baakiyalakshmi serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி முக்கியமான விஷயம் சொல்லப் போவதாக எல்லோரையும் கூப்பிட்டு உட்கார வைக்க எழில் மட்டும் இல்லாமல் இருக்க ஈஸ்வரி ஜெனியை அனுப்பி எழிலை கூப்பிட சொல்கிறார்.
பிறகு எழிலும் கீழே வந்து விட அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்த பிறகு ராமமூர்த்தி எழிலுக்கு கல்யாணம் பண்ண முடிவு எடுத்து இருப்பதாக சொல்கிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகும் பாக்கியா இப்போ என்ன மாமா அவசரம் என கேட்க ஈஸ்வரி அவனுக்கு கல்யாண வயசு ஆகுது இல்ல என கூறுகிறார். மேலும் ஈஸ்வரி சீக்கிரம் அவனுக்கும் வர்ஷினிக்கும் கல்யாணம் என சொல்ல இன்னும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு எழிலிடம் சம்மதம் கேட்க அவரும் சம்மதம் என சொல்லி கண்ணீருடன் எழுந்து செல்கிறார்.
பாக்கியா எழிலை கையை பிடித்து நிறுத்த எழில் வெளியே சென்று விடுகிறார். பிறகு ராமமூர்த்தி எது பண்ணாலும் நல்லதுக்காக தான் இருக்கும், என் மேல நம்பிக்கை வை இத பத்தி எதுவும் பேசாத என சொல்ல பாக்கியம் எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். அடுத்து ஈஸ்வரி ராமமூர்த்தி செழியன் என மூவரும் வர்ஷினியின் அப்பாவை சென்று சந்திக்கின்றனர்.கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிவிட்டதாக சொல்ல அவர் பணத்துக்காக சம்மதம் சொல்லலையே என கேட்க ராமமூர்த்தி எங்களுக்கு பணம் தேவை இருக்கிறது உண்மைதான், எழில் வேறு ஒரு பெண்ணை விரும்புனததும் உண்மைதான் அது எந்த மாற்றமும் இல்லை. ஆனா அவன் என்னைக்கும் பையன், பேரன் என்ற கடமையிலிருந்து பின் வாங்கியது இல்லை அதே மாதிரி ஒரு புருஷன் ஆகவும் நல்லபடியா நடந்துக்குவான் என வாக்கு கொடுக்கிறார்.
இதனால் அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம் வைக்க பேசி முடிக்கின்றனர். இந்த பக்கம் கேள்வி அமிர்தாவை சந்திக்க வந்திருக்க அவரைப் பார்த்ததும் கண் கலங்கி அழ பாட்டி என்னை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களா என கேட்க எழில் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…