Baakiyalakshmi Serial Episode Update 14.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. மருத்துவமனையில் செழியன் கணக்கு பார்த்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் பாக்கியா. கிச்சனுக்கு வந்த அவர் இதுவரை தான் சேர்த்து வைத்த பணத்தை வெளியே எடுக்கிறார். செல்வியிடம் மேலே சென்று பீரோவில் ஒரு பை இருக்கும் அதை எடுத்துட்டு வா என சொல்கிறார். அதில் இருக்கும் பணத்தை எடுத்துப் பார்க்க மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் குறைவாகத்தான் இருக்கிறது.
இந்த நேரத்தில் ஜெனி வந்து ஒரு மாத்திரை மட்டும் வாங்கவில்லை என கூறுகிறார். செழியனிடம் சொல்லி வாங்கி வருகிறேன் என சொல்ல வேண்டாம் என சொல்கிறார் பாக்கியா. தனது மொபைலில் மெடிக்கல் ஷாப் நம்பர் இருக்கும் அதற்கு இதை போட்டோ எடுத்து அனுப்பு என கூறுகிறார். ஜெனியும் சரி என அனுப்பி வைக்கிறார். பிறகு நான் செழியனை பே பண்ண சொல்கிறேன் என சொல்ல வேண்டாம் என கூறிவிட்டு கையில் இருந்த பணத்தை ஜெனியிடம் கொடுத்து அவங்க வந்த பணம் கொடுத்துட்டு மாத்திரை வாங்கி வை என கூறுகிறார்.
மேலே சென்ற ஜெனி செழியனிடம் நீ ஏன் இப்படி வீட்ல இருக்கவங்க கிட்ட கணக்கு பார்த்துட்டு இருக்க? உனக்கு அவங்க இப்படித்தான் பார்க்கிறார்களா? உனக்கு ஏதாவது ஒன்னுனா எல்லோரும் உதவி பண்ணுவாங்க. இந்த வீட்ல எல்லாரும் உன்னை எப்படி நடத்துறாங்க நீ எப்படி நடந்துக்கணும்னு நான் பாத்துட்டு தான் இருக்கேன் என சொல்ல செழியன் இனி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. நீ மாடர்னு நினைச்சேன் ஆனா சுத்த பழமா இருக்க என செழியன் சொல்ல நானும் உன்ன இப்படி இருப்பேன்னு நினைக்கல என சொல்லிவிட்டு தூங்க செல்கிறார்.
இந்த பக்கம் ரூமில் இருக்கும் கோபியிடம் சென்று பாக்கியா செலவுக்கு பணம் கேட்கிறார். ஸ்கேன் பண்ணதுக்கு செடியும் தான் பணம் கொடுத்தால் என்ன சொல்லு அப்புறம் நீ எதுக்கு பணம் கேட்கிற. ஏற்கனவே அப்பாவுக்கு எவ்வளவு செலவாகி இருக்கு தெரியுமா இப்போ செழியன் தான் செலவு பண்ணி இருக்கான் அப்படி இருக்கும்போது உனக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா பணம். அப்பா பேரு சொல்லி பணம் பறிக்க பாக்குறியா? அது அவருடைய மொத்த சொத்தையும் உன் பேர்ல எழுதி வைத்திருக்கிறேன். பென்ஷன் பணத்தையும் உன் பெயர்ல தான் போடுவாரு என கண்டபடி பேச பணத்தை வைச்சுக்கிட்டு நான் என்ன பண்ண போறேன் இவ்வளவு நாளா என்னை புரிந்து கொண்டது அவ்வளவுதான். செழியன் கணக்குப் பார்க்கிறான் அப்படி மாமாவுக்கு கணக்கு பார்த்து எதுவும் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டு வெளியே வந்துவிடுகிறார்.
வெளியே வந்து கோபி பேசியதை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எழில் வீட்டிற்கு வருகிறார். வீட்டுக்கு வந்த வழியில் தாத்தாவைப் போய் பார்த்துவிட்டு வந்து பாக்கியா கையில் பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டாம் உனக்கு செலவு இருக்கும்ல வெச்சுக்கோ என கூறுகிறார். எனக்கு என்னம்மா செலவு இருக்கப் போகுது பெட்ரோல் உன் கிட்ட கேட்டு வாங்க போறேன் என்று சொல்லி கொடுக்கிறார். இதிலிருந்து தாத்தா வீட்டில் செலவு பண்ண கொஞ்சம் பணம் எடுத்துக்கட்டுமா என கேட்க உனக்கு எவ்வளவு செலவு பண்ணனும்னு தோணுதோ அவ்வளவு பண்ணு என எழில் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…