baakiyalakshmi serial episode update 07-11-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மாலினி ஆதாரங்களை காட்டி செழியன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இது அத்தனையும் பாக்கி அவனுக்கு தெரியும் அவங்க என்ன கோவில்ல பார்த்து பேசினாங்க எல்லாத்தையும் பாத்துக்கலாம் சரி செய்ததெல்லாம் சொன்னாங்க இதுவரைக்கும் அவர்கள் எதுவும் செய்யல அதனாலதான் நானே வந்து விட்டேன் என்று சொல்ல ஜெனி இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.
கோபி ஈஸ்வரி என எல்லோரும் இது உனக்கு முன்னாடியே தெரியுமா என்று கேட்க பாக்கியா தெரியும் என்று சொல்ல கோபி என்கிட்ட பேசி இருக்கலாம்ல என்று கூறுகிறார். எங்கே என்னை பேச விட்டீங்க என பாக்யா பதிலடி கொடுக்கிறார். பிறகு எல்லோரும் மாலினியை வெளியே போக சொல்ல அவர் உங்களை சும்மா விடமாட்டேன் என சவால் விட்டுவிட்டு செல்கிறார்.
அதை தொடர்ந்து பாக்கியா ஓடி வந்து அவர் பிடிக்க அவர் கையை விலக்கி விடுகிறார். செழியன் அவ சொல்றது எல்லாமே பொய் என்று சொல்ல ஜெனி பளார் என அறைந்து பேசாத எனக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி மனசு வந்தது என கேள்வி மேல் கேள்வி கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு செழியன் உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன் என்று சொல்ல ஈஸ்வரி நாம பேசிக்கலாம் என்று சொல்லி குறுக்கிட யாரும் எதுவும் பேசக்கூடாது, இனிமேல் என்னால இங்கே இருக்க முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.
ஈஸ்வரி, ராமமூர்த்தி, எழில், அமிர்தா, பாக்யா என எல்லோரும் சமாதானம் செய்ய முயற்சி செய்து ஜெனி தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். பிறகு பாக்கியா சரி நானே உன்னை கூட்டிட்டு போய் விட்டுட்டு வரேன் என்று சொல்ல ஒன்னும் வேண்டாம் நீங்க போய் உங்க பையனுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்லி குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…