ராதிகாவிற்கு கலைந்த கரு, அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் டாக்டர் ராதிகாவை பரிசோதனை செய்து கொண்டிருக்க வெளியில் எல்லோரும் பதற்றத்தோடு இருக்க கோபி அம்மாவுக்கு ஒன்னும் ஆகாது என்று ஆறுதல் சொல்ல அது எப்படி எதுவும் ஆகாது வயித்துல புள்ளைய வச்சுக்கிட்டு கீழே விழுந்து இருக்கா என்று கோபப்படுகிறார்.

பிறகு டாக்டர் கோபி ஏ எம் கமலாவையும் உள்ளே கூப்பிட்டு குழந்தை கலைந்து விட்டதாக சொல்ல அதிர்ச்சி அடைகின்றனர். வெளியில் வந்த கமலா மயூவைப் பிடித்துக் கொண்டு உனக்கு தம்பியோ தங்கச்சியோ வரும்னு ஆசையாய் காத்திருந்தோமே இப்போ எதுவும் இல்லாமல் போயிடுச்சு கரு கலைந்து போயிடுச்சு என்று கண்கலங்கி அழுகிறார்.

பிறகு ராதிகாவை பார்க்க போன கோபி கையை பிடித்து ஆறுதல் சொல்ல போக உங்கள பாக்கவே புடிக்கல, இந்த குழந்தை வேண்டாம்னு சொன்னீங்க இப்போ இல்லாமையே போயிடுச்சு என்று கோபப்படுகிறார். கமலா எல்லாத்துக்கும் காரமும் உங்க அம்மா தான் என்று அதிர்ச்சி கொடுக்க கோபி வாய்க்கு வந்ததெல்லாம் பேசாதீங்க எங்க அம்மா அப்படி எதுவும் செய்ய மாட்டாங்க என்று சொல்கிறார்.

நடந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி பார்த்து உங்க அம்மா தான் காரணம் என பேரதிர்ச்சி தருகிறார். அவங்க தான் என்னை புடிச்சு தள்ளுனாங்க என்று சொல்லி கோபியை வெளியே துரத்துகிறார். வெளியே வந்த கோபி ஈஸ்வரி சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்த்து உண்மை என நம்புகிறார்.

இந்த நேரம் பார்த்து ஈஸ்வரி போன் போட்டு ராதிகாவுக்கு என்ன ஆச்சு குழந்தைக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே என்று கேட்க கோபி எப்படி எதுவும் ஆகாமல் இருக்கும் அந்த குழந்தை இல்லாமயே போயிடுச்சு இப்போ உங்களுக்கு சந்தோஷமா என்று அதிர்ச்சி தருகிறார்.

இதையடுத்து ஈஸ்வரி பாக்கியாவிடம் வந்து விஷயத்தை சொல்லி நான் தான் காரணம்னு சொல்றாங்க என்று புலம்ப பாக்கியா அவர் ஏதோ வருத்தத்துல சொல்றாரு நீங்க அது எல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க வீட்டுக்கு வாங்க என்று கூப்பிட நான் வரல என்று மீண்டும் ராதிகா வீட்டிற்கு கிளம்பி வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 19-06-24
jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

3 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

3 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

3 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

3 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

3 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

3 days ago