Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் ஈஸ்வரி,ஜெனி கேட்ட கேள்வி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 08-04-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் தூங்கப்போகும் சமயத்திலும் செழியன் போன் பார்த்துக் கொண்டிருக்க இன்னும் எவ்வளவு நேரம் தான் ஆகும் என்று ஜெனி கேட்க செழியன் ஒரு இம்பார்டன்ட் ரிப்ளை மட்டும் பண்ணிட்டு வந்துடறேன் 10 மினிட்ஸ் என்று சொல்லி வேலையை முடித்துவிட்டு அவ்வளவுதான் என்று ஜெனியிடம் பேச மீண்டும் மெசேஜ் வர செழியன் போனை எடுத்துப் பார்க்க ஜெனி யார் மெசேஜ் பண்றது ஆணா பெண்ணா என்றெல்லாம் கேள்வி கேட்டு போனையும் வாங்கி பார்க்கிறார்.

அடுத்ததாக ஈஸ்வரி கால் வலியில் உட்கார்ந்து இருக்க எழில் நான் காலை பிடித்து விடுறேன் என்று உட்கார ஈஸ்வரி ஒன்னும் தேவை இல்ல என்னோட வலியை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று எழுந்து ரூமுக்குள் சென்றுவிட பின்னாடியே ராமமூர்த்தியும் நான் அவளுக்கு மாத்திரை கொடுத்து இருக்கிறேன் என்று சொல்கிறார்.

அதனைத் தொடர்ந்து அமிர்தா என்னால தான் பாட்டி உங்க மேல கோபமா இருக்காங்க என்று எழிலிடம் சாரி கேட்கின்றார். எழில் அதனால் ஒன்றும் இல்லை பாட்டி தானே அவங்க கோபம் சீக்கிரம் போயிடும் என்று சொல்கிறார். எனக்கு ஒரு காபி கிடைக்குமா என்று கேட்க அமிர்தா கொண்டு வரேன் என்று உள்ளே போகும்போது அம்மா இங்கே என்று கேட்க அவங்க மேல இருக்காங்க என்று சொன்னது அப்போ கிச்சன்ல நீ மட்டும் தனியா தான் இருக்கியா என்று தெரிந்து கொண்டு நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து காபி போடலாம் என்று அமிர்தாவுடன் ரொமான்ஸ் செய்ய பாக்யா வந்ததும் ஒன்னும் தெரியாதது போல சோபாவில் உட்கார்ந்து விடுகிறார்.

மறுபக்கம் பழனிச்சாமி வீட்டில் அவரது அம்மா பழனிச்சாமியின் 45 வது பிறந்த நாளை எல்லாரையும் கூப்பிட்டு கொண்டாட வேண்டும் என பேசுகிறார். மேலும் உனக்கு கல்யாணம் பண்ணனும் என்றும் பேசுகிறார். ‌

அதைத்தொடர்ந்து செழியன் வேலைக்கு கிளம்ப ஜெனி திரும்ப எப்ப வருவ ஆபீஸ் போறியா கிளைண்ட் மீட்டிங்னு வெளிய போறியா என்று கேள்வி கேட்க ஈஸ்வரி வெளியில போறவன் வீட்டுக்கு வர முன்ன பின்ன தான் ஆகும் என்று சொன்ன செல்வி என் ஐயா வெளிய பணம் நீங்க ஆயிரம் கேள்வி கேட்கிறது இல்லையா அதே மாதிரி தான் ஜெனி கேக்குது என்று பேசுகிறார்.

அடுத்து பாக்கியா பழனிச்சாமி வீட்டுக்கு வர அவரது அம்மா பழனி தமிழ் பிறந்த நாளை கொண்டாட சாப்பாட்டுக்கு ஆடர் கொடுக்கிறார். பிறகு பழனிச்சாமியின் அங்கு வந்து விட இரண்டு பேரும் பேசுவதை பார்த்து இவனுக்கும் அவ மேல ஆசை இருக்கு ஆனா கேட்டா இல்லன்னு தான் சொல்லுவான் என்று நினைத்துக் கொள்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 08-04-24
baakiyalakshmi serial episode update 08-04-24