Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபி ராதிகாவை கடுப்பேற்றிய கண்ணன்.. ரொமான்ஸ் செய்யும் ஜீவா மற்றும் மீனா.. இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

baakiyalakshmi serial episode update 15-10-22

இன்றைய எபிசோடில் கோபியின் ரூமை பார்த்ததும் ஐஸ்வர்யா எனக்கு அவர் மேல கோபம் கோபமா வருது, ஏதாவது பண்ணனும் என திட்டம் போட்டு ரூமுக்குள் சென்று ரூம் மாறி வந்து விட்டது போல டிராமா போட்டு கோபியையும் ராதிகாவையும் வெறுப்பேத்துகின்றனர். கோபி டென்ஷனாக அதன் பிறகு ரூம் மாறி வந்துவிட்டோம் என சமாளித்து வெளியே வந்து விடுகின்றனர். ராதிகா டிவி ரிமோட்டை தூக்கி போட்டு உடைக்கிறார். பிறகு வழக்கம் போல கோபி ராதிகாவை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்.

இந்த பக்கம் ஜீவாவை மீனாவும் வீட்டில் ஒன்றாக சாப்பிட்டு ரொமான்ஸ் செய்ய தொடங்க கயல் பாப்பா அழுது அதை கெடுத்து விடுகிறது. பிறகு இந்த பக்கம் எல்லோரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என சந்தோஷமாக இருக்கின்றனர். எழிலும் கண்ணனும் ஒரு பாட்டுக்கு நடனமாடி தொடங்கி வைக்க பிறகு மூர்த்தி, தனம், ஐஸ்வர்யா செல்வி மற்றும் இனியா என எல்லோரும் நடனம் ஆடுகின்றனர்.

அடுத்து முல்லை ஹோட்டலில் நல்ல லாபம் வந்து இருப்பதை பார்த்து சந்தோஷப்பட்டு அந்த மல்லியை வெறுப்பேத்தணும் அவள போய் நான் பாத்துட்டு வரேன் என சொல்ல கதிர் அவங்க தான் மதுரைக்கு போயிட்டாங்களே என சொல்ல ஆமால என முல்லை நினைத்து பார்க்கிறார். பிறகு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சீக்கிரம் நம்ப கார் வாங்கணும் மல்லி வீட்டுக்கு போய் கார்ல இறங்கணும் நம்ம ஹோட்டல் நிறைய இடத்துல தொடங்கணும் என தனது ஆசைகளை சொல்ல பிறகு இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர்.

இந்த பக்கம் கோபி ராதிகாவை வா நம்ப வெளியில போயிட்டு வரலாம் என அழைக்க முதலில் வரவில்லை என சொல்லும் ராதிகா பிறகு கோபியின் வற்புறுத்ததால் வெளியே வர பாக்கியலட்சுமி குடும்பத்தார் ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாக இருக்க அங்கே போகலாம் என ராதிகா கோபியை அழைத்து வந்து உட்காருகிறார். முதலில் எல்லோரும் கோபப்பட பிறகு அமைதியாக பாட்டுப் போட்டி நடக்கிறது.

கோபிநாத் அப்பா பாடல் வரிகளை மாற்றி கோபியை திட்டுவது போல பாட்டு பாட அவர் இங்கிருந்து எழுந்து சென்றுவிடலாம் என சொல்ல ராதிகா என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் என இங்கேயே உட்கார்ந்திருக்கிறார். பிறகு பாக்யாவை பாட்டு பாட சொல்கின்றனர். பாக்யாவும் மைக் வாங்க கோபி தலையில் அடித்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 15-10-22
baakiyalakshmi serial episode update 15-10-22