Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண்ணனை வெளுத்து வாங்கும் ஐஸ்வர்யா.. பாக்கியாவிடம் நக்கலாக பேசிய கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

baakiyalakshmi serial episode update 17-10-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலுடன் மெகா சங்கமம் என்ற பெயரில் ஒரு மணி நேரம் எபிசொட் ஆக ஒளிபரப்பாகி வருகிறது.

இன்றைய எபிசோடில் பாக்கியா பாட்டு பாட எல்லோரும் கைதட்ட முதலில் காதை பற்றிய கோபி பிறகு பாக்யாவின் அழகிய குரலில் பாடலைக் கேட்டு மெய் மறந்து கைதட்ட ராதிகா அங்கிருந்து கோபித்துக் கொண்டு எழுந்து செல்கிறார். அதன் பிறகு கண்ணன் ஐஸ்வர்யா எழில் மற்றும் இனியா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கண்ணன் ரொம்ப குளிருது, ஒயின் எதாவது கிடைக்குமா என எழிலிடம் கேட்க இதை ஒட்டு கேட்கும் ஐஸ்வர்யா எனக்கும் கொடுங்க எனக்கு கேட்க கண்ணன் சூப்பர் பொண்டாட்டி என பாராட்ட கடைசியில் ஐஸ்வர்யா கண்ணனை வெளுத்து வாங்குகிறார்.

இன்னொரு பக்கம் மீனா ஜீவாவை கடைக்கு போக வேண்டாம் கூடவே இரு என சொல்ல ஜீவா கடை திறக்கணும் என கிளம்பி விடுகிறார். அந்தப் பக்கம் கதிர் ஹோட்டலில் இருந்து சாப்பாடு எடுத்து வர முல்லை பேப்பரில் ஒரு சமையல் போட்டி நடப்பதை காட்டி நாம அந்த போட்டியில் கலந்து கொள்ளலாம் என கூற கதிர் வேண்டாம் என சொல்ல முல்லை கலந்து கொள்ள வேண்டும் என அடம் பிடிக்கிறார்.

அதன் பிறகு ராமமூர்த்தி ரூமில் இருக்க அங்கு வரும் மூர்த்தி கோபி பற்றி பேச ராமமூர்த்தி நன்றாக திட்டியிருக்கிறார். அவன் நல்லாவே இருக்க மாட்டான் என சாபம் விடுகிறார். பின்னர் பாக்யாவும் தனமும் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென தனம் ரூமுக்குள் செல்ல அந்த நேரத்தில் வரும் கோபி பாக்யாவை சொடக்கு போட்டு கூட்டிட்டு நக்கலாக பேச பாக்கியா அமைதியாகவே இருக்க அன்பு வரும் தனம் கோபிக்கு பதிலடி கொடுத்து அனுப்புகிறார்.

பிறகு எல்லோரும் போட்டிங் போக கண்ணன் ராமமூர்த்தி மட்டும் போகாமல் நின்று விடுகின்றனர். இவர்கள் குடும்பத்தோடு ஜாலியாக போட்டிங் போய் இருக்க இந்த பக்கம் ராதிகாவும் கோபியும் போட்டிங் போக தயாராக இருக்க இவர்களை பார்த்த கண்ணன் நாமளும் போட்டிங் போகலாம் என சொல்லி டிக்கெட் வாங்கி வந்து கோபி மற்றும் ராதிகா போகும் போட்டில் ஏறி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கின்றனர்‌. இருவரும் பாட்டு பாடி அவர்களை வெறுப்பேத்துகின்றனர். கோபிக்கு பிபி ஏற இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோடு முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 17-10-22
baakiyalakshmi serial episode update 17-10-22