baakiyalakshmi serial episode update 17-01-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் கோபியுடன் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருந்த செழியன் மற்றும் எழிலை கூட்டி வரும் பாக்கியா அவர்களை உட்கார வைத்து திட்டி சாப்பிட வைக்கிறார். வாழ்க்கையில யாருக்குத்தான் பிரச்சனை இல்லை என திட்டுகிறார்.
அதனைத் தொடர்ந்து மறுபக்கம் மரியம் பிரேயர் செய்து கொண்டிருக்கிற ஜோசப்பும் நன்றி பிரேயர் செய்துவிட்டு ஜெனி எங்கே என கேட்க ஜெனி வெளியே வருகிறார். கோர்ட்டுக்கு போகணும் ரெடியா உன்ன பத்தி என்ன வேணாலும் சொல்லுவாங்க அத பத்தி வாங்கி கவலைப்படவோ பீல் பண்ணவே கூடாது இன்னைக்கு செழியனோட இன்னொரு முகத்தை பார்ப்ப என சொல்கிறார்.
டாடி எது செஞ்சாலும் அது உன்னுடைய நல்லதுக்காக தான் இருக்கும். நீ அந்த செழியனை விட்டு வெளியே வரணும் அப்பதான் உன் வாழ்க்கை நல்லா இருக்கும் என சொல்கிறார். மரியம் நானும் வரேன் என்று சொல்ல ஜோசப் வேண்டாம் நான் ஜெனி மட்டும் கூட்டிட்டு போயிட்டு வரேன் என சொல்லி விடுகிறார்.
அதை தொடர்ந்து இங்கே கோபி செழியனுடன் கோர்ட்டுக்கு போக தயாராக இருக்க செழியன் அம்மா மட்டும் போதும் நீங்க வேண்டாம் என சொல்லி விடுகிறார். இதனால் கோபி அப்செட் ஆகி ரூமுக்கு வர ராதிகா இதைத்தான் அன்னைக்கே சொன்னேன் இப்போ வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப் போவதில்லை என சொல்ல கோபி சட்டையை கழட்ட இப்போ எதுக்கு சட்டையை கழட்டுறீங்க என்று கேட்க அதை கோர்ட்டுக்கு போகவில்லை என்று சொல்ல ராதிகா ஆபீஸ்க்கு போகணுமே என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
பிறகு கோபி தன்னுடைய நண்பன் சதீஷை சந்தித்து வீட்டில் உண்மையை சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல, ஏதாவது ஒரு வேலை இருந்தா சொல்றா என்று கேட்க சதீஷ் இப்போ வேலை கிடைக்குதா இதெல்லாம் அவ்வளவு ஈஸி கிடையாது டா என்று கூறுகிறார். உனக்கு 30 வருட அனுபவம் தான் பிரச்சனை அதுவும் இல்லாம 40 வயசு ஆயிடுச்சு இப்ப யாரும் வேலை தர மாட்டாங்க என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…