baakiyalakshmi serial episode update 08-11-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் செல்வி ஜெனி பாப்பா கொஞ்சம் நில்லு என பின்னாடியே ஓடிப்போய் நான் வேணா உன்னை வீட்டில கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன்னு சொல்ல ஜெனி அதெல்லாம் எதுவும் வேண்டாம் நீங்க வீட்டுக்கு போங்க அக்கா என கூறுகிறார்.
வேறு வழி இல்லாமல் செல்வி வீட்டுக்கு திரும்பிச் சென்றதும் அங்கே காரில் வந்து இறங்கும் ராதிகா ஜெனியிடம் என்ன ஆச்சு என்று கேட்டு காரில் அழைத்துச் செல்கிறார். ஜெனி செழியன் தன்னை ஏமாற்றி விட்டதாக நடந்த விஷயங்கள் அனைத்தையும் கண்ணீரோடு சொல்ல ராதிகா அவரை கூட்டிச் சென்று அவரது வீட்டில் டிராப் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வருகிறார்.
இங்கே எல்லோரும் பாக்யா செய்தது தான் தப்பு என ரவுண்டு கட்டி பேசிக்கொண்டு இருக்க எழில் மட்டும் அம்மாவுக்கு ஆதரவாக பேசுகிறார். கோபி இதனை முன்னாடியே சொல்லி இருந்த ஜெனிக்கு இந்த விஷயம் தெரியாம நாங்க தீர்த்து வைத்திருப்போம் என்று சத்தம் போட ராதிகா கைத்தட்டி கொண்டே வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார்.
சபாஷ் தப்பெல்லாம் நீங்க பண்ணுவீங்க படி எல்லாம் நாங்க சுமக்கணுமா என கோபிக்கு பதில் அடி கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். செழியன் பண்ணது தப்பு கிடையாது ஆனா பாக்கியா உங்க கிட்ட சொல்லாம விட்டது தப்பா என ஆவேசப்படுகிறார்.
இந்த வீட்ட பத்தி என் ஜெனியை பத்தியும் கொஞ்சம் கூட யோசிக்காமல் தெரிந்தே எல்லா தப்பையும் பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி உட்கார்ந்து இருக்க செழியன் ஒரு வார்த்தை கூட கேட்காம அவங்கள கேட்டுட்டு இருக்கீங்க என கோபப்படுகிறார். ஈஸ்வரி நீ பேசாத என சொல்லி ராதிகா நான் பேசுவேன் நியாயத்தை பேசுவேன் என பதிலடி கொடுக்கிறார்.
உடனே ஈஸ்வரி நீயும் அந்த மாலினி மாதிரி வந்தவ தானே என்று சொல்ல நான் மாலினி மாதிரி வந்தவர் கிடையாது உங்க பையனும் செழியனும் தான் ஒரே மாதிரி என சொல்ல கோபி என்ன ராதிகா என்ன பத்தி இப்படி சொல்ற என்று கேட்க என்ன கோபி பழசு எல்லாம் மறந்து போச்சா என ஆப்பு வைக்கிறார்.
பிறகு ஈஸ்வரி ராதிகாவை ரூமுக்குள் கூட்டிட்டு போ கோபி என சொல்ல கோபியும் அழைத்துச் சென்றுவிட ஈஸ்வரி பாக்கியா பண்ணது பெரிய தப்பு என திட்டி விட்டு ரூமுக்குள் சென்று விடுகிறார். எழில், அமிர்தா, செல்வி மற்றும் இனியா ஆகியோர் பாக்யாவுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…