Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை நினைத்து அழும் பாக்யா.. ராமமூர்த்தி இடம் உண்மையை உடைத்த ஈஸ்வரி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோ

baakiyalakshmi serial episode update 19-09-22

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோவிலில் கோபியை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த ஈஸ்வரி வாழ்க்கையை பறி கொடுத்துட்டு சமைக்க போறோம் சாதிக்க போறேன்னு திரிஞ்சுக்கிட்டு இருக்க என பாக்கியாவை திட்டுகிறார். ஆனாலும் கோபி பற்றிய விஷயத்தை எதுவும் சொல்லாமல் ஈஸ்வரி உள்ளே சென்று விடுகிறார்.

இந்த பக்கம் ராதிகாவும் கோபியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அம்மாவிடம் விஷயத்தை சொல்ல அவர் கோபப்பட்டதை கூறுகிறார். ஆனால் நான் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கு அந்த வாழ்க்கை ராதிகா தான் என உறுதியாக சொல்லிவிட்டு வந்துட்டேன் என கோபி சொல்கிறார். இந்த நேரத்தில் ராதிகாவின் அண்ணன் வந்து கல்யாணத்தில் என்ன சமைப்பது என கேட்டரிங் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்ன சொல்லலாம் என கேட்க இட்லி இடியாப்பம் ஊத்தாட்டம் என சில விஷயங்களை ராதிகா சொல்ல கோபி எனக்கு கேரட் அல்வா மற்றும் காஜூ கட்லி தான் பிடிக்கும் என கூறுகிறார்.

பிறகு இந்த மெனுவை ஜெனிக்கு அனுப்ப அவர் பாக்கியவிடம் படித்துக் காட்ட அங்கிருந்த இனியா கேரட் அல்வா காஜூ கட்லி இரண்டுமே அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். பிறகு பாக்கியா இதே நினைப்பில் தூங்க கோபி வீட்டுக்கு வந்து இதை செய்து கொடுக்குமாறு சொல்ல பாக்கியா சமைக்க தொடங்க கோபி அவளிடம் சென்று ஆசையாக பேசுவது போன்று கனவு காண்கிறார். பிறகு இது கனவு என கண் கலங்கி அழுகிறார்.

அடுத்ததாக ஈஸ்வரி சோகமாகவே இருக்க ராமமூர்த்தி என்ன ஏது என கேட்க அப்போது எது நடக்கக் கூடாதுன்னு நினைச்சனோ அது நடக்க போகுது கோபி என்னை பார்க்க வந்தான். ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறதா என் தலையில இடியை இறக்கிட்டான்‌. இந்த வயசுல ஏன் இவன் இப்படி எல்லாம் செய்கிறான் என வருத்தப்பட ராமமூர்த்தி இந்த கல்யாணத்தை நான் நடக்க விடமாட்டேன் என சபதம் எடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshmi serial episode update 19-09-22

baakiyalakshmi serial episode update 19-09-22