Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பத்தினர். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 14-01-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த கோபி பாக்யாவை கண்டபடி பேசுகிறார். வீடு இனமும் என் பெயரில் தான் இருக்கு டாக்குமெண்ட் இன்னமும் என்னுடைய பெயர்ல தான் இருக்கு. ரெண்டு மாசம் 40,000 பணம் கொடுத்துட்டா வீடு உன் பேருக்கு வந்துடுமா, அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படுறயே உனக்கு வெட்கமா இல்லையா?? என்ன பாக்கியவை அசிங்கப்படுத்தி பேசிவிட்டு செல்கிறார்.

பிறகு ஈஸ்வரி கோபிக்கு ஆதரவாக பேசுவது போல வீட்டில் பேச ஜெனியும் தாத்தாவும் ஈஸ்வரியை குறை சொல்கின்றனர். அடுத்து இந்த பக்கம் வீட்டுக்கு வரும் கோபியிடம் ராதிகா நமக்கு எதுக்கு பிரச்சனை நாம நம்ம வீட்டுக்கு போயிடலாம் என சொல்ல கோபி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

இந்த பக்கம் எழில் வந்ததும் ஈஸ்வரி அவனை திட்ட இது அம்மாவோட வீடு தானே என எழில் சொல்ல உங்க அம்மாவோட வீடா அவ இந்த வீட்டுக்கு பணம் போட்டால் என சொல்ல அம்மா சொத்துல பங்கு கேட்டிருந்தா இந்த வீடு அவங்களுக்கு தான் வந்து இருக்கும், அவர்தான் இந்த வீட்ல இல்லையே அவருடைய பெயர் மட்டும் எதுக்கு என சொல்ல பாக்கியா அதற்குள் கோபிக்கு 40 ஆயிரம் பணம் அனுப்பிவிட்டு வந்து இந்த பிரச்சனையை இதுக்கு மேல உன் பெருசு பண்ண வேண்டாம் நான் அவருக்கு பணம் அனுப்பிட்டேன் என சொல்கிறார்.

பணம் வந்ததும் கோபி ராதிகாவிடம் பாரு எவ்வளவு திமிர் இருக்கும்னு என சொல்லி இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என மீண்டும் எழுந்து வீட்டுக்கு வருகிறார். எல்லோரையும் கூப்பிட்டு வைத்து கோபி முக்கியமான விஷயம் ஒண்ணு பேச போறேன் என சொல்கிறார்.

பிறகு தினமும் இந்த வீடு என் பேர்ல தான் இருக்கு இந்த வீட்டை விற்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

baakiyalakshmi serial episode update 14-01-23
baakiyalakshmi serial episode update 14-01-23