Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டுக்கு வந்த பாக்கியா.. நிற்க வைத்த கேள்வி கேட்கும் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode-update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி வீட்டில் எல்லோரும் பாக்கியா பற்றி பேசிக்கொண்டிருக்க அப்போது வந்த கோபி இனி அவ எதுக்கு இந்த வீட்டுக்கு வரப்போற அப்படியே வந்தாலும் அவளை உள்ள விடமாட்டேன் என கோபி சொல்ல அந்த நேரத்தில் பாக்யா பைக்கில் வந்து இறங்குகிறார்.

பாக்கியா உள்ளே வர முயன்ற போது கோபி நில்லு என தடுத்து நிறுத்த அதை மீறி பாக்கியா உள்ளே வருகிறார். பாக்யா போய் தீர்க்க வைத்து கோபி ஈஸ்வரி செழியன் என ஆளாளுக்கு அவர் மீது தான் தப்பு என்பது போல கேள்வி கேட்கின்றனர். கோபி பண்ணது தப்புதான் நான் இல்லைன்னு சொல்லல ஆனா அவன் அவனுடைய தப்பு ஒத்துக்கிட்டு இனிமே இப்படி பண்ண மாட்டேன் இதுக்கு அப்புறம் ஒரு ஆம்பள என்ன பண்ண முடியும். அதுக்கப்புறம் நீ போய் விவாகரத்து வாங்கிட்டு வரணும் அதுக்கு என்ன அர்த்தம்? நீயும் அவன் எப்போ விவாகரத்து கொடுப்பானு காத்துக்கிட்டு இருந்தியா? எனவே ஈஸ்வரி கேட்கிறார். மேலும் கோபி இதுக்கப்புறம் அதே தப்பு பண்ணா நானே அவனை செருப்பால அடிப்பேன் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

செழியன் அப்பா பண்ணது தப்பு தான் ஆனா நீங்க இவ்வளவு நாளா விவாகரத்து வேணும் விஷயத்தை மனசுல வச்சி இன்னைக்கு நிறைவேற்றிக்கிட்டு இருக்கீங்க என சொல்ல இதை எல்லாம் கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். கோபி இன்னும் எதுக்கு இந்த வீட்ல நிக்கிற இது என் வீடு வெளியே போ என கூறுகிறார்.

உடனே எழில் என்னப்பா சும்மா என வீடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க என கேட்க ஆமா முழுக்க முழுக்க இது என் உழைப்பால உருவான வீடு என் ரத்தத்தை சிந்தி இந்த வீட்டை கட்டி இருக்கேன் என்ன சொல்ல சும்மா பணத்தைப் போட்டு கட்டிட்டா அது வீடாகிடாது அதுக்கு பேரு கட்டிடம்‌ அதுல சந்தோஷமா குடும்பம் வாழனும் அதுக்கு பேருதான் வீடு. அப்படி ஒரு வீட்டை உருவாக்கியது எங்கம்மா தான்.

சும்மா இது நான் கட்டின வீடு நான் கட்டின வீடுன்னு சொல்லி இதுல இருக்க எல்லோரும் உங்களுக்கு விசுவாசம் இருக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க என கோபிக்கு பதிலடி கொடுக்கிறார். பிறகு பாக்யா எழிலை அமைதியாக இருக்க சொல்கிறார்.

அதன் பிறகு மீண்டும் கோபி அதான் இந்த வீட்டுக்கு வந்து டிவைஸ் கிடைச்சுடுச்சுனு சீன் போட வந்தல. கிளம்பு என சத்தம் போடுகிறார். பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

 baakiyalakshmi serial episode-update

baakiyalakshmi serial episode-update