இனியாவின் நடவடிக்கையால் ஜெனிக்கு வந்த சந்தேகம்.. விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்துப் போட்ட பாக்கியா.. பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டிற்குச் சென்று உள்ள கோபியிடம் ராதிகா விவாகரத்து நோட்டில் கையெழுத்து வாங்கி விட்டீர்களா என கேட்க அவர் அதிர்ச்சியாகி இன்னும் இல்லை. அவங்க அம்மா வீட்டுல எல்லோரும் வந்திருந்தாங்க அதனால இந்த நேரத்துல வாங்க முடியல என கூறுகிறார். மேலும் சீக்கிரம் வாங்கி வருகிறேன் என சொல்ல ராதிகா வக்கீல் கேட்டாரு அதுதான் கேட்டேன் என சொல்கிறார். நீங்க நான் கட்டாயப்படுத்தி இதெல்லாம் செயல் அல்ல என ராதிகா கேட்க அதெல்லாம் இல்லை என கோபி சொல்லிவிடுகிறார்.

இந்த பக்கம் வீட்டில் ஈஸ்வரி அமர்ந்து கொண்டிருக்க அப்போது வந்த இனியா இன்னும் பிசியோதெரப்பி செய்யுற அண்ணன் வரலையா என கேட்கிறார். இன்னும் வரல என சொல்ல அவர் வந்தா தாத்தா பக்கத்திலிருந்து நானே பாத்துக்கிறேன் நீங்க இங்கேயே இருங்க என கூறுகிறார். பிறகு நேராக கிச்சனுக்கு சென்று பிசியோதெரபி இன்னும் வரலையா என ஜெனியிடம் கேட்கிறார். மேக்கப் எல்லாம் பலமா இருக்கு என இனியாவிடம் செல்வி கேட்க அதெல்லாம் இல்லையே என கூறுகிறார். ஸ்கூல் இல்லனா உனக்கு குளிக்கவே வலிக்கும் அக்கா மூணு முறை சொன்னால் தான் போய் குளிப்ப என கூறுகிறார். தட்டில் முகம் பார்த்து அலங்காரம் செய்து கொள்கிறார். திரும்பவும் ஜெனி இடம் அவர் இன்னும் வரலையா என கேட்கிறார். நீ எதுக்கு இவ்வளவு ஆர்வமா இருக்க என கேட்க தாத்தாக்கு சீக்கிரம் குணமாகணும் அதனாலதான் என சொல்கிறார். மேலும் அவர் எனக்கு சொல்லித் தர தான் சொன்னாரு என கேட்க என்ன சொன்னாரு என்று கேட்கிறார் ஜெனி. எக்ஸ்செய் சொல்லித்தர தான் சொன்னாரு என்று சொல்ல அப்படி எல்லாம் ஒன்னும் சொல்லலையே என்று கூறுகிறார். உங்களுக்கு கேட்கல என இனியா சமாளித்து விடுகிறார்.

பிறகு ரஜினிகாந்த் வந்ததும் அவரோடு உள்ளே சென்று அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தவரே இருக்கிறார் இனியா. இதை எல்லாம் பார்த்த ஜெனிக்கு சந்தேகம் வருகிறது. பிறகு பாக்கியா அவருடைய மாமனாரை கூட்டிக்கொண்டு ஜெனி மற்றும் செழியனுடன் மருத்துவமனைக்கு செல்கிறார். ‌‌அங்கு பாக்யா உள்ளே சென்றிருக்கும் நேரத்தில் ஜெனியிடம் இன்னிக்கு மட்டும் 13 ஆயிரம் ரூபாய் பில் கட்டி இருக்கேன். இந்த மாசம் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான செலவு பண்ணி இருக்கேன் இவ்வளவு எல்லாம் என்னால் பண்ண முடியாது என கூறுகிறார். தாத்தாவுக்கு தான பண்னு என சொல்ல ஏன் அத அப்பா பண்ண வேண்டியதுதானே இல்ல அம்மா பண்ண வேண்டியதுதானே என செழியன் சொல்வதை பாக்கியா கேட்டுவிட்டு கண் கலங்குகிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த பிறகு ஈஸ்வரி டாக்டர் என்ன சொன்னாங்க என விசாரிக்க சீக்கிரம் குணமாகிவிடும் என சொன்னாங்க என்று பாக்கியா சொல்கிறார். செல்வி எவ்வளவு நாளாகும் என கேட்க அதெல்லம் சொல்லல ஆனா குணமாகிவிடும் என்று சொன்னாங்க என கூறுகிறார். குன்னக்குடி இல்ல உங்க அக்கா வீல் சேர்ல தான் இருந்தாங்க ஆனா அவங்க பேசினாங்க என ஈஸ்வரி சொல்ல அத்தை மாமாவுக்கு சீக்கிரம் சரியாகிவிடும் மாமாவும் பேசுவார் என பாக்கியா சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான ப்ரோமோவில் கோபி ராதிகாவிடம் உன்கிட்ட ஒரு கையோடு வேண்டும் என கேட்க சொல்லுங்க என பாக்கியா கேட்கிறார். விவாகரத்து நோட்டீஸ் எடுத்துக்கொடுக்க பாக்கியாவும் அது என்ன ஏது என பார்க்காமல் கையெழுத்துப் போட்டு விடுகிறார். கையெழுத்து போடுவதற்கு முன்னாடி அது என்னன்னு பார்க்க மாட்டாயா என கேட்க நீங்க தான வாங்கறிங்க அப்புறம் இதல பார்க்க என்ன இருக்கு என பாக்கியா சொல்வதைக் கேட்டு கோபி குற்ற உணர்ச்சியில் தவிக்கிறார். இந்த காட்சிகள் எல்லாம் அடுத்த வாரம் ஒளிபரப்பாக உள்ளது.

Baakiyalakshmi Serial Episode Update 12.02.22
jothika lakshu

Recent Posts

VOWELS – An Atlas of Love Official Trailer Tamil

  https://youtu.be/dvAzQ4AW8XI?si=RwyVAUT4ydauDrvI

11 hours ago

Rai Rai Raa Raa Song (Tamil)

Rai Rai Raa Raa Song (Tamil) , Peddi ,Ram Charan , Janhvi , Buchi Babu…

11 hours ago

Leader – Official Teaser

Leader - Official Teaser ,Legend Saravanan , R. S. Durai Senthilkumar ,Ghibran Vaibodha https://youtu.be/2bdOxrr7Kvw?si=vUGe3Af95s-SSkqU

12 hours ago

Manithan Deivamagalam – Official Teaser

https://youtu.be/VI6Ugwjt7Ho?si=I4bWwA71FYPUW7s-

12 hours ago

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…

15 hours ago

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…

15 hours ago