BaakiyaLakshmi Serial Episode Update 08-08-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ கிச்சனில் பாக்யாவிடம் நீங்க பெங்களூர் சுத்திப்பாக்க நிறைய இடம் இருக்கு நான் உங்களுக்கு சுத்தி காமிக்கிறேன் என்று சொல்ல நீ எனக்கு காமிக்கிறியா என்று கேட்க நான் ஒன்னும் சின்ன பொண்ணு மயூ கிடையாது இப்போ காலேஜ் போற என்று சொன்ன பாக்யாவும் சந்தோஷமாக சரிவர என சொல்லுகிறார் பிறகு ராதிகா பேக்கிங்கை முடித்துவிட்டு பாக்யவிடம் வந்து நாங்க கிளம்பறோம் என்று சொல்ல உங்களுக்காக தான் லஞ்ச் ரெடி பண்ணி இருக்கேன் எடுத்துக்கோங்க என்று சொல்லிக் கொடுக்கிறார். பிறகு வந்து ஈஸ்வரி மற்றும் கோபியிடம் சொல்லிவிட்டு கிளம்ப போக ஈஸ்வரி நான் ஒரு முக்கியமான விஷயம் கோபி பாக்யா கிட்ட பேசணும் நீயும் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லி சொல்லுகிறார்.
ஈஸ்வரி பாக்யாவிடம் பசங்க எல்லாரும் அவங்கவங்க வாழ்க்கையை பார்த்துட்டு போய்ட்டாங்க நீயும் கோபியும் எதுக்கு தனித்தனியா இருந்துட்டு கஷ்டப்படணும் வயசான காலத்துல தனியாக இருக்க முடியாது என்று சொல்ல பாக்யா உங்க பையனுக்கு பொண்ணுன்னா நான் வருவேன் எனக்கு ஒன்னுனா அவரு வருவாரு மூணு பசங்களுக்கு அப்பா அம்மா என்ற உறவு மட்டும் போதும் கணவன் மனைவி உறவு வேண்டாம் என சொல்ல அதற்கு ராதிகாவிடமும் பிரண்டுக்கு நீயாவது சொல்லல என்று சொல்ல பிரண்டு தான் ஆனால் அவங்களுடைய தனிப்பட்ட விருப்பத்துல என்னால எதுவும் சொல்ல முடியாது என்று ராதிகா சொல்லுகிறார் கோபியும் விடுங்கம்மா இத பத்தி பேச வேண்டாம் என சொல்லி விடுகிறார். பிறகு ராதிகா மற்றும் மயூ இருவரும் கிளம்பி விட கோபி கிச்சனுக்கு போக டைம் ஆயிடுச்சு கிளம்புறேன்னு கிளம்ப பாக்யாவும் ரெஸ்டாரண்டுக்கு கிளம்பி விடுகிறார்.
