராதிகா உங்க புள்ள இந்த பக்கமும் இல்லாம அந்தப் பக்கமும் இல்லாம இப்படி இருக்குறதுக்கு மெயின் காரணம் ஏ நீங்கதான் நீங்க ஒரு சுயநலவாதி உங்க பிள்ளைக்காக யோசிக்கிறீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க உங்களுக்காக யோசிக்கிறீங்க இப்பதான் தெரியுது பாக்யா என்றால் நீங்க சொல்றத நீங்க சொல்லி முடிக்கறதுக்குள்ள செஞ்சிடுவாங்க ஆனா நான் உங்களை எதிர்த்து கேள்வி கேட்கிறேன் உங்களுக்கு அதுதான் பிரச்சனை. இப்ப நான் போனா பாக்யாவுக்கு உங்க பையன கல்யாணம் பண்ணி வச்சுருவீங்களா? என்று கேட்க ஆமாம் என்று ஈஸ்வரி சொல்லுகிறார் இப்படி சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லையா என்று கேட்கிறார் ராதிகா. உங்கள மாதிரி மாமியார் ரெண்டு தெருவுல இருந்தா போதும் என்று சொல்லிவிட்டு ராதிகா கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் பாக்கியா கணக்குகளை சரிபார்க்க நம்ம நெனச்சதை விட லாபம் நல்லாவே வந்திருக்கு என்று என்னிடம் சொல்லுகிறார் இதனை கிச்சனிலிருந்து கேட்ட ராதிகா பாக்யாவிற்கு வாழ்த்து சொல்ல என் ஹெல்ப்பும் வாங்கி இருந்தால் நான் சந்தோஷப்பட்டு இருப்பேன் என்று சொல்லுகிறார். நான்தான் காரணத்தை உங்க கிட்ட சொல்லிட்டேனே என்று சொன்ன ராதிகாவும் சரி என்று சொல்கிறார் உடனே பாக்யா பணத்தை எடுத்துக்கொண்டு போய் கோபியிடம் கொடுத்து உங்க ஆளுங்க வேலை பார்த்ததற்கான சம்பளம் என்று சொல்லுகிறார். நான் தான் அத பத்தி யோசிக்காத பார்த்துக்கிறேன் என்று தானே சொன்னேன் என்று சொல்ல உங்ககிட்ட ஹெல்ப் கேட்கும் போதே நான் இதை பண்ணனும்னு முடிவு பண்ணிட்டேன் என்று சொல்ல நீ கோபி கிட்டயே பணம் கொடுப்பியா என்று ஈஸ்வரி கேட்கிறார். வலுக்கட்டாயமாக பாக்யா கொடுக்க கோபி வேறு வழி இல்லாமல் வாங்கிக் கொள்கிறார் கொஞ்சம் தூரம் போனவுடன் பாக்கிய திரும்ப வந்து நீங்க பத்து நாளைக்கு பணம் கொடுத்திருக்கீங்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு என்று சொல்ல அதற்கு ஈஸ்வரியும் இனியாவும் ஏமா இப்படி இருக்க டாடி உனக்காக இவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்காரு நீ இப்படி தான் பேசுவியா என்று சொல்ல கோபி நான் இன்னும் பத்து நாளைக்கு காசு கொடுத்துடறேன் பாக்யா என்று சொல்லிக் கொண்டிருக்க கிச்சனிலிருந்து வந்த ராதிகா அதுக்கு அவசியமில்லை இன்னும் இரண்டு நாள்ல நாங்க காலி பண்ணிடுவோம் என்று சொல்லி அடிச்சு கொடுக்க குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு ஈஸ்வரி இனியாவும் ரூமில் உட்கார்ந்து இருக்க இனியா எனக்கு மட்டும் ஏன் பாட்டி இவ்வளவு கஷ்டம் வருது எல்லாரும் அப்பா அம்மா கூட சந்தோஷமா இருக்காங்க நான் மட்டும் எப்பவுமே பயந்துகிட்டே இருக்கணுமா என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து கோபியும் வருகிறார் இனியா உங்ககிட்ட நான் பேச மாட்டேன் டாடி என்று சொல்ல என்னாச்சு டா என்று கேட்க அவங்க கூப்பிடும் போது நீங்க வரமாட்டேன்னு தானே சொல்லி இருக்கணும் என்று சொல்லுகிறார் அவன் சொன்ன பிளான் எனக்கு தெரியாது நான் ராதிகா கிட்ட பேசிட்டேன் என்று சொல்லுகிறார் உடனே ஈஸ்வரி நீ அங்க போயிடுவ அங்க போனா அவன் சண்டை போட ஆரம்பிச்சிடுவா உனக்கு ஏதாவது ஆயிடும் தேவையா கோபி இதெல்லாம் என்று கேட்கிறார்.

கோபியின் பதில் என்ன? ஈஸ்வரியின் கேள்விக்கு கோபி பதில் சொல்லுகிறாரா? ராதிகாவிடம் என்ன பேசப் போகிறார்?ராதிகா சம்மதிப்பாரா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 22-01-25