தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வி ஆகாஷ் ஹாஸ்பிடல் இருக்க பாக்யா வருகிறார். உங்க ரெண்டு பேருக்கும் சாப்பிட சாப்பாடு எடுத்துட்டு வந்து இருக்கேன் சாப்பிடுங்க என்று கூற நீ எதுக்குகா இதெல்லாம் எடுத்துக்கிட்டு வரேன் என்று கேட்கிறார். இருக்கட்டும் செல்வி சாப்பிடுங்க என்று சொல்ல பிறகு பாக்யா ஆகாஷை நலம் விசாரிக்கிறார் கொஞ்ச நேரம் கழித்து செல்வி ரெண்டு நாள் கழிச்சு அவனுக்கு எக்ஸாம் இருக்கு இந்த கைய வச்சுக்கிட்டு எப்படி எழுத போறான்னு தெரியல என்று ஆழ அதெல்லாம் ஒன்னும் இல்ல சொல்லி எழுதலாம் என்று சொல்லுகிறார்.
என்ன இருந்தாலும் என் பையன் தப்பு பண்ணி இருக்கா ஆனா இந்த மாதிரி கைய உடைக்கிற அளவுக்கு அடிப்பாங்க என்று சொல்லி அழ அதற்கு பாக்யா செழியன் இந்த அளவுக்கு போவானு நானும் நினைக்கல செல்வி என்று சொல்லுகிறார். நீ என்னகா பண்ண முடியும் அவங்க கிட்ட போய் சண்டைதான் போட்டிருப்பேன் வேற என்ன சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டு நீயும் பாவம் தான்கா என்று சொல்லுகிறார். கொஞ்ச நேரத்தில் ஸ்கேன் எடுப்பதற்கு காசு கட்டணம்னு சொன்னீங்களே கட்டிட்டிங்களா என்று கேட்க கட்டி விடுகிறோம் என செல்வி சொல்லுகிறார் உடனே பாக்யா நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல,அதற்கு காசு கொடுக்க முதலில் செல்வி வேண்டாம் என சொல்லுகிறார் பிறகு பாக்யா டிஸ்சார்ஜ் செய்ற வரைக்கும் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி பணத்தை செல்வி இடம் கொடுக்கிறார் இதுக்கு அப்புறம் வேணும்னாலும் சொல்லு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
மறுபக்கம் ஜெனி கிச்சனில் இருக்க அமிர்தா டைனிங் டேபிளில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா ஜெனி என்று கேட்க வேண்டாம் முடிஞ்சிடுச்சு நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லுகிறார் நான் உங்ககிட்ட ஒன்னு கேக்குறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல கேளுங்க என்று சொல்லுகிறார். நான் வரத்துக்கு முன்னாடி இருந்து நீங்க இந்த வீட்ல இருக்கீங்க அம்மா எப்பவுமே நியாயமா பேசுவாங்கன்னு உங்களுக்கு தெரியாதா அப்புறம் எதுக்கு நீங்க புரிஞ்சுக்காம அப்படி பேசினீங்க என்று கேட்கிறார்.
அதற்கு ஜெனி நான் யார் மேலயும் எந்த கோபமோ வன்மமோ கிடையாது நான் இனியா விஷயமோ ஆகாஷ் விஷயத்த பத்தி பேசினது நான் தப்பு சொல்லல அவங்க அவ்ளோ பேர் முன்னாடி செழியன் அடித்ததுக்காக மட்டும்தான் நான் கேட்டேன் இதை எழில அடிச்சிருந்தா நீங்க சும்மா இருந்திருப்பீங்களா என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி வந்துவிடுகிறார் என்ன ஆச்சு ஜெனி என்று கேட்க இல்ல ஆன்ட்டியை எதுக்கு பேசியத பத்தி கேட்டுக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல உடனே ஈஸ்வரி அமிர்தா மீது கோபப்படுகிறார். ஏன் எப்ப பார்த்தாலும் அவளுக்கே சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கணுமா அவ வந்து உன் கிட்ட சொன்னாளா என்ன ஜெனி இந்த மாதிரி பேசினாலே நீ என்ன பாக்கியவோட வக்கீலா உன்னை இந்த வீட்டுக்கு கொண்டு வந்த மாதிரி ஒன்னும் இல்லாதவங்கள எல்லாம் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு நினைக்கிற என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்க பாக்யா வந்து நிற்கிறார் என்ன பிரச்சனை என்று கேட்க ஜெனியோ அமிர்தாவும் சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க என்று சொல்லுகிறார் அதுவும் உன்னால தான் இவங்க தான் இந்த வீட்டில் சண்டை போடாம இருந்தாங்க இப்ப இவங்களும் சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க நீ எங்க போயிட்டு வர ரெஸ்டாரண்டுக்கு ஹாஸ்பிடல் காமி ஹாஸ்பிடல் போயிட்டு வருவ நீ ஓவரா ஆடிட்டு இருக்க எவ்வளவு ஆர்டர் என்னால தான் இந்த வீடு குட்டி சுவரா போய்கிட்டு இருக்கு என்று திட்டிவிட்டு சென்று விடுகிறார்.
