siragadikka aasai serial episode update 19-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனா தாம்பூல தட்டுடன் வந்து பரதம் கத்துக்க வந்திருப்பதாக சொல்ல விஜயா பரதத்தை நீங்க எல்லாம் கத்துக்க முடியாது.. அது ஒன்னும் பூ கட்டுற வேலையோ இல்ல கார் ஓட்டுற வேலையோ இல்ல என்று சொல்கிறார். மீனா பூவை கைய வச்சு தான் கட்டுறோம்.. காரையும் கை கால வச்சு தான் ஓட்டணும். பரதத்தையும் கை, காலை வச்சு தான் ஆடணும் அப்புறம் என்ன இருக்கு என்று கேட்கிறார்.
நாங்க ஆடி காட்டுறோம் பாருங்க அப்புறம் சொல்லிக் கொடுங்க என்று சொல்லி டான்ஸ் ஆட பார்வதியும் கூட சேர்ந்து ஆட விஜயா பாட்டு நிறுத்தி இதிலேயே தெரியுது, உங்களுக்கெல்லாம் பரதம் வராது என்று திட்டுகிறார். சொல்லிக் கொடுக்காம வராதுன்னு எப்படி சொல்லலாம் நீங்க சொல்லி தாங்க அப்புறம் ஆடலனா விட்டுவிடலாம் என்று சொல்கிறார். பிறகு விஜயாவும் மீனாவும் சேர்ந்து பரதம் ஆடுகின்றனர்.
விஜயாவுக்கு கழுத்து சுளுக்கு பிடித்துக் கொண்டு அப்படியே நின்றுவிட பார்வதி நீங்க வீட்டுக்கு போங்க நான் சுளுக்கு சுந்தரியை கூட்டிட்டு வரேன்.. அவ நல்லா சுளுக்கு எடுப்பா என்று சொல்லி அனுப்பி வைக்க வீட்டுக்கு வந்த விஜய்யா காரை விட்டு இறங்க மாட்டேன் யாராவது பார்த்தா என்ன ஆகிறது என்று சொல்ல முத்து, மீனா போர்வையை விரித்து மறைத்து விஜயாவை வீட்டிற்குள் அழைத்துச் செல்கின்றனர்.
இதையடுத்து அண்ணாமலை இதுக்குத்தான் ஓவர் ஆடக்கூடாது இன்று விஜயாவை கலாய்க்கிறார். பிறகு எல்லாத்துக்கும் காரணம் காரணம் என்று மீனாவை திட்டுகிறார். சுளுக்கு சுந்தரி வந்து சுளுக்கு எடுத்து விட கழுத்தை மட்டும் அப்படியே இருக்க படியில் வைத்து தான் தூங்க வேண்டும் ஒரு நாளில் சரியாகிவிடும் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு சுருதி அப்போ ஆன்ட்டி இன்னைக்கு வெளியே தான் படுக்கணுமா பஸ்ட் படியில் தல வைக்கணுமா லாஸ்ட் படியா என்று கேட்கிறார். மீனா அது அரிசி அளந்து போடற படி என விளக்கம் கொடுக்கிறார்.
பிறகு விஜயா மீனாவை கூப்பிட்டு இப்போ உனக்கு சந்தோசமா..? நானும் ஒரு தொழில் செய்து பிழைச்சிடுவேனு உனக்கு பொறாமை அதான் என்னை இப்படி உட்கார வச்சுட்ட என்று மீனாவை திட்டுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…
இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…
Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…