அப்பாவை பார்த்தவுடன் பதற்றமான கோபி.. பாக்கியாவிற்கு ஏற்பட்ட சந்தேகம்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எல்லோரும் சாப்பிட அமர அப்போது அந்த எழில் பாட்டி சாப்பிட்டாங்களா என கேட்க இல்லை என கூறுகிறார் பாக்கியா. பிறகு நான் பாட்டியை கூட்டிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ஈஸ்வரியை கூப்பிட செல்கிறார். ஈஸ்வரி மற்றும் ஜெனி ஆகியோர் சாப்பிட வந்து அமர்ந்து விடுகின்றனர் எழில் இன்னும் வராததால் அவர் எங்கே என கேட்கின்றனர்.

தாத்தாவை கூட்டீட்டு வரான் ஜெனி சொன்னதும் கோபி அதிர்ச்சி அடைகிறார். அதற்கேற்றாற்போல எழிலும் அவருடைய தாத்தாவை கூட்டிவந்து கோபிக்கு எதிரில் உட்கார வைக்கிறார். அப்பாவின் முகத்தைப் பார்த்ததும் பதற்றமான கோபி வேகவேகமாக சாப்பிட்டு அங்கிருந்து எழுந்து ஓட முயற்சி செய்கிறார். இதை கவனித்த அவருடைய அப்பா சத்தம் போடுகிறார். முக்கியமான ஆபீஸ் கால் பேச வேண்டியிருக்கு என எழுந்து ஓடி விடுகிறார் கோபி. இதை கவனித்த பாக்கியா அவரைப் பார்த்தாலே மாமாவின் முகம் மாறிவிடுகிறது. அவரும் மாமாவை பார்த்தால் பதற்றம் ஆகிவிடுகிறார் என்னவாக இருக்கும் என யோசிக்கிறார். ‌‌

பிறகு ரூமுக்குள் கோபி இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் ராதிகா போன் செய்து நாளைக்கு லாயரை சென்று சந்திக்க வேண்டும் உங்களுடைய வைஃப் கிட்ட வாங்கிட்டீங்களா என கேட்கிறார். கோபி பதட்டத்தில் தடுமாறி எதை எதையோ பேச நீங்க இத பத்தி கேட்டாலே அமைதியாக இருக்க உங்கள போர்ஸ் பண்றனா என கேட்கிறார் ராதிகா. அதெல்லாம் ஒன்னும் இல்லை நாளைக்கு நானே வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கிட்டு வக்கீலை பார்க்கலாம் என சொல்கிறார் கோபி. பிறகு விவாகரத்து நோட்டீஸ் எப்படி கையெழுத்து வாங்குவது என யோசித்துக் கொண்டிருக்கிறார். திடீரென பாக்கியா உள்ளே வந்ததும் அவரிடம் இதில் ஒரே கையெழுத்து வேண்டுமென கேட்க இது என்னது என அவர் கேட்க விவாகரத்து நோட்டீஸ் என சொன்னதும் அதிர்ச்சியாக பாக்கியா காபி கப்பை கீழே போட்டு உடைக்கிறார். ஆனால் கடைசியில் இது கோபியின் நினைப்பு என தெரிகிறது.

அதன் பின்னர் உண்மையாகவே அவர் விவாகரத்து நோட்டீஸ் கையில் வைத்துக் கொண்டிருக்க அப்போது பாக்கியா உள்ளே வருகிறார். தண்ணீர் பாட்டிலையும் அவரது சட்டைகளையும் வைத்துவிட்டு வேறு ஏதாவது வேண்டும் என்று கேட்க எதுவும் வேண்டாம் என சொல்லி விடுகிறார் கோபி. பிறகு வெளியே போன பாக்கியாவை மீண்டும் அவர் கூப்பிட உள்ளே வந்த பாக்கியா என்ன சொல்லுங்க என கேட்கிறார். விவாகரத்து பேப்பரை பின்னாடி மறைக்க என்னது அது பின்னாடி பின்னாடி கையெழுத்திட்டு பாருங்க என பாக்கியா கேட்க பிறகு ஒரு வழியாக ஒரு கையெழுத்து வேண்டும் என கேட்கிறார்.

எதில் கையெழுத்திட வேண்டும் என பாக்கியா திரும்ப கேட்க நான் சொன்னா போட மாட்டியா என கோபி கேட்கிறார். எதுக்குனு கேட்கல எதுல போடணும் தான் கேட்டேன் என பாக்கியா சொல்கிறார். பிறகு இதுல தான் என கோபி விவாகரத்து பேப்பரை கையில் கொடுக்கிறார். அதை வாங்கி பார்த்துவிட்டு கோபியை பார்க்க கோபி அதிர்ச்சியாகி என்ன பாக்கியா என கேட்கிறார்.

உடனே பாக்கியா வெகுளித்தனமாக எங்க கையெழுத்துப் போடணும் ன்னு தெரியல என சொன்னதும் கோபி கை காட்டும் இடத்தில் கையெழுத்து போடுகிறார். ஒரு பக்கமாக பாக்கியா விடும் கையெழுத்து வாங்க கோபிக்கு ஒரு பக்கம் பதற்றமும் ஒரு பக்கம் சந்தோஷம் ஏற்படுகிறது. கையெழுத்துப் போட்டு முடித்த பாக்யா இந்தாங்க என அதை கொடுக்க கோபி வாங்கிக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 18.01.22
jothika lakshu

Recent Posts

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

5 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

5 hours ago

மங்காத்தா மற்றும் கோர்ட் படங்களில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது? பிரேம்ஜியின் பதிலால் அதிரிய அரங்கம்..!

மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…

5 hours ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள்.. பயத்தில் நடுங்கிய ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

விஜயா கேட்ட கேள்வி, வக்கீல் கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…

6 hours ago

Othaiyadi Video Song

https://youtu.be/xIuY5dk5Ug0?si=a9xZXKUGKeZv8lui

1 day ago