விஜயா கொடுத்த ஷாக்.அதிர்ச்சியில் ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மனோஜ் கம்பெனி கம்பெனியாக வேலை தேடி ஏறி இறங்க ஒரு இடத்தில் கூட வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ரோகினி மூலம் வேலை கிடைத்து ஒரு வாரம் வேலை செய்த கம்பெனிக்கு திரும்பி வந்து வேலை கேட்க அங்கு எம்டியாக இருக்கும் பெண்மணி இப்பவும் இங்க லேடி தான் எம்டி. உனக்குத்தான் ஒரு பொம்பள கிட்ட கைகட்டி வேலை செய்ய பிடிக்காது என்று அவமானப்படுத்துகிறார். மனோஜ் நான் தெரியாம அப்படி பேசிட்டேன் இனி அப்படி நடந்துக்க மாட்டேன் என மன்னிப்பு கேட்க உன்னுடைய மன்னிப்பு எல்லாம் எனக்கு தேவையில்லை இப்பயும் நீ திருந்தி வந்து இருக்க வாய்ப்பு கிடையாது. உனக்கு வேற எங்கேயும் வேலை கிடைச்சிருக்காது அதனால நீ இங்க வந்து இருப்ப என சொல்கிறார். ரோகினி ஓட புருஷன் அதனால உனக்கு திரும்பவும் வேலை கொடுக்க முடியாது என வெளியே துரத்தி விடுகிறார்.

மறுபக்கம் ஸ்ருதி ரோகினியிடம் முத்து பேசினது பத்தி எல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க, மனோஜ் உடனே வேலைக்கு போகணும்னு என்ன அவசரம் அவருக்கு பிடித்த வேலைக்கு போகட்டும் அப்படி இல்லன்னா உங்களுடைய பியூட்டி பார்லர் அவருக்கு ஒரு போஸ்டிங் கிரியேட் பண்ணி கொடுங்க இன்னும் நிறைய பிரான்ச் ஓபன் பண்ணுங்க ரெண்டு பேரும் சேர்த்து இதே பிசினஸ் பாருங்க என சொல்கிறார். உங்களுக்கு என்ன பணமா பிரச்சனை? உங்க அப்பா கிட்ட கேட்டா எவ்வளவு வேணாலும் தரப் போறாரு என்று சொல்லிக் கொண்டிருக்க இதை ஓட்டு கேட்கும் விதியா ரூமுக்குள் ஓடி வந்து சரியா சொன்னமா ஸ்ருதி என ‌சொல்கிறார்.

ரோகிணி அப்பாகிட்ட எல்லாம் பணம் கேட்க முடியாது என்று சொல்ல சுருதி அப்படின்னா உங்க மாமா கிட்ட கேளுங்க அவர் என்ன பண்ண மாட்டேன் நான் சொல்ல போறாரு மனோஜ்க்கு ஒரு கார் ஷோரூம் வச்சு கொடுங்க என்று கொளுத்தி போட விஜயா இதுவும் நல்ல ஐடியா தான் எங்க அப்பா கிட்ட பேசி என்ன கூறுகிறார். ரோகினி மனோஜ்க்கு வேலை கிடைக்கலனா நான் தான் சிக்குவேன் போல என்று மனோஜ்க்கு போன் போட்டு வேலை கிடைச்சிடுச்சா என்ன ஆச்சு என்று கேட்க மனோஜ் வேலை கிடைக்கல தேடிக்கிட்டு இருக்கேன் கண்டிப்பா கிடைச்சுடும் என போனை வைக்கிறார்.

அடுத்ததாக இங்கே வீட்டில் ஸ்ருதியும் ரோகினியும் முத்து பற்றி பேச அதைக் கேட்ட மீனா அவர்களிடம் வாக்குவாதம் செய்கிறார். உடனே உள்ளே வந்த விஜயா நீ என்ன சத்தம் போட்டு கேட்டுகிட்டு இருக்க என திட்ட இவங்க எதுக்கு என் புருஷனை தரவா பேசணும் என கேள்வி கேட்க விஜயா உன் புருஷன் டிரைவர் வேலை தானே செய்கிறான் டிரைவர் டிரைவர்னு தானே சொல்லுவாங்க என கூறுகிறார்.

