Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபிக்கு பாக்கியா கொடுத்த தரமான பதிலடி.. கோபியின் அப்பா சொன்ன வார்த்தை.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 15-08-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவிடம் உனக்கு அப்பா வேணுமா அம்மா வேணுமா யாருடன் இருக்க ஆசைப்படுற என கேட்க என்னம்மா இப்படி எல்லாம் கேட்கிற என இனியா அதிர்ச்சடைகிறார். இதைக் கேட்க கஷ்டமாகத்தான் இருக்கும் ஆனால் கேட்டாக தான் வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் என்ன கொண்டு வந்து நிறுத்திட்டாங்க எனக்கு வேற வழி தெரியல என கூறுகிறார். நீ என் கூட தான் இருக்கணும்னு சொல்ல மாட்டேன். என் கூட இருக்கணும்னு எனக்கும் ஆசை இருக்கு ஆனால் உன்னுடைய விருப்பம் தான் கடைசி முடிவு. நீ உன் அப்பாவோட இருக்க ஆசைப்பட்டாலும் அதற்கு நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஏற்றுக்கொள்வேன். அதற்காக நான் என்னுடைய அம்மா என்ற கடமையிலிருந்து ஒருபோதும் தவற மாட்டேன் என கூறுகிறார்.

ஈஸ்வரி போதும் நிறுத்து பாக்கியா இப்படி சின்ன குழந்தை கிட்ட கேட்டா அவ மனசு என்ன கஷ்டப்படும். இது அவ மனசுல ஆறாத வடுவா மாறிடும். நான் இந்த வீட்டில எல்லோரும் ஒண்ணா இருக்கணும் தான் இதுவரைக்கும் பேசிக்கிட்டு இருக்கேன். கோபி பண்ணது தப்புதான் நான் அதை இல்லன்னு சொல்லல பச்ச துரோகம் தான் பண்ணான். ஆனா அவன் பண்ண தப்பை விட நீ பண்ணி இருக்குறது பெரிய தப்பு என கூறுகிறார். அத்தை இது எதுவும் நானா எடுத்த முடிவு கிடையாது. இவர் தான் என்ன கோர்ட்டுக்கு கூட்டிட்டு போய் விவாகரத்து வாங்க கையெழுத்து போட வச்சாரு. எதேர்ச்சியா அது எனக்கு தெரிய வந்தது. ஒருவேளை எனக்கு அந்த விஷயம் தெரிய வரல நாளும் என் கிட்ட விவாகரத்து வாங்கி ஒரு நாள் எல்லோரையும் விட்டுட்டு போயிருக்க தான் போறாரு. இதெல்லாம் உன்னோட கற்பனைன்னு உங்களால சொல்ல முடியுமா என கேட்க ஈஸ்வரி பேச முடியாமல் நிற்கிறார்.

பிறகு என்ன ஒவ்வொருத்தர் கிட்டயா பேசி சீன் கிரியேட் பண்றியா உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது வெளியே போ என கோபி சத்தம் போடுகிறார். கூட்டு படியேறி புருஷன் வேணான்னு சொல்லத் தெரிந்தது இல்ல என சொல்ல அவருடைய அப்பா எல்லாம் தப்பையும் நீ பண்ணிட்டு அவளை பத்தி பேசுற என கோபப்படுகிறார். முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியே போக வேண்டியது நீதான் தப்பு பண்ணது நீ தான் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 15-08-22
baakiyalakshmi serial episode update 15-08-22