Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாக்கியா.. அதிர்ச்சியில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 15.04.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆசிரமத்தில் போலீசார் ராதிகா மற்றும் கோபி ஆகியோரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது ராதிகாவை ஸ்டேஷனுக்கு அழைக்கின்றனர். கோபி நாங்கள் எங்களது காரில் வந்து விடுகிறோம் என கூறுகிறார். இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்கள் அங்கு வந்துவிட கோபி ராதிகாவை காருக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

பிறகு பற்றி அவர்கள் போலீசாரிடம் என்ன நடந்தது என விசாரிக்கின்றனர். இந்த பக்கம் பாக்கியா உட்பட வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். வீட்டுக்கு வந்த போலீசார் பாக்கியாவை அழைத்து செல்கின்றனர். கொஞ்ச நேரம் இருக்க சமைச்ச அவங்கள கூட்டிட்டு வர போயிருக்காங்க வந்ததும் விசாரிக்கலாம் என போலீஸ் சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். அப்போ நாங்க கிளம்பட்டுமா என கேட்க நீங்க எப்படி கிளம்ப முடியும் அவங்க வந்து விசாரணை நடத்தினால் தான் போக முடியும் நீங்க மீண்டும் நான் போங்கள் ராதிகா இங்கேயே இருக்கட்டும் என சொல்கின்றனர்.

பாக்கியா வந்தா எல்லா விஷயமும் தெரிஞ்சு போயிடும் கோபி மகிமை காரணம் காட்டி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். கோபி காரின் அருகே நின்று கொண்டிருக்கும்போது பாக்கியாவை ஆட்டோவில் அழைத்து வருவதைப் பார்த்து மறைந்து கொள்கிறார். செழியன் வருவதையும் பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு கோபி அங்கிருந்து கிளம்பி விடுகிறார். இனிய தொடர்ந்து போன் செய்ய கோபி எடுக்கவே இல்லை. ராதிகா நான் எதுவும் தப்பா பண்ணல எல்லாம் நல்லபடியா தான் செய்வேன் சொல்லுங்க என பாக்கியா அழுது கொண்டே சொல்ல ராதிகா முகத்தைத் திருப்பிக் கொண்டு நிற்கிறார்.

இந்த பக்கம் வீட்டிற்கு வந்து எழில் விஷயம் கேட்டு பாக்கியாவை அழைத்துவர போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகிறார். போலீசார் பாக்யாவிடம் யார் யார் சமைச்சாங்க என்ன ஏது என விசாரிக்க ராதிகா சொல்லுங்க என திரும்பவும் ராதிகாவின் பார்க்க ராதிகா பதில் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 15.04.22
Baakiyalakshmi Serial Episode Update 15.04.22