Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்தில் கையெழுத்துப் போட்ட பாக்கியா.. கோபியை கட்டிப்பிடித்து சந்தோஷம் அடைந்த ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 19.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி கொடுத்த விவாகரத்து பேப்பரில் விஷயம் தெரியாமல் பாக்கியா கையெழுத்துப் போட பிறகு கையெழுத்து போடுவதற்கு முன் னர் என்ன ஏதுன்னு கேக்க மாட்டியா கோபி கேட்கிறார். நீங்கதான போட சொன்னிங்க உங்க கிட்ட எதுக்கு கேட்கணும்? என பாக்கியா சொல்ல கோபி சில காரணங்களைச் சொல்கிறார். இவ்ளோ எல்லாம் எதுக்கு சொல்லணும் நீங்க எது செஞ்சாலும் எனக்கு நல்லது தானே பண்ணுவீங்க என சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். பாக்கியா சொன்ன வார்த்தைகளை கேட்டு வருத்தப்பட்டு அப்படியே அமர்கிறார் கோபி.

மறுநாள் காலையில் பாக்கியா கிச்சனில் ஜெனியிடம் கேஸ் சிலிண்டர், பிசியோதெரபிஸ்ட், காய்கறி வாங்க என எல்லாவற்றிற்கும் பணம் எடுத்து வைத்துவிட்டு அதை கொடுக்க வேண்டியவர்கள் இடம் கொடுத்து விடு என சொல்கிறார். தற்போது செல்வி பாக்கியா பணத்திற்காக கஷ்டப்படுவதை பற்றி சொல்ல எழில் கஷ்டப்படாத மா பணம் வேணும்னா சொல்லு என கூறுகிறார். உடனே பாக்கியா அதெல்லாம் நான் சமாளித்து விடுவேன் என சொல்கிறார்.

இந்த பக்கம் கோபி ராதிகாவுடன் வக்கீலை சென்று பார்க்கிறார். விவாகரத்து பேப்பரை எடுத்து கொடுக்க நான் உங்க மனைவி கையெழுத்து போட மாட்டாங்கனு நினைச்சேன். காரணம் இந்த வயசுல பொம்பளைங்க அவ்வளவு எளிதாக விவாகரத்து பண்ணிட மாட்டாங்க. சமுதாயத்தை பத்தி யோசிப்பாங்க புள்ளைங்க வளர்ந்த பிறகு விவாகரத்து பண்ண யோசிப்பாங்க என கூறுகிறார். உடனே கோபி என்னுடைய மனைவி அதையெல்லாம் யோசிக்க மாட்டார் என டிராமா போடுகிறார். பிறகு 6 முதல் 8 மாதத்திற்குள் விவாகரத்து கிடைத்து விடும் இரண்டு இயரிங் வரவேண்டியிருக்கும் என சொல்கிறார் வழக்கறிஞர்.

பிறகு காருக்குள் வந்ததும் ராதிகா கோபியை கட்டிப்பிடித்து எனக்கு இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு நாளா உங்களோட பழகும் போது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது. எனக்காக நீங்க உங்க மொத்த குடும்பத்தையும் விட்டுட்டு வர போறீங்க. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் என கூறுகிறார். 6 முதல் 8 மாதம் போயிடுச்சுன்னா நமக்கு கல்யாணம் ஆகிடும் ராதிகா சொல்கிறார். உனக்காக என்ன வேணா பண்ணலாம் எதுவென்றாலும் விட்டு விட்டு வரலாம் என கோபி சொல்கிறார்.

பிறகு பாக்கியா தான் சமைக்கும் இடத்தில் உட்கார்ந்து கொண்டு கையெழுத்துப் போட்டு பழகி சிரித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த செல்வி என்னக்கா இது கையெழுத்து போட்டுட்டு இருக்க என கேட்க பாக்கியா அவர் அவருடைய கம்பெனி பார்ட்னரா என்ன சேர்த்துக்கிட்டு கையெழுத்து வாங்கினார். அந்த பேப்பர்ல அவரோட கை எழுத்து முத்து முத்தா அழகா இருந்துச்சு என் கையெழுத்து நல்லா இல்ல. அடுத்த முறை ஏதாச்சு பேப்பரில் கையெழுத்து கேட்டா அழகா போடணும் அதுக்காகத்தான் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன் என சொல்கிறார். பிறகு செல்வி பாக்கியாவை கிண்டல் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Baakiyalakshmi Serial Episode Update 19.02.22
Baakiyalakshmi Serial Episode Update 19.02.22