Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராஜி எடுத்த முடிவு. கதிருக்கு கோமதி கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் எபிசோட்

baakiyalakshmi serial episode update 07-02-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களுக்கு பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல்களின் இன்றைய மெகா சங்கமம் எபிசோடில் கோவிலில் வைத்து ராஜியை திட்டும் கோமதி அவரை பளார் பளார் என அறைகிறார். பழகுறவன் நல்லவனா கெட்டவனா என்று கூடவா கண்டுபிடிக்க தெரியாது? கல்யாணத்துக்கு முன்னாடியே யாருன்னு தெரிஞ்சது இல்லன்னா உன்னுடைய நிலைமை என்ன ஆகி இருக்கும் என்று கோபப்படுகிறார்.

என் அண்ணனுங்க உன்னை நல்லபடியா தானே வளர்த்தானுங்க அவனுங்கள பத்தி கொஞ்சம் கூட நினைச்சு பாக்கலையே என்று பிடித்து அறைகிறார். பிறகு இங்கு எதுவும் பேச வேண்டாம் என்று ராஜியையும் கோமதியையும் ரூமுக்கு அழைத்து வருகின்றனர்.

எழில் அந்த பொண்ணு பாவம் நம்பி வந்தவனும் கை விட்டுட்டான். பணம் நகையையும் ஏமாந்து நிற்கிறாள். ரோட்ல அவனை துரத்திகிட்டு ஓடினா, அவன் தள்ளி விட்டுட்டு போயிட்டான் என்று சொல்கிறார். ஊர்ல ஒருத்தர் கூடவா அவன் நல்லவன் இல்லன்னு சொல்லி இருக்க மாட்டாங்க என்று கேட்க நானே சொன்னேன் ஆனா அவ கேட்கல என்று கதிர் உண்மையை உடைக்கிறார்.

இப்ப என்ன பண்றது என்று எழில் கேட்க உங்க அம்மா என் அம்மானு பெரியவங்க இருக்காங்க அவங்க பேசி முடிவு எடுக்கட்டும் என்று கதிர் சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக இங்கே ரூமில் கோமதி உன்னால என் அண்ணன் தூக்கு மாட்டிக்க போயிட்டாரு என்று சொல்ல ராஜி கதறி அழுகிறார். பாக்கியா ராஜ்ஜியை அவங்க வீட்ல ஒப்படைச்சிடுங்க என்று சொல்ல ராஜி கூட்டிட்டு போன ஊர் ஜனங்கள் என்ன எல்லாம் பேசுவாங்க, ஒருத்தனோட ஓடிப் போனா அவன் வேலை முடிந்ததும் விட்டுட்டு போயிட்டான் என்று அசிங்கமா பேசுவாங்க என்று சொல்ல ராஜி அப்படி எதுவுமே நடக்கல என்று சொல்லி ரூமுக்குள் ஓடி சென்று கதவை சாற்றி கொள்கிறார்.

என்னால எல்லாருக்கும் அவமானம், நான் உயிரோடவே இருக்க கூடாது என்று கத்தியால் கையை வெட்டிக்கொள்ள துணிய இவர்கள் கதவை தட்டிக் கொண்டிருக்க ஓடிவந்த ஏழில் கதவை உடைத்து உள்ளே சென்று ராஜியை காப்பாற்ற பாக்கியா கத்தியை பிடுங்கி தூக்கி வீசி திட்டுகிறார்.

அவன் நகையை எடுத்து வந்தது எதுவும் எனக்கு தெரியாது அத்தை என்று ராஜி கோமதியை கட்டிப்பிடித்து அழுகிறார். பிறகு கோமதி யோசித்து ஒரு முடிவு எடுத்திருப்பதாக பாக்யாவை தனியாக அழைத்து சொல்லி தனக்கு துணையாக நிற்கச் சொல்லி கேட்க பாக்யாவும் சம்மதம் தெரிவிக்கிறார்.

அதன் பிறகு ராஜி உடன் இருக்கும் மீனாவை கூப்பிட்டு கதிரை கூட்டிட்டு நாம இருந்த ரூமுக்கு வா என்று சொல்லி ரூமுக்கு சென்று விட மீனா கதிரை அழைத்து வருகிறார். கதிர் அம்மா உன்கிட்ட ஒரு விஷயம் கேட்பேன் நீ எனக்காக இதை கண்டிப்பா பண்ணனும் என்று சொல்கிறார்.

அண்ணன் தம்பிகளுடன் சந்தோஷமாக வாழ்ந்ததையும் கல்யாணத்துக்கு பிறகு அவர்கள் பாசம் கிடைக்காமல் தவிப்பதையும் பெரும் கதையாக சொல்லி கண்கலங்குகிறார் கோமதி. நீ சொல்றதெல்லாம் சரி தாம்மா இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு இருக்க என்ன பண்ணனும் என்ன விஷயம் என்று சொல்லுமா என்று கதிர் கேட்க ராஜியை இப்படியே விட்டுட்டு போகவும் முடியாது, அவளை கூட்டிட்டு போய் ஊர் வாயில நிக்க வைக்கவும் முடியாது. எனக்காக நீ இதை பண்ணனும் என்று சொல்லி ராஜியை கல்யாணம் பண்ணிக்க என்று சொல்கிறார். இதைக் கேட்டு மீனாவும் கதிரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மெகா சங்கமம் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 07-02-24
baakiyalakshmi serial episode update 07-02-24