அண்ணாமலை முத்து இருவரும் டிரைவர் வேலை செய்ததையும் செய்வதையும் விஜயா தரக்குறைவாக பேச இந்த நேரம் பார்த்து இருவரும் வீட்டிற்குள் வருகின்றனர். முத்து விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார். அதன் பிறகு மனோஜ் வேலையில்லாமல் வீட்டுக்கு வர விஜயாவும் ரோகிணியும் சரி நாளைக்கு பாத்துக்கலாம் என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க அப்போது கையில் அல்வாவுடன் வரும் முத்து மீனாவை கூப்பிட்டு உனக்காகத்தான் அல்வா வாங்கிட்டு வந்தேன் அதுவும் திருநெல்வேலி அல்வா செல்வம் திருநெல்வேலி போயிருந்தான், அதான் வாங்கிட்டு வர சொன்னேன் காசு போட்டு வாங்கிட்டு வர சொன்னேன் என மனோஜ் வெறுப்பேற்றிருக்கிறார். நான் சம்பாதிச்சு காசுல அல்வா வாங்கிட்டு வந்து தரேன் நீ வேலைக்கு போகாம அல்வா கொடுத்திருக்க என அவமானப்படுத்துகிறார்.

அடுத்து ஸ்ருதியின் அம்மா விஜயாவுக்கு போன் போட்டு நாளைக்கு சீர் கொண்டு வருவதாக சொல்கிறார். அதேபோல் மறுநாள் காலையில் சண்டி மேளத்துடன் சீர் கொண்டு வருகிறார். ஸ்ருதிக்காக வைர நெக்லஸ் எடுத்து வந்து கொடுக்க அதை பார்த்த விஜயா வாயை பிளக்கிறார். விஜயாவுக்கு பட்டுப் புடவை, அண்ணாமலைக்கு பட்டு வேஷ்டி, பட்டு சட்டை கொடுக்க பூரித்து போகிறார் விஜயா. ரோகினி இதே எதிர்பார்ப்பு பார்த்து அப்படியே நம்ம பக்கம் திரும்பும் என பதறுகிறார்.

ஸ்ருதியின் அம்மா இருக்கும்போது மீனாவின் அம்மா மீனாவுக்காக பொங்கல் சீர் கொண்டு வந்து கொடுக்க அண்ணாமலை உட்காருங்கள் என்று சொல்ல ஸ்ருதியின் அம்மா பக்கத்தில் உட்கார அவர் நான் கிளம்புறேன் வேலை இருக்கு என்று கிளம்பி விடுகிறார். விஜயா நீங்க எதுக்கு இப்ப வந்தீங்க உங்களால தான் அவங்க கிளம்பி போயிட்டாங்க என்று மீனாவின் அம்மாவிடம் சண்டை போட அண்ணாமலை அவங்க சொல்லிட்டு தான் வந்தாங்க என்று விஜயாவை அடக்குகிறார்.

மனோஜ் விஜயாவுக்கு ஆதரவாக பேச முத்து எனக்கு ஒரு தட்டாவது வந்தது உனக்கு அது கூட வரலையே என ரோகிணியை இழுத்து விட அதிர்ச்சி அடைந்து உள்ளே ஓடி விடுகிறார். பிறகு விஜயா ரோகினியிடம் உன் அப்பா வந்தார்னா தான் இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு வரும் என்று சொல்ல ரோகிணி எனக்கு ஸ்ருதி மீனாவோட அம்மாவ பார்த்ததும் என்னுடைய அம்மா ஞாபகம் வந்திருச்சு என அழுது டிராக்கை மாற்ற முயற்சி செய்ய விஜயா உன் அப்பாவ வர சொல்லு அப்படி இல்லன்னா உன் மாமாவையாவது வர சொல்லு, நான் சீருக்காக சொல்லல உன்னுடைய கௌரவத்துக்காக சொன்னேன் என செக்மேட் வைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 17-01-24
jothika lakshu

Recent Posts

Sigma Official Trailer

Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S

2 days ago

Dorothy Official Trailer

Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja

2 days ago

சண்டக்காரி திரைவிமர்சனம்

லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…

2 days ago

சிக்மா இசை வெளியீட்டு விழாவில் அப்பா விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…

2 days ago

ஊர் வாயை அடைக்க முடியாது… உங்கள் இலக்கை நோக்கி செல்லுங்கள்! – அட்லீ

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…

2 days ago

முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்த விஜய் சேதுபதி!

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…

2 days ago