பாக்கியாவை பாராட்டிய குடும்பத்தினர். எழில் எடுத்த முடிவு. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் செழியன் பாக்யாவிற்காக காத்திருக்க கோபி இதென்ன பெரிய சாதனையா என்று பேச என்னப்பா மினிஸ்டர் பாராட்டி இருக்காங்க இது அம்மாவுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்று அவளோடு இருக்க பாக்யா ராமமூர்த்தி என எல்லோரும் வீட்டிற்கு வர செழியன் ஓடிப்போய் அம்மாவை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறுகிறார்.

பிறகு ராமமூர்த்தி அமைச்சர் போட்ட மாலையை காட்டி கோபியை வெறுப்பேற்றி இந்த மாதிரி நீ மினிஸ்டர் கிட்ட பாராட்டு வாங்கி இருக்கியா என கலாய்க்கிறார். அடுத்ததாக ஈஸ்வரி அங்கு வர இப்ப பேசுங்க பார்க்கலாம் என்று கோபி நக்கலாக பார்க்க ஈஸ்வரி பாக்யாவை பாராட்டி கட்டிப்பிடித்து கண்கலங்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அதைத்தொடர்ந்து கிச்சனில் இருக்கும் பாக்கியா கணேஷ் சொன்ன விஷயத்தை நினைத்து பார்த்து பழனிச்சாமிக்கு போன் செய்து இந்த விஷயத்தை எழிலிடம் சொல்லிடலாம்னு முடிவு எடுத்திருக்கிறேன் அது சரியா வருமா என்று கேள்வி கேட்கிறார். இந்த விஷயம் கண்டிப்பா எழிலுக்கு தெரியணும் யார் மூலமாக தெரிஞ்சா மனசு கஷ்டப்படுவாரு நீங்களா சொல்லிடுங்க என்று சொல்ல பாக்கியா சரி என்று போனை வைத்துவிட்டு எழிலிடம் பேச கூப்பிட்டு உட்கார வைக்கிறார்.

என் வாழ்க்கையில் நடக்கும் சம்பவத்தை வேறு யாரோ ஒருவருக்கு நடப்பது போல சொல்ல எழில் அந்த பொண்ணும் பையனும் ரொம்ப பாவம் என்று பரிதாபப்பட அடுத்ததாக பாக்கியா உண்மையை சொல்ல வர நிலாவும் அமிர்தாவும் வந்துவிட உண்மையை சொல்ல முடியாமல் போகிறது.

அதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் எல்லோரிடமும் விஷயத்தை சொல்லிவிடலாம் என்று முடிவெடுக்க எழில் வெளியே சென்று இருப்பதாக செழியன் சொல்ல செழியன் மற்றவர்களிடம் உண்மையை சொல்லலாம் என்று பாக்கியா பேச வரும்போது கோபி சீக்கிரம் சொல்லு எனக்கு நேரமாகுது என்று சொல்ல சரி நீங்க போயிட்டு சாயங்காலம் வாங்க அப்ப சொல்லிக்கிறேன் என்று பாக்கியா சொல்லிக் கொண்டிருக்க எழில் வீட்டிற்கு வருகிறார்.

என் பிரண்டோட அப்பா ரெஸ்டாரன்ட் வாடகைக்கு விட போறதா சொல்லிட்டு இருந்தேன்ல அவரு இப்போ பாக்கணும்னு சொல்லி இருக்காரு வா நாம போயிட்டு வந்துடலாம் என்று கூப்பிட செழியன் அம்மா எது முக்கியமான விஷயம் சொல்ல வந்தாங்க என்று சொல்ல எதுவா இருந்தாலும் அப்புறம் பாத்துக்கலாம் என்று எழில் கூட்டி செல்கிறார்.

பிறகு எழில் பாக்யா மற்றும் பழனிச்சாமி என மூவரும் சேர்ந்து ரெஸ்டாரன்ட் ஓனரை சந்திக்க அவர் ரெண்டு லட்சம் ரூபாய் அட்வான்ஸ் 60,000 வாடகை என்று சொல்ல பாக்கியா வாடகை தான் அதிகமாக இருக்கிறது என பீல் பண்ண எழில் வாடகை மட்டும் கொஞ்சம் குறைக்க முடியுமா என்று கேட்க தெரிந்தவர்கள் நான் ஏற்கனவே கம்மியா தான் சொல்லி இருக்கேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 20-12-23
jothika lakshu

Recent Posts

கேரளா ஸ்டோரி 2 வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை

கேரளா ஸ்டோரி 2' வெளியீட்டுக்கு ஐகோர்ட் தடை ‘த கேரளா ஸ்டோரி 2’ படத்தின் சென்சார் சான்றிதழை எதிர்த்து தாக்கல்…

12 hours ago

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம்

கோலாகலமாக நடந்து முடிந்த விஜய் தேவரகொண்டா – ரஷ்மிகா திருமணம்.. கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட புகைப்படம் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா…

12 hours ago

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நான் நடித்தது ஏன்? மனம் திறந்த தவெக அருண்ராஜ் ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல்…

12 hours ago

‘அரசன்’ அப்டேட் கொடுத்த சமுத்திரகனி!

'அரசன்' அப்டேட் கொடுத்த சமுத்திரகனி! ‘அரசன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு மீண்டும்…

12 hours ago

‘தலைவர்-173’ படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..!

'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…

2 days ago