Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஈஸ்வரிடம் கோபமாக பேசிய கோபி, வருத்தத்தில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 20-06-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை நலம் விசாரிக்க பாக்க ராதிகா எம் மகன் நீயே முழிக்காதீங்க என்று வெளியே துரத்தி அனுப்புகிறார்.

கோபி வெளியே வர ஹாஸ்பிடல் வந்த ஈஸ்வரி ராதிகாவுக்கு எப்படி இருக்கு என்று கேட்டு நேராக ரூமுக்குள் வந்து ராதிகா இப்ப எப்படி இருக்கு வழி பரவாயில்லையா என்று கையை பிடிக்க ராதிகா எல்லாத்துக்கும் காரணம் நீங்கள் தான் என் குழந்தை இல்லாமயே போயிடுச்சு உங்களுக்கு சந்தோஷமா என்று கோபப்படுகிறார். கமலா நீங்க ராதிகாவை புடிச்சு தள்ளாத என் ரெண்டு கண்ணால பார்த்தேன் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார்.

நான் எதுவும் பண்ணல நீங்க புரியாம பேசுறீங்க என்று ஈஸ்வரி சொல்ல நீங்கதான் எல்லாமே பண்ணுங்க என்று ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். கமலா இந்த அம்மாவ வீட்டுக்குள்ள சேர்க்க வேண்டாம் என்று நான் எவ்வளவோ சொன்னேன் கேட்டீங்களா? கொலைகாரிய கூடவே வைத்திருந்து இருக்கோம். நீ எல்லாம் ஒரு பொம்பளையா என்று அவமானப்படுத்த கோபி அமைதியாக நிற்க ராதிகா வெளிய போயிடுங்க என்று ஆவேசப்படுகிறார்.

வெளியே வந்த ஈஸ்வரி கோபியிடம் நான் எதுவுமே பண்ணல நீயாவது என்னை நம்பு என்று அழுகிறார். ஆனால் கோபி ஆரம்பத்தில் இருந்து இந்த குழந்தை வேண்டாம் கலைச்சிடு கலைச்சிடுன்னு சொல்லிக்கிட்டே இருந்தீங்க. பிடிக்காத வாழ்க்கையில் இருந்து வெளியே வந்து பிடிச்ச வாழ்க்கையை வாழ தொடங்கினேன்.‌. குழந்தை உருவானதும் இந்த குழந்தை வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தீங்க இப்போ நீங்க நினைச்சு மாதிரியே இந்த குழந்தை இல்லாம போயிடுச்சு என் குழந்தை செத்துப் போயிடுச்சு இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

ஈஸ்வரி நான் எதுவுமே பண்ணல இது அழுது புலம்பி அப்படியே ஓர் இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். பாக்யா ஈஸ்வரியை பார்க்க ராதிகா வீட்டிற்கு வந்து கதவை தட்ட கதவை திறக்காத நிலையில் போன் செய்ய ஈஸ்வரி அழுதபடி பேசி போனை வைத்து விடுகிறார். இதனால் செழியனை வைத்து கோபிக்கு போன் செய்ய அவர் அம்மா இங்கே தான் வந்தாங்க ஆனா இப்போ இங்க இல்ல.‌ பக்கத்துல எங்கயாச்சும் இருப்பாங்க என்று சொல்கிறார். இதனால் பாக்கியா ஈஸ்வரி எங்க போனாங்கன்னு தெரியலையே என்று குழம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 20-06-24
baakiyalakshmi serial episode update 20-06-24