மறுபக்கம் செல்வி கிச்சன் வேலை பார்க்க இனியா வந்து ஏதாவது ஹெல்ப் பண்ணவா என்று கேட்க எதுவும் வேண்டாம் நீ பாக்யா அக்கா வீட்ல எப்படி இருந்தியோ அப்படியே இரு என்று சொல்லிவிட்டு ஆகாஷிடம் வந்து நான் சாப்பாடு எல்லாம் செஞ்சு வச்சுட்டேன் ரெண்டு பேரும் சாப்பிடுங்க போரடிச்சா இனிய பாப்பாவ எங்கேயாவது படத்துக்கு கூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டு நான் வேலைக்கு போறேன்னு என சொல்ல நான் தான் எனக்கு வேலை கிடைத்தவுடன் நீ வேலைக்கு எல்லாம் போகக்கூடாது என்று சொல்லி இருக்கேனே என்று ஆகாஷ் சொல்ல, என்னால வேலைக்கு போகாம எல்லாம் இருக்க முடியாது ஆகாஷ் என்னால முடியல வரைக்கும் செய்றேன் உண்மையா பாப்பா நான் தூக்கி வளர்த்த புள்ள சந்தோஷமா வச்சுக்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். பிறகு கோபி காரில் வரும்போது மனதுக்குள் என்னுடைய பெயரை கோபி என்று ஆரம்பித்து அவரது காலேஜ் படிக்கும் போது ஒரு பெண்ணை காதலிச்சேன் அது எங்க அப்பாவுக்கு பிடிக்கல அதுக்கப்புறம் பாக்யாவை கல்யாணம் பண்ணி வச்சாங்க மூணு பசங்க பிறந்தவங்க இருந்தாலும் பாக்யாவுடன் மனச புரிஞ்சுக்காம நான் நடந்துகிட்டேன் அவமான படித்து வெறுப்பை காட்டின ஆனால் பாக்யா ஒரு நல்ல மனைவியா அம்மாவா அப்பா அம்மாவுக்கு ஒரு நல்ல மகளாக இருந்திருந்தா அந்த நேரம் பார்த்து தான் ராதிகா என் லைஃப்ல வந்தா அப்ப நான் எடுக்கிற முடிவு தப்பா சரியானு கூட எனக்கு தெரியல ஆனா எதைப் பத்தியும் யோசிக்காம ராதிகாவை கல்யாணம் பண்ண அதுக்கப்புறம் ராதிகாவோட லைஃப்லையே என்னால நிம்மதியை கொடுக்க முடியல இப்போ என்னோட பசங்களுக்காக இந்த கோபி வாழ்வான் என மனதுக்குள் நினைக்கிறார்.
பிறகு ராதிகா காரில் போகும்போது அவரும் இதே போல் அவரது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை நினைக்கிறார். சென்னைக்கு வரும்போது எல்லாம் நிறைய ஞாபகங்கள் மனசுல வந்துகிட்டே இருக்கு கோபிய வாழ்க்கையில வரதுக்கு முன்னாடி வரைக்கும் நல்லா சம்பாதிக்க நன்றாக இருந்தது ஆனால் அவர் வந்ததுக்கப்புறம் என் வாழ்க்கையில் இருக்கிற பிரச்சினை சரியாகும் என்று நினைத்தேன் ஆனால் யாராலும் நம்ம பிரச்சனையை சரி பண்ண முடியாது நம்ம தான் பார்த்துக் கொண்டிருக்கிறது புரிஞ்சுகிட்ட அதனாலதான் என்னோட முடிவை இண்டிபெண்டன்டா எடுத்தேன் என் பொண்ணுக்கு நான் இருக்கேன் பெங்களூருக்கு போகும்போது இந்த நினைவு எல்லாம் அப்படியே பின்னோக்கி போயிடும் என்று மனதுக்குள் நினைக்கிறார்.
பிறகு செல்வி பைக் ஓட்டிக்கொண்டே நான்தான் செல்வி என்ன மாதிரி நிறைய பெண்கள் வீட்டில் வேலை செய்வாங்க அவங்க கிட்ட எல்லாம் நீங்க போய் எதுக்காக இந்த வேலை செய்றீங்க நான் குடிகார புருஷன், குழந்தைகளோட படிப்பு செலவுன்னு சொல்லுவாங்க நானும் அதே மாதிரி தான் என் பையன கலெக்டர் ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் எத்தனையோ பேர் ஒரு குருவி பறந்தாகாது ன்னு சொல்லுவாங்க அதையெல்லாம் மீறி என் பையன் சாதித்துவிட்டான் நான் அவனை கஷ்டப்பட்டு என்னோட அடுத்த தலைமுறை உருவாக்கிட்ட என்று சந்தோஷமாக பேசுகிறார். பிறகு பாக்கியா கார் ஓட்டிக்கொண்டு அவரது வாழ்க்கையில் நடந்த கதையை சொல்லுகிறார். பாக்யாவில் பேச்சு எப்படி இருக்கிறது? அவர் என்ன சொல்ல வருகிறார்?என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சிறுதானிய உணவுகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…