தனி ரூம் கேட்ட இனியாவால், வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட கோபி.. ஷாக் கொடுத்த ராதிகா..! பாக்யலட்சுமி இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபியிடம் எழில் மன்னிப்பு கேட்க பரவால்ல விடு டா நான் உன்னை படம் பண்ண கூடாதுன்னு சொன்னேன் கோபத்தில் நீ என்ன கூப்பிடல அதனால ஒன்னும் பிரச்சனை இல்ல. படத்தைப் பற்றி நல்ல விதமா பேசுறாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. படத்தை முதல் நாள் முதல் காட்சி போய் பார்ப்பேன் என கூறுகிறார். பிறகு பாக்கியா எழிலிடம் பேசி விடுகிறார்.

அதன்பிறகு கோபி ரூமுக்குள் இருக்கும் போது எழில் உள்ளே வர வாடா வந்து உக்காரு என சொல்கிறார். அதான் ஓகேன்னு சொல்லிட்டேன் அப்புறம் என்ன? விடு ஒன்னும் பிரச்சனை இல்லை என கோபி சொல்ல நான் உங்ககிட்ட மனசார மன்னிப்பு கேட்கல அது வெறும் வாய் வார்த்தை தான் மன்னிப்பு கேட்க நான் ஒன்னும் தப்பு பண்ணல என கூறுகிறார். எங்க அம்மா என்கிட்ட பேசல உங்ககிட்ட மன்னிப்பு கேட்டால் தான் பேசுவேன் சொல்லிட்டாங்க அதனால தான் மன்னிப்பு கேட்டேன். நீங்க இந்த வீட்டுக்கு துரோகம் பண்ணிட்டு இருக்கீங்க, ரொம்ப நாளைக்கு இதை மறைக்க முடியாது. எல்லாருக்கும் உண்மை தெரியும்போது உங்கள நான் என்ன பண்ணுவது தெரியாது சத்தியமா தெரியாது எனக் கூறுகிறார்.

அதன் பிறகு இந்த பக்கம் இனியா போனில் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்கியா ரூமுக்குள் வருகிறார். யாரிடம் என்ன பேசிட்டு இருக்க எனக்கேட்க கடுப்பான இனியா, எனக்கு ட்ரைவேசியே இல்ல. எனக்கு தனி ரூம் வேண்டும். அப்பா கூட படுத்து தூங்கு என சொல்கிறார். அதெல்லாம் முடியாது என பாக்கியா சொல்லிவிட நான் டாடிகிட்ட பேசுறேன் என கூறுகிறார்.

அதன் பிறகு இந்த பக்கம் இனியா போனில் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்கியா ரூமுக்குள் வருகிறார். யாரிடம் என்ன பேசிட்டு இருக்க எனக்கேட்க கடுப்பான இனியா, எனக்கு ட்ரைவேசியே இல்ல. எனக்கு தனி ரூம் வேண்டும். அப்பா கூட படுத்து தூங்கு என சொல்கிறார். அதெல்லாம் முடியாது என பாக்கியா சொல்லிவிட நான் டாடிகிட்ட பேசுறேன் என கூறுகிறார்.

மறுநாள் காலையில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து இருக்க அப்போது ஸ்கூலுக்கு கிளம்பிய இனியா எனக்கு தனி ரூம் வேண்டும். எனக்கு பிரைவேசி தேவைப்படுது. அனைத்தும் ஏதாவது பேசிட்டு யார் கிட்ட பேசுற என்ன பேசுறேன்னு கேட்டுக்கொண்டே இருக்காங்க பாக்கியா ஈஸ்வரி ஆகியோர் அதெல்லாம் வேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் இனி அந்த ரூம்ல தனியா இருந்து யாரும் வரமாட்டாங்க என்று கூறுகிறார். அப்போ பாக்கியா எங்க தூங்குறது என ஈஸ்வரி கேட்க உடனே கோபியின் அப்பா பாக்கியா கோபியின் ரூமில் படுத்துக் கொள்ளட்டும் என சைகையில் சொல்கிறார். ஈஸ்வரியின் அது தான் சரி என சொல்ல கோபி அப்போ எனக்கு பிரைவேசி என பதறுகிறார். ஈஸ்வரி துணிகளை எடுத்திட்டு போய் கோபி ரூம்ல வை. இனிமே அவன் கூட படுத்துக்க என சொல்கிறார். இதனால் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டேனே என புலம்புகிறார் கோபி.

அதன் பின்னர் ராதிகா வீட்டிற்குச் சென்றிருந்த கோபி ராதிகா பாக்கியாவிடம் சமையல் ஆர்டரை கொடுத்திருப்பதை பற்றி சொல்ல கோபி கடுப்பாகி என்கிட்ட சொல்லி இருக்கலாம்ல நல்ல கேட்டரிங்கா பார்த்து கொடுத்து இருக்கலாம் என கூறுகிறார். உடனே ராதிகா நான் என் பிரண்ட்ஸ் பற்றி பேசும்போதெல்லாம் அமைதியா இருக்க நீங்க டீச்சர் பத்தி பேசினா மட்டும் ஏன் கோபப்படுகிறீர்கள் என கேட்க கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 08.04.22
jothika lakshu

Recent Posts

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…

9 hours ago

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’…

9 hours ago

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…

9 hours ago

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…

9 hours ago

‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ்?

'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…

9 hours ago

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

12 hours ago