baakiyalakshmi serial episode update 21-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஹாஸ்பிடல் நடந்த விஷயங்களை நினைத்து பார்த்து கலங்கியபடி உட்காருகிறார்.
மறுபக்கம் கோபி ராதிகாவுக்கு ஜூஸ் காபி ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா என்று கேட்க கமலா உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம். நான் பார்த்துக்கிறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். மயூ கோபியுடன் கடைக்கு கிளம்ப கமலா அதையும் தடுத்து நிறுத்துகிறார். பிறகு மயூவுடன் அவர் வெளியே செல்ல ராதிகா உங்கம்மா நம்ப குழந்தையை கொன்னுட்டாங்க அவங்க இந்த அளவுக்கு போவாங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. இன்று கதறி அழ கோபியும் கண்கலங்கி ஆறுதல் சொல்கிறார்.
மறுநாள் காலையில் பாக்கியம் ஈஸ்வரியை வந்து பார்க்க ஈஸ்வரி உண்மை எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். பாக்கியாவை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கண்கலங்கி அழுகிறார். ராதிகாவை டிஸ்டார்ஜ் செய்து கோபி வீட்டுக்கு அழைத்து வர தயாராக ராதிகா நான் அம்மாவோட ஊருக்கு போய் ரெஸ்ட் எடுக்க போறேன் என்று ஷாக் கொடுக்கிறார். கோபி உன்ன அனுப்ப மாட்டேன் என்று சொல்ல ராதிகா என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.
கமலா என் பொண்ணு நான் ஊருக்கு கூட்டிட்டு போய் பார்த்துகிறேன் மயூவை அங்கேயே ஒரு ஸ்கூல்ல சேர்த்துக்கிறேன். உங்க அம்மா இருக்கிற வீட்ல என் பொண்ணை இருக்க விடமாட்டேன் என்று சொல்கிறார். கோபி எங்க அம்மா அப்படி எதுவும் பண்ணியிருக்க மாட்டாங்க என்று ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து பேச ராதிகா என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது என உறுதியாக சொல்கிறார்.
கமலா ராதிகா அந்த வீட்ல இருக்கணும்னா உங்க அம்மாவ அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க இல்லன்னா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவர்களை உள்ள தள்ளிடுவேன் என்று எச்சரிக்கிறார். கோபி அம்மாவை எப்படி வெளியே அனுப்ப முடியும் அவர்களிடம் பேசி இதுக்கு ஒரு சொல்யூஷன் தரேன் என்று சொல்ல ராதிகா அந்த சொல்யூஷன் நான் எதிர்பார்க்கிறதா இருக்குமா என்று கேள்வி கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…
நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…
FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…
நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…
உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…
ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…