ஹேமா பற்றிய உண்மையை சொல்லப்போகும் கண்ணம்மாவால் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. அப்பா வருகிறார் என்பதால் தெருவில் பெரிய கோலம் போட்டு வெல்கம் அப்பா எழுதி உள்ள லட்சுமி. இவருடைய கோலத்தைப் பார்த்த எல்லோரும் பாராட்டுகின்றனர். இந்த நேரத்தில் அந்த வழியாக வரும் காரை எல்லாம் பார்த்து அப்பா வந்துட்டாரு அப்பா வந்துட்டாரு என ஏமாந்து போகிறார் லட்சுமி. பிறகு கண்ணம்மாவின் அப்பா காரில் வந்து இறங்கிய அவரை பார்த்துவிட்டு உள்ளே ஓடி விடுகிறார்.

பிறகு கண்ணனா அவருடைய அப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு நீங்க உள்ள போயிருங்க அப்பா நான் வெளியே போய்விட்டு வருகிறேன் என சொல்கிறார். பிறகு லஷ்மியை பர்ஸ் எடுத்துட்டு வரச் சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். இந்த பக்கம் சௌந்தர்யா அவருடைய கணவர் மற்றும் அகிலன் ஆகியோரின் பாரதி எப்படி கண்ணமா பிறந்த நாள் விழாவுக்கு வருவான் என்ற நம்பிக்கையில் கண்ணம்மா இப்படி வாக்கு கொடுத்தானு தெரியல என பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கண்ணம்மா வருகிறார்.

அவருடைய மாமனார் மாமியார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி விட்டு பாரதி இல்லையா எனக் கேட்க சௌந்தர்யா அவனை எதுக்கு கேட்கிற என கேட்கிறார். பிறந்தநாள் விழாவுக்கு கூப்பிடத்தான் என கண்ணம்மா கூறுகிறார். அதான் நீ கூப்பிடு அவன் வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க திரும்பவும் எதுக்கு கூப்பிட போற என கேட்கிறார். இல்ல அவரு கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்ன சொல்கிறார். லட்சுமி விட அப்பா யாரென்று சொல்ல போறேன்னு அவனுக்குத்தான் தெரியும் என சொல்ல அது இல்ல வேற ஒரு விஷயம் சொல்லப் போறேன் என கூறுகிறார். அது அவருக்கு புதுசு தான் என கூறுகிறார்.

அப்படி என்ன சர்ப்ரைஸ் என சௌந்தர்யா கேட்க அது சர்ப்ரைசாகவே இருக்கட்டும் நீங்களும் அங்கு வந்து பார்த்து தெரிஞ்சுக்கங்க என கூறியிருக்கிறார். பிறகு அகிலன் இடம் பாரதி எங்கே எனக் கேட்க அவன் ஹாஸ்பிடல் போய் இருக்கான் என சொல்கிறார். சரி நான் அங்கேயே போய் பார்த்துக்கிறேன் என கூறுகிறார்.

இந்த பக்கம் மருத்துவமனையில் பாரதி ஹேமா ஹைதராபாத் வரலைனு சொல்லிட்டாள் என ஃப்ளைட் டிக்கெட்டை கிழித்து போட அந்த நேரத்தில் வெண்பா உள்ளே வருகிறார். என்ன கிழிச்சி போட்டுட்டு இருக்க பாரதி என சொல்ல ஃப்லைட் டிக்கெட் என கூறுகிறார். ஹேமா வர மாட்டேன்னு சொல்லிட்டா என்ன சொல்லு நீ மட்டும் போக வேண்டியதுதானே என வெண்பா கூறுகிறார். ஹேமா இல்லாம நான் மட்டும் எப்படி போறது அவ இல்லாம என்னால போக முடியாது என கூறுகிறார். பிறகு நீ இங்க இருந்தா உன்ன எப்படி ஆச்சு எமோஷனலாக பேசி அந்த பர்த்டே ஃபங்ஷனுக்கு கூட்டிட்டு போயிட்டு வாங்க. கொஞ்சம் நினைச்சுப் பாரு அவ்வளவு நிறைய கூட்டத்துல கண்ணம்மா லட்சுமி அப்பா இவர்தான் என உன்னை கை காட்டுவா என கூறுகிறார். ஈசிஆரில் என் பிரண்டோட ரிசாட் இருக்கு அங்க ரூம் போட சொல்றேன் நீ போயிடு என கூறுகிறார். நான் சொல்றத சொல்லிட்டேன் யோசிச்சிக்க என கூறுகிறார். ‌‌

இந்த பக்கம் லட்சுமி அவருடைய தாத்தாவை நிற்க வைத்து எங்க அம்மாவை உங்களுக்கு எவ்வளவு நாளாக தெரியும் அப்போ அவளோட கல்யாணத்துக்கு நீங்க வந்திருப்பீங்க தானே எங்கப்பா எப்படி இருப்பார் சொல்லுங்க என்று கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறி அவர் ஒரு வழியாக லட்சுமியை ஏதோ ஒன்றை சொல்லி சமாளிக்கிறார். பிறகு ஒரு நாளைக்கு என்னால முடியல கண்ணம்மா இவளை எப்படி தான் சமாளிக்கிறாளோ என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Bharathi Kannamma Serial Episode Update 18.02.22
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

2 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

2 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

2 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

2 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

2 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

2 days ago