Baakiyalakshmi Serial Episode Update 21.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கயலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் வீட்டில் எல்லோரும் வருத்தத்தோடு இருக்க அப்போது செழியன் ஜெனிக்கு போன் செய்தேன் அம்மா அதை விடுதலை பண்ணிட்டாங்க அவங்க மேல எந்த தப்பும் இல்லையென நிரூபித்து விட்டோம் என கூறுகிறார். இந்த விஷயத்தை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நிம்மதி அடைகின்றனர்.
இந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு வந்து என்னம்மா ஆச்சு பாக்கியா வீட்டுக்கு வந்துட்டா டா என கேட்டேன் இவ்வளவு நேரம் எங்க போயிருந்த ஒரு போன் பண்ணா எடுக்க மாட்டியா என கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைக்கிறார் ஈஸ்வரி. இல்லமா ஒரு முக்கியமான வேலையா வெளியூர் போய்ட்டேன் நீங்க போன் பண்ணது நேரா இங்கதான் காரை வேகமாக ஓட்டி கொண்டு வரேன் என கதை விடுகிறார். இந்த நேரத்தில் சேரில் இருந்து எழுந்து கோபியின் அப்பா அறைந்து விடுகிறார். அடிவாங்கிய கோபி அதிர்ச்சியில் நிற்க மற்றவர்கள் கோபியின் அப்பாவை உட்காரவைத்து சாந்தப்படுத்துகின்றனர்.
இந்த நேரத்தில் பாக்கியாவும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். எல்லோரும் பாக்கியாவை கட்டித்தழுவி கண்ணீரோடு வரவேற்கின்றனர். பிறகு கோபி எனக்கு விஷயம் தெரியாது நான் உன்கூட இருந்திருக்கணும் பாக்கியா என வசனம் பேசி விட்டு மேலே சென்று விடுகிறார்.
அதன்பிறகு பாக்கியா செய்தித்தாளில் தன்னைப் பற்றி வந்திருக்கும் செய்தியைப் பார்த்து வருத்தப்படுகிறார். எல்லோரும் என்ன தப்பா நினைச்சுட்டாங்க ராதிகாவும் தப்பா நினைச்சுட்டீங்க நான் உங்களுக்கு நல்லது தானே பண்ண என்னை இப்படி இங்கே கொண்டு வந்து விட்டுடீங்களே என சொன்னாங்க என்று வருத்தப்பட தெரியும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத என்று கூறுகிறார்.
பிறகு செல்வி கோபியை அவருடைய அப்பா அடித்த விஷயத்தை சொல்ல பாக்கியா ஏன் மாமா என கேட்கிறார். ஈஸ்வரி நீங்க பண்ணியது ரொம்ப தப்பு என கூறுகிறார். பிறகு எல்லோரும் டைனிங் ஹாலில் இருக்க கோபி வந்து அமர்கிறார். அவருக்கு சாப்பாடு பரிமாறுகிறார் பாக்கியா. அப்போது ஈஸ்வரி போன் பண்ணா போன் எடு சொல்லாம கொள்ளாம ராத்திரி நேரத்துல வெளிய போறது என்ன புது பழக்கம்? எதுவாக இருந்தாலும் சொல்லிட்டு போ பாக்கியா போன் பண்ணா தான் எடுக்க மாட்ட இப்போ யார் போனையும் எடுக்கிறது இல்ல, இதெல்லாம் நல்லதில்ல என கோபியை எச்சரிக்கிறார் ஈஸ்வரி.
பிறகு பாக்கியா உனக்கு இதெல்லாம் தேவைதானா என கேட்க நான் என்ன தப்பு பண்ணேன் என பாக்கியா சொல்கிறார். இந்த சமையல் வேலை எல்லாம் எதுக்கு உனக்கு வீட்டுல இருந்தா இந்த பிரச்சனைல எதுவும் இல்லை என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் ஜெனி எழில் இடம் கோபி பாக்கியாவை இனி சமைக்க வேண்டாம் என சொல்லி விட்டதைப் பற்றி கூறுகிறார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…