Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியா கேட்ட கேள்வி, செல்வி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

BaakiyaLakshmi serial episode update 17-07-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹோட்டலில் பாக்யா செல்வி ஆகாஷ் வேலை செய்து கொண்டிருக்க செல்வி ஆகாஷ் இடம் எக்ஸாமுக்கு படிக்கல என்று சொல்ல அதெல்லாம் படிச்சிட்டேன்மா என்று சொல்லுகிறார் பாக்யாவும் என்ன எக்ஸாம் என்று கேட்க மாடல் எக்ஸாம் என்று சொல்ல நீ போய் படி ஆகாஷ் என்று சொல்லியும் அதெல்லாம் படிச்சிட்டேன் என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் இனியா வந்து உட்கார என்ன இனியா வேலை எப்படி போச்சு என்று கேட்க நல்லா தான் போச்சு உனக்கு எப்படி இருக்கு என்று கேட்கிறார் பிறகு ஆடர் பற்றி பேசிக்கொண்டிருக்க பாக்யா அவருக்கு போன் போட்டு நீங்க அட்வான்ஸ் கொடுத்தீர்கள் என்றால் வேலைக்கு ஆரம்பிக்கலாம் என்று கேட்க நான் வெளிய வந்துட்டேன் நீங்க கொடுத்த அட்வான்ஸ் வெச்சு பண்ணுங்க நான் அப்புறம் கொடுக்கிறேன் என்று சொன்ன பாக்யா நீங்க அட்வான்ஸ் கொடுத்தா செய்யறேன்னு எல்லாம் வேணாம் என உறுதியாக சொல்லிவிடுகிறார்.

வேறு வழி இல்லாமல் அவரும் காலையில் வருகிறேன் என சொல்லிவிட்டு ஃபோனை வைக்க, மறுநாள் காலையில் கோபி ஹோட்டலுக்கு வருகிறார். செல்வி வேலை பார்த்துக் கொண்டிருக்க பாக்கியா இல்லையா செல்வி என்று கேட்க அக்கா கடைக்கு போய் இருக்கு என்று சொன்னவுடன் எனக்கு ஒரு காபி கிடைக்குமா என்று சொல்ல செல்வி போட்டுட்டு வர சார் என்று சொல்லுகிறார். பாக்யா மளிகை சாமான் வாங்கிக் கொண்டு வந்து செல்வியிடம் கொடுத்துவிட்டு அட்வான்ஸ் கொடுக்க வந்தாரா என்று கேட்க இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அவர் வருகிறார்

வந்த வேகத்தில் என்ன இப்படி பண்ணிக்கிட்டு இருக்கீங்க ஒரு நம்பிக்கை இல்லாம பேசுறீங்க இன்னும் எவ்வளவு பணம் கொடுக்கிறது என்று கேட்க நான் அட்வான்ஸ் தானே சார் கேட்டோம் என்று சொல்லுகிறார் நானும் அட்வான்ஸ் பத்தி தான் சொல்றேன் நீங்க 6 அரை லட்சம் என்று சொன்னீங்க ஆனா அதுல பாதி மூணே கால் லட்சம் தானே ஆனால் நான் அஞ்சு லட்சம் கொடுத்து இருக்கேன் என்று சொன்ன பாக்யா மற்றும் செல்வி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நீங்க அம்பதாயிரம் தான் கொடுத்தீங்க என்று சொன்ன இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பாக்யா நீங்க கொடுத்த ஐம்பதாயிரம் இங்க தான் இருக்கு எடுத்துக்கிட்டு போங்க என்று சொல்ல என்னை ஏமாத்த பார்க்கிறீர்களா என்று சொல்லுகிறார். கோபி சொல்லியும் கேட்காமல் இருந்த அந்த பாக்யாவிடம்அஞ்சு லட்சத்தை கொடுத்திடுங்க நான் போய்கிட்டு இருக்கேன் என சொல்லுகிறார்.

நீங்க அம்பதாயிரம் கொடுத்தீங்க இந்த அம்பதாயிரம் வாங்கிக்கோங்க என்று சொல்ல நான் போய் போலீஸ் கூட்டிட்டு வரேன் என்று சொல்லி போய் கொஞ்ச நேரத்தில் போலீசுடன் வருகிறார். அவர்கள் வந்து விசாரிக்காக பாக்யா ஐம்பதாயிரம் தான் கொடுத்தேன் என சொல்ல இவர் ஐந்து லட்சம் கொடுத்ததாக சொல்லுகிறார் ஏதாவது ரெசிப்ட் கொடுத்து இருக்கீங்களா என்று கேட்க அதெல்லாம் எதுவும் கொடுக்கல என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் எழில் மற்றும் செழியன் வர என்ன கேட்கின்றனர்?அதற்கு பாக்யாவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi serial episode update 17-07-25