பாக்யாவை பார்த்ததும் ஓடி ஒளிந்த கோபி.. செல்விக்கு ஏற்பட்ட சந்தேகம்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட் பாக்யாவும் செல்வியும் ராதிகா வீட்டுக்குச் சென்று பெல் அடித்த நிலையில் கோபி நான் சென்று பார்க்கிறேன் என கதவைத் திறக்க வருகிறார். கதவைத் திறக்க முயலும் நேரத்தில் அவருக்கு ஒரு போன் கால் வர போனை அட்டென்ட் செய்து பேச தொடங்கி விடுகிறார். பின்னாடியே வந்த ராதிகா போன் வந்தது தான் சரி நான் திறக்கிறேன் என கதவை திறக்க செல்வியும் பாக்கியாவும் நிற்கின்றனர். உடனே ராதிகா வாங்க டீச்சர் என உள்ளே வரவேற்க இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி அப்படியே பக்கத்தில் இருந்த ரூமுக்குள் ஓடி ஒளிந்து கொள்கிறார்.

பாக்யாவின் வருகையால் இந்த நேரத்தில் இங்க எதுக்கு இவ வந்தா என புலம்புகிறார். மூணு பேர் கிட்டேயும் இன்னைக்கு வகையா மாட்ட போறேன் செத்தடா கோபி என புலம்புகிறார். இப்படியே புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் பக்கத்தில் இருந்த ஒரு பொருள் கைப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. வெளியில் சத்தம் கேட்க மயூ குட்டி இல்லைன்னு சொல்றீங்க உள்ளே ஏதோ சத்தம் கேட்டது என பாக்கியா கேட்கிறார். உடனே செல்வி உள்ள யாரோ ஆள் இருக்க மாதிரியே இருக்கு என கூற ராதிகா என்னுடைய பிரண்டு தான் உள்ளே இருக்கிறார் என சொல்கிறார். இருங்க நான் அவரை கூட்டிட்டு வரேன் என உள்ளே செல்கிறார். உடனே கோபி போன் பேசுவது போல போனை எடுத்துக் கொண்டு நடிக்கிறார்.

செல்வி தனியா இருக்கன்னு சொன்னாங்க ஆனா ஒரு ஆம்பள வீட்டுக்குள்ள இருக்காது என சொல்ல அமைதியா இரு அதான் பிரெண்டுனு சொன்னாங்களே என கூறுகிறார். ராதிகா சென்று கோபி அழைக்க ஒரு முக்கியமான போன் காலில் இருக்கிறேன் நான் எதுக்கு வரணும் நீயே பேசி அனுப்பி வைத்துவிட்டு என கூறுகிறார். ஒரு ரெண்டு நிமிஷம் வந்து ஹாய் மட்டும் சொல்லிவிட்டு வாங்க நீங்க உள்ளே இருக்கிறது அவங்களுக்கு தெரிந்து விட்டது என எவ்வளவோ கூப்பிட்டும் கோபி விடாப்பிடியாக வரமாட்டேன் என சொல்லி விடுகிறார்.

இதனால் வெளியே போன ராதிகா போன் பேசிட்டு இருக்காரு பேசிட்டு வருவார் என கூறுகிறார். மேலும் பாக்கியாவிடம் நான்தான் ஏற்கனவே சொன்ன இல்ல என் பிரண்டு ஒருத்தர பத்தி. எங்களுக்குள்ள ஒரு ரிலேஷன்ஷிப் இருக்கு. எனக்கு டிவோஸ் கிடைச்சுடுச்சு அவருக்கும் டிவோஸ் கிடைக்கப் போகுது. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போகிறோம் என சொல்ல பாக்கியா நல்ல விஷயம் இந்த புது வாழ்க்கையில நீங்களும் மயூரா குட்டியும் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க என வாழ்த்துகிறார். பிறகு பாக்கியா சரி நேரமாகுது நாங்க கிளம்புறோம் என சொல்ல இருங்க அவரை பார்த்துட்டு போங்க என மீண்டும் ராதிகா உள்ளே செல்கிறார். இப்பவும் கோபி போனில் பேசிக் கொண்டிருப்பது போல ராதிகா வெளியே வந்து விடுகிறார்.

வெளியே வந்த அவர் அவர் போன் பேசி முடிக்கல என கூறுகிறார். எங்க கல்யாணத்துக்கு நீங்க கண்டிப்பா வரணும் என சொல்ல கண்டிப்பா நான் வராமலா என பாக்கியா கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட கோபி வெளங்கிடும் எல்லாத்தையும் சொல்லு என ராதிகாவை மனதுக்குள் திட்டிக் கொண்டிருக்கிறார்.

பிறகு வெளியே வந்த செல்வி கோபியின் காபி நிற்பதை பார்க்கிறார். உடனே அதை நோக்கி ஆவலுடன் சொல்ல பாக்கியாவும் அதை பார்த்துவிட்டு ஆமாம் அவர் கார் தான் என்ன கூறுகிறார். பிறகு பாக்கியா இரண்டு முறை கோபிக்கு போன் போட போனை எடுக்காமல் கட் செய்து விடுகிறார் கோபி. உடனே செல்வி எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு ஒருவேளை ராதிகா வீட்டிலேயே இருப்பது நம்ப சாரா இருக்குமோ என சொல்கிறார். இதை கேட்ட பாக்யா அதிர்ச்சியாகி அவர் என்ன உன் புருஷன் மாதிரி நினைச்சு ராதிகா அவருக்கு கல்யாணம்னு சொன்னாங்க. இவரு ராதிகாவை கல்யாணம் பண்ணிக்க போறாரா? என்கூட சண்டை போடுவார் என அவருக்கு பிடிக்காது தான் ஆனால் என்னைக்கும் எங்கள விட்டுட்டு போக மாட்டார் என கூறுகிறார்.

திரும்பவும் செல்வி சார் என்னவோ யோக்கியம் மாதிரி பேசுற என சொல்ல கடுப்பான பாக்கியா இனிமே வேலைக்கு வராத, சத்தியமா சொல்றேன் திரும்பவும் இழுத்துட்டு வந்து பேசலாம்னு மட்டும் நினைக்காதே என சொல்லிவிட்டு செல்வியை அங்கேயே விட்டுவிட்டு ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு கிளம்பி விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 15.03.22
jothika lakshu

Recent Posts

Nenjanathi Lyrical Video

Nenjanathi Lyrical Video | TVK | THEEYADHU VELLA KELEER | Rony | Kavi Priya |…

1 day ago

Jai Jai Rama Video Song

Jai Jai Rama Video Song Tamil | Ramayana | Namit M, Nitesh T | Ranbir,…

1 day ago

மீசைய முறுக்கு 2 – திரைவிமர்சனம்

கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…

2 days ago

தி பாரடைஸ் – திரை விமர்சனம்

தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…

2 days ago

டிராகன் 2 படத்தின் போஸ்டர் போலியானது – படக்குழு விளக்கம்

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…

2 days ago

உங்கள் ட்ரோல்களையும் ரசித்தேன் – தி பாரடைஸ் விமர்சனங்கள் குறித்து நானி!

ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…

2 days ago