அமிர்தா பாக்கியாவிடம் சாரிமா என்னால தான் இந்த பிரச்சனை நான் எதுவுமே தப்பா கேக்கல எதுக்கு அம்மாகிட்ட எப்படி பேசினீங்கன்னு தான் கேட்டேன் அதுக்கு ஜெனியும் பொறுமையா தான் பதில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க ஆனா அதுக்குள்ள பாட்டி தான் வந்து பேசிட்டாங்க என்று சொல்ல எதையுமே கொஞ்ச நாளைக்கு கண்டுக்காத அமிர்த அமைதியாக விடு என்று சொல்லுகிறார். மறுபக்கம் எழில் மற்றும் பாக்யா இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்க அவர் வந்து வீட்டுக்கு வந்துருன்னு சொல்லும்போது நான் ஒரு வேலை விஷயமா டென்ஷன்ல இருந்தமா உன்கிட்ட நான் ஒரு வார்த்தை கேட்டு இருக்கணும் கேட்க முடியல என்று சொல்லி வருத்தப்படுகிறார். உங்க அப்பா அவரா ஒரு முடிவு எடுத்து அவரை எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்காரு என்று சொல்லி பேசிக்கொண்டிருக்க சரி கிச்சனுக்கு தண்ணீர் எடுக்க வருகிறார். அப்போது எழில் அவரை தடுத்து நிறுத்தி இந்த பிரச்சனையை பேசிட்டு இருக்கலாம் என்று சொல்ல உடனே செழியன் கோபப்படுகிறார் அவனுக்கு நம்மள பார்த்தா பயம் வரணும்னு தான் நாங்க இப்படி பண்ணிக்கிட்டு இருக்கோம் ஆனா நீயும் அம்மாவும் போய் அவனை அங்க பார்த்து பேசிட்டு வரீங்க அப்புறம் எப்படி அவனுக்கு பயம் இருக்கும் என்று சொல்ல எழில் கோபப்படுகிறார் நான் தானே பேசிக்கிட்டு இருக்கேன் என்கிட்ட பேசு அம்மா கிட்ட எதுக்கு போற என்று கேட்கிறார்.
அந்த நேரம் பார்த்து கோபியும் வந்துவிட வழக்கம்போல் செழியனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட இப்படியே பேசிக்கிட்டு இருந்தா உன்னையும் அடிக்க வேண்டியது இருக்கும் என்று செய்தி சொல்ல அடிச்சிடுவியா அடிச்சிடுவியா என்று இருவருக்கும் வாக்குவாதம் அதிகரிக்கிறது பிறகு சமாதானப்படுத்தி கோபி அழைத்து சென்றுவிட பாக்கியா என்னிடம் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் எழில் அமைதியாக இரு அவகளுக்கு எல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது என்று சொல்லிவிடுகிறார்.
மறுநாள் காலையில் கிச்சனில் பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்க இனியா மற்றும் எழில் இருவரும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர் செழியன் வந்து உட்காரு அவர் என்ன சொல்லுகிறார்? பாக்யாவின் பதில் என்ன? ஈஸ்வரி வந்து என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.