Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபியை விவாகரத்து செய்யச் சொல்லும் ராதிகாவின் அம்மா.. வீட்டில் கோபிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி… பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 08.02.22

தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. மயூரா பின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்ததும் ராதிகாவின் அம்மா ரெண்டு பேரும் எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க.. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணா தான் நான் என் பையன் கிட்ட போய் இருக்க முடியும் என சொல்ல கோபி கண்டிப்பா பண்ணிக்கிறேன் ஆனா கொஞ்ச நாள் ஆகும் என சொல்லு எவ்வளவு நாளாகும் டைம் சொல்லுங்க என கேட்கிறார். இல்ல வக்கீலை பாக்கணும் இன்னும் நிறைய வேலைகள் இருக்கு என்ன சொல்ல வக்கீல் தான் உங்களுக்கு பிரச்சினையா என்னுடைய வக்கீலை பார்க்கலாம் என சொல்ல கோபியும் சரி என சொல்லி விடுகிறார்.

நாளைக்கு போய் பார்க்கலாம் அவர் கரெக்டா இருப்பார் என ராதிகா சொல்கிறார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த கோபி இதே அதிர்ச்சியில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். பிறகு அப்பாவைப் பற்றி விசாரித்துவிட்டு அவரைப் பார்ப்பதற்காக ரூமுக்கு செல்கிறார். அம்மாவிடம் நலம் விசாரிக்க அதன் பின்னர் அவர் கொஞ்ச நேரம் எங்க அப்பா பக்கத்தில் இரு நான் வந்துடுறேன் என சொல்கிறார்.

கோபியும் அவர் தூக்கத்திலிருந்து எழுந்து விடுவாரோ என்ற பயத்தோடு அமர்கிறார். தனக்கும் தன்னுடைய அப்பாவுக்கும் இது வரை நடந்த வாக்குவாதங்களை நினைத்து பார்க்கிறார். இந்த நேரத்தில் திடீரென்று அவருடைய அப்பா கோபியை திட்டுவது போலவும் சட்டம் போடுவது போலவும் கனவு காண்கிறார். உடனே பயந்து பதறி எழுந்து கொண்ட பிறகு அது கனவு என உணர்கிறார்.

அதன் பிறகு மறுநாள் காலையில் கோபியின் அம்மா பாக்கியாவிடம் இன்னைக்கு சாயங்காலம் ஒரு பூஜை பண்ணலாம் என சொல்கிறார். பாக்கியமும் என்ன பூஜை எனக்கேட்டு சரி பண்ணலாம் என சொல்கிறார். பிறகு ஜெனியும் செல்வியும் புடவை எடுக்க கடைக்கு செல்கின்றனர்.

இந்தப் பக்கம் ராதிகா ஒரு வக்கீலைப் பார்த்து வந்துள்ளார் கோபி. ஒரே பதற்றத்தோடு இருக்கும் அவர் வக்கீலிடம் உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சனை ஏன் விவாக ரத்து செய்யப்படும் என கேட்கிறார். ரெண்டு பேருமே ரொம்ப நாளா பெருசா எந்த வித ரிலேஷன்ஷிப் இல்லாமல் தான் இருக்கிறோம் அதனால பிரிந்துவிட முடிவு செய்திருக்கிறோம் என சொல்கிறார்.

அவங்களும் விவாகரத்து கொடுக்க ரெடியா என கேட்க அவங்களும் கொடுத்துடுவாங்க ஒன்னும் பிரச்சனை இல்லை என கோபி சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பின்னர் வெளியான ப்ரோமோ வீடியோவில் கையில் விவாகரத்து நோட்டீஸ் உடைய வீட்டுக்கு வரும் கோபியிடம் தாலிக்கு குங்குமம் வைத்து விட சொல்கின்றனர்.

Baakiyalakshmi Serial Episode Update 08.02.22
Baakiyalakshmi Serial Episode Update 08.02.22