Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவிற்கு உதவி செய்த ஈஸ்வரி.. ஜெனியின் அப்பா அம்மாவை சந்தித்த செழியன்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 19.03.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு பாக்கியா சமைக்கும் இடத்திற்கு ஈஸ்வரி அவருடைய கணவருடன் சென்றதை பார்த்தும் மகிழ்ச்சி அடைகிறார் பாக்கியா. அவர்களை உட்கார வைத்து எல்லா வேலையையும் செய்கிறார். பிறகு பூரிக்கு மாவு பிசைய சொல்லி அங்கிருந்தவர்களிடம் சொல்ல எல்லோரும் ஒருவர் வேலையில் இருப்பதாக காரணம் சொல்ல சரி நானே பிசைந்து கொள்கிறேன் என பாக்கியா சொல்கிறார்.

உடனே ஈஸ்வரி நான் பிசைந்து தறேன் என பாக்கியாவுக்கு உதவி செய்கிறார். வேண்டாம் அத்தை என எவ்வளவோ சொல்லியும் அதை அவர் கேட்காமல் உதவி செய்கிறார். பிறகு கோபி பற்றி கேட்க அவன் நல்லா தான் இருந்தான் நிறைய வாட்டி போன் பேச கீழே வந்தானே என கூறுகிறார். இல்ல அத்தை அவர் உடம்பு முடியாமல் தான் இருந்தார் என பாக்கியா சொல்கிறார்.

பிறகு அவர் போன் போட்டா கூட எடுக்க மாட்றாரு. அவரை கொஞ்சம் பாத்துக்கங்க நான் சீக்கிரம் வருகிறேன் எனச் சொல்லி வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டில் ஜாலியாக இருக்கிறார்.

பிறகு செழியன் ஜெனியின் அப்பா, அம்மாவைப் பார்த்து ஜெனியின் எனக்கும் இடையே நிறைய பிரச்சனைகள் வருது. அவ என்ன விட்டுட்டு குடும்பத்துடன் ரொம்ப நெருக்கமாக இருக்கா, பெருசா என் கூட டைம் ஸ்பெண்ட் பண்றது இல்ல என சொல்லி வருத்தப்படுகிறார். அவர்கள் நாங்க ஜெனியிடம் பேசுகிறோம் என சொல்கின்றனர்.

அதன் பின்னர் கோபி இந்த பக்கம் வீட்டுக்கு கிளம்புவதாக சொல்ல மய்யூ நீங்க போகக்கூடாது நீங்க போயிட்டு எனக்கு பயமாயிருக்கு. நீங்க இங்கேயே இருங்க என அடம்பிடிக்கிறார். ராதிகாவும் அங்க போய் என்ன பண்ணப் போறீங்க உங்கள பாத்துக்க தான் யாருமே இல்லையே இங்கேயே இருங்க என கூறுகிறார். கோபியின் சரி என்று சொல்லி ராதிகா வீட்டிலேயே தங்கி விடுகிறார். இந்த வார இறுதியில் ஒரு ரிசார்ட்டுக்கு போயிட்டு வரலாம் என கூறுகிறார்.

சமைக்கும் இடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார் பாக்கியா வீட்டில் உள்ளவர்களிடம் பேசிவிட்டு ஜெனி தன் அப்பாவை போய் பார்த்தியா உடம்பு சரி இல்லைன்னு சொன்னாரு ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா எனக் கேட்க அவர பார்த்தா அப்படி ஒன்னும் தெரியலையே என இனியா மற்றும் ஜெனி கூறுகின்றனர். நல்லா தான் இருந்தார் என ஜெனி சொல்ல இல்ல உடம்பு சரி இல்லைன்னு சொன்னாரு சரி நான் போய் பாத்துட்டு வரேன் என மேலே செல்ல அவர் இல்ல வெளிய போய்ட்டார் என கூறுகின்றனர்.

இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். கோபி வீட்டுக்கு வருவார் என நடுராத்திரி வரை கதவைத் திறந்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறார். ராதிகா வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் கோபிக்கு பாக்கியா தொடர்ந்து போன் அடிக்க அவர் போனை எடுக்காமல் சைலன்ட்ல போட்டு விடுகிறார். இதனால் பாக்கியா வருத்தத்தோடு அமர்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 19.03.22
Baakiyalakshmi Serial Episode Update 19.03.22