Baakiyalakshmi Serial Episode Update 13.04.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு ராதிகா காரில் சென்று கொண்டிருக்கும் போது மயூவை அழைத்துக் கொண்டு நாம ஒரு இடத்துக்கு போக போகிறோம் என்று கூறுகிறார்.
எங்கே ஹேட்டலா என கோபி கேட்க இல்லை என ராதிகா சொல்கிறார் பிறகு தியேட்டரா மாலா என கேட்க இல்லை டீச்சர் வீட்டுக்கு போகிறோம் என சொல்கிறார். மயூரா டீச்சர் வீட்டுக்கா என கேட்க பாக்கியா டீச்சர் வீட்டுக்கு என சொல்கிறார். அவங்களுக்கு உங்களை அறிமுகப் படுத்தி வைக்கணும்னு நான் ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன். இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போகலாம் என சொல்லிவிட்டு பாக்யாவுக்கு போன் செய்து தன்னை கட்டிக்கப் போறவரோடு வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். பாக்கியா புக் மகிழ்ச்சியோடு வாங்க என அழைத்து அவர்களுக்காக விருந்து ஏற்பாடு செய்கிறார்.
கோபி எதை எதையோ சொல்லி இந்த திட்டத்தை மாற்ற முயற்சி செய்தும் ராதிகா உறுதியாக இருக்கிறார். அதன் பின்னர் பாக்யாவுக்கு போன் போட்டு வெளியே போகணும் நான் வந்து உன்னை கூட்டிக்கறேன் என சொல்ல பாக்யா ராதிகா அவங்க கல்யாணம் பண்ணிக்கிற வரை கூட்டிட்டு வீட்டுக்கு வர சொல்லி இருக்காங்க என சொல்லி வர மறுத்து விடுகிறார். இன்னைக்கு வசமாக சிக்கிக் கொண்டோம் என கோபி பதற்றத்துடன் காரை ஓட்டிக் கொண்டு சென்றிருக்கிறார்.
இந்த நேரத்தில் குழந்தைகள் ஆசிரமம் இல்லத்தில் இருந்து போன் செய்து சாப்பாட்டில் ஏதோ பிரச்சனை. குழந்தைகள் எல்லாரும் மயக்கம் போட்டு விடுங்க என சொல்ல ராதிகா பதறிப்போய் ஹோமிற்கு செல்கிறார். இந்தப் பக்கம் செழியன் விஷயம் தெரிந்து டிவி வைத்து பார்க்க குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைகிறது.
ஹோமிற்கு சென்ற ராதிகா கோபி என அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். குழந்தைகள் வயிறு வலிக்குது என துடிக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்னுனா உங்கள சும்மா விடமாட்டேன். போலீசில் புகார் அளித்திருப்பதாக ஆசிரமத்தில் இருப்பவர்கள் கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் போலீசார் வந்து விசாரணை செய்கின்றனர். நாங்கள் சாப்பாட்டை ஒரு மெஸ்ஸில் ஆர்டர் செய்து தான் வாங்கி வந்தோம் என கோபி சொல்கிறார். அந்த மெஸ்ஸின் பெயர் என்ன என போலீஸ் கேட்கின்றனர்.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…