Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த கோபி.. எமோஷனல் ஆன ராதிகா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 15.02.22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் கையில் பணத்தை எடுத்து வந்து கொடுத்ததும் செழியன் மற்றும் கோபி சொன்ன வார்த்தைகளைப் பற்றி யோசித்து கண் கலங்குகிறார்.

பிறகு எழில் தன்னுடைய தாத்தா பாட்டியை சென்று பார்த்து அவர்களுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு காமெடியான விஷயத்தை காட்டி சிரிக்க வைக்கிறார். பாக்கியம் மட்டும் இல்லேன்னா நாங்க என்ன ஆகி இருப்போமோ என ஈஸ்வரி சொல்ல அதை ஃப்ரீயா விடுங்க பாட்டி என எழில் கூறுகிறார்.

மறுநாள் காலையில் ஈஸ்வரி சோபாவில் அமர்ந்து கொண்டே இருக்க அப்போது அங்கு வந்து அமர்கிறார் கோபி. அப்பா என்ன பண்றாரு என கேட்க தூங்குறாரு இன்னும் எழுந்துக்கல என சொல்கிறார். நியாபகம் வந்தது பார்க்கவே மாட்ற என ஈஸ்வரி கேட்க அவரை இந்த மாதிரி படுத்த படுக்கையா பார்க்க முடியல கஷ்டமா இருக்கு அதனாலதான் நான் வரவில்லை. பாக்கியாவும் இதையே தான் கேட்டா என கூறுகிறார்.

பிறகு ஈஸ்வரியிடம் 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொடுத்து இதை செழியன் இடம் கொடுத்து விடுங்கள் என சொன்னார். அவன் ஹாஸ்பிடலுக்கு இது ஒரு செலவு பண்ணி இருக்கான் அதுதான் இந்த பணம் என சொல்ல அவன் பணம் கேட்டானா என கேட்கிறார் ஈஸ்வரி. இல்லம்மா நான் தானே புள்ள நான்தான் அப்பாவுக்கு எல்லாமே செலவு பண்ணனும்னு நினைக்கிறேன் என கூறுகிறார். பிறகு இதை நீயே கொடுத்திடலாம் இல்லை என ஈஸ்வரி சொல்ல இல்லம்மா நான் கொடுத்த அவன் கஷ்டப்படுவான் நீங்களே கொடுத்துடுங்க என சொல்கிறார்.

பிறகு எழிலிடம் பாக்கியா அந்த பணத்தை எடுத்து தாத்தாவுக்கு செலவு பண்ணனும் நீ கேட்டதே அப்பாவி கொடுத்துட்டாரு இந்தா உன்னோட செலவுக்கு வச்சுக்கோ என சொல்ல நான் என்னம்மா செலவு பண்ண போறேன் நீ வச்சுக்கோ உனக்கு என்ன செலவு பண்ணனும்னு தோணுதோ அதுக்கு எடுத்து பண்ணு என கூறுகிறார் எழில்.

இந்த பக்கம் மயூரா டிவி பார்த்துக்கொண்டிருக்க டிவி பார்த்தது போதும் என ராதிகா திட்ட நான் வீட்டை விட்டு போறேன் என மயூ கிளம்ப அந்த நேரத்தில் கோபி வருகிறார். பிறகு கோபி ராதிகாவை திட்டுகிறார். அதன் பின்னர் இருவரும் சேர்ந்து அவருக்கு போனை கிப்ட் ஆக கொடுக்கின்றனர். இதைப் பார்த்த அவர் எமோஷனல் ஆகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் கோபி கையெழுத்து வேண்டும் எனக்கேட்க என்ன ஏது எனக் கேட்காமல் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடுகிறார் பாக்கியா.

Baakiyalakshmi Serial Episode Update 15.02.22
Baakiyalakshmi Serial Episode Update 15.02.22