Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகா எடுத்த முடிவு, கண்கலங்கியே ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 21-06-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ஈஸ்வரி ஹாஸ்பிடல் நடந்த விஷயங்களை நினைத்து பார்த்து கலங்கியபடி உட்காருகிறார்.

மறுபக்கம் கோபி ராதிகாவுக்கு ஜூஸ் காபி ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா என்று கேட்க கமலா உங்களுக்கு எதுக்கு அந்த கஷ்டம். நான் பார்த்துக்கிறேன் என்று அதிர்ச்சி கொடுக்கிறார். மயூ கோபியுடன் கடைக்கு கிளம்ப கமலா அதையும் தடுத்து நிறுத்துகிறார். பிறகு மயூவுடன் அவர் வெளியே செல்ல ராதிகா உங்கம்மா நம்ப குழந்தையை கொன்னுட்டாங்க அவங்க இந்த அளவுக்கு போவாங்கனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.. இன்று கதறி அழ கோபியும் கண்கலங்கி ஆறுதல் சொல்கிறார்.

மறுநாள் காலையில் பாக்கியம் ஈஸ்வரியை வந்து பார்க்க ஈஸ்வரி உண்மை எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார். பாக்கியாவை அனுப்பி வைத்துவிட்டு மீண்டும் கண்கலங்கி அழுகிறார். ராதிகாவை டிஸ்டார்ஜ் செய்து கோபி வீட்டுக்கு அழைத்து வர தயாராக ராதிகா நான் அம்மாவோட ஊருக்கு போய் ரெஸ்ட் எடுக்க போறேன் என்று ஷாக் கொடுக்கிறார். கோபி உன்ன அனுப்ப மாட்டேன் என்று சொல்ல ராதிகா என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

கமலா என் பொண்ணு நான் ஊருக்கு கூட்டிட்டு போய் பார்த்துகிறேன் மயூவை அங்கேயே ஒரு ஸ்கூல்ல சேர்த்துக்கிறேன். உங்க அம்மா இருக்கிற வீட்ல என் பொண்ணை இருக்க விடமாட்டேன் என்று சொல்கிறார். கோபி எங்க அம்மா அப்படி எதுவும் பண்ணியிருக்க மாட்டாங்க என்று ஈஸ்வரிக்கு சப்போர்ட் செய்து பேச ராதிகா என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது என உறுதியாக சொல்கிறார்.

கமலா ராதிகா அந்த வீட்ல இருக்கணும்னா உங்க அம்மாவ அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க இல்லன்னா நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்து அவர்களை உள்ள தள்ளிடுவேன் என்று எச்சரிக்கிறார். கோபி அம்மாவை எப்படி வெளியே அனுப்ப முடியும் அவர்களிடம் பேசி இதுக்கு ஒரு சொல்யூஷன் தரேன் என்று சொல்ல ராதிகா அந்த சொல்யூஷன் நான் எதிர்பார்க்கிறதா இருக்குமா என்று கேள்வி கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 21-06-24
baakiyalakshmi serial episode update 21-06-24