Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஜெனி கொடுத்த அதிர்ச்சி.குழப்பத்தில் பாக்கியா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 08-09-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் உயிரோடு வந்த கணேஷ் அமிர்தா எங்கே எனக் கேட்டு ரூமுக்குள் செல்ல அவரது அம்மா ஹாலில் எழிலுடன் இருக்கும் போட்டோ மாட்டி இருப்பதை பார்த்து கணவரிடம் சொல்ல அவர் போட்டோவை எடுத்து மறைத்து வைக்கிறார்.

கணேஷ் ரூமுக்குள் சென்று பார்க்க அங்கும் இல்லாத நிலையில் அமிர்தா எங்கே என கேட்க அவ அவங்க அம்மா வீட்டுல இருக்கா என்று சொல்லி சமாளிக்கின்றனர். அமிர்தா நான் வந்திருக்க விஷயம் தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவா, உடனடியா அவளை பார்க்கணும் வர சொல்லுங்க என்று சொல்ல சொல்றேன்பா என்று கணேசை அழைத்துச் செல்கின்றனர்.

மறுபக்கம் பாக்யா செழியனுக்கு போன் செய்ய செழியன் போன் எடுக்காமல் இருக்க பிறகு ஜெனிக்கு போன் செய்து நலம் விசாரித்து விட்டு செழியன் போன் பண்ணானா வந்தானா என்று கேட்க வரவில்லை என்று கூறுகிறார். இதனால் பாக்யாவுக்கு சந்தேகம் வருகிறது.

பிறகு கணேஷை உட்கார வைத்து அவரது அம்மா சாப்பாடு ஊட்டி கண் கலங்க அதான் நான் வந்துட்டேனே இனிமே நீங்க அழக்கூடாது என ஆறுதல் கூறுகிறார் கணேஷ். அமிர்தா கிட்ட பேசுறீங்களா நான் வந்துட்டேன்னு சொன்னீங்களா என்ன சொன்னா என்று ஆவலோடு கேட்க அவரது அப்பா அவங்க ஊர்ல இல்லப்பா ஏதோ ஒரு கோவிலுக்காக குடும்பத்தோட சென்னைக்கு போய் இருக்காங்க என்று சொல்கிறார்.

எப்போ வருவாங்களாம் நான் வந்துட்டேன்னு சொன்னீங்களா என்று கேட்க நீ வந்தத எங்களாலயே இன்னும் நம்ப முடியல அவகிட்ட சொன்னா பதட்டம் ஆயிடுவா அதனால இன்னும் சொல்லல என்று சொல்ல அதுவும் சரிதான் மூணு வருஷம் அவள பாக்காம இருந்துட்டேன் மூணு நாள் தானே பரவால்லப்பா வந்த பிறகு சொல்லிக்கலாம் என்று சொல்லி எனக்கு சாப்பாடு போதும் என்று ரூமுக்கு எழுந்து சென்று விடுகிறார்.

வீட்டில் அமிர்தா சோகமாக உட்கார்ந்து இருக்க தாத்தா அமிர்தாவுக்கு ஆறுதல் சொல்லி அப்பா அம்மாவுக்கு போன் போட்டு தர சொல்ல அமிர்தா போன் போட்டு அம்மாவிடம் பேச அவர் என்ன பேசுவது என தெரியாமல் தவிக்க பிறகு தாத்தா போனை வாங்கி நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க உங்களுக்கு இன்னொரு மகனா எழில் இருக்கான்னு நெனச்சுக்கோங்க என்று ஆறுதல் கூறுகிறார்.

பிறகு ஜெனி செழியனுக்கு போன் செய்ய மாலினி போனை எடுத்துக் கொடுக்க செழியன் பேசும்போது நீ எப்ப வீட்டுக்கு வர அம்மா வேற ரெண்டு மூணு தடவை கேட்டுட்டாங்க குழந்தை பிறந்த பிறகும் இப்படியே இருந்தினா உன்னை நான் டைவர்ஸ் பண்ணிடுவேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு ஆன்ட்டி உனக்கு போன் பண்ணாங்களாம் நீ எடுக்கலைன்னு சொன்னாங்க போன் பண்ணி பேசு என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.

அதைத் தொடர்ந்து இனியா, பாக்கியா என எல்லோரும் காலேஜ் அசைன்மென்ட்டுக்காக காடுகளில் சுற்றி திரிகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 08-09-23
baakiyalakshmi serial episode update 08-09-23