கோபிக்கு அப்பா வைத்த செக்.. கல்யாண மேடையில் நடக்கப் போவது என்ன? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டில் இனியா ஜெனி மற்றும் பாட்டி என மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது உள்ளே இருந்து எழுந்து வரும் ராமமூர்த்தி வேக வேகமாக வெளியே கிளம்ப தடுத்து நிறுத்தும் ஈஸ்வரி தூங்கிட்டு தானே இருந்தீங்க எதுக்கு எழுந்து வந்தீங்க என கேட்கிறார்.

தூங்கிட்டு இருந்தா அப்படியே விட்டுவிடுவியா எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் பொய் ஆகணும் என கிளம்ப காபி குடிச்சிட்டு போக சொல்லி ஈஸ்வரி காபி எடுத்து வந்து கொடுக்க அந்த காபி கப்பை தட்டி விடுகிறார். என்னதான் ஆச்சு எதுக்கு இப்படி இருக்கீங்க என கேட்க கோபிக்கு கல்யாணம் என சொன்னதும் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அந்த கல்யாணத்துக்கு சமைக்கிறது பாக்கியா தான் என சொன்னதும் இன்னும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிறகு மூவரும் ஆட்டோவில் கல்யாணத்தை நிறுத்த கிளம்பி வருகின்றனர் இந்த பக்கம் பாக்கியம் சமையல் வேலைகளை முடித்துவிட்டு எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு என நிம்மதி அடைய வடை போடணும் என ஞாபகம் வந்து மாவை எடுக்கச் சொல்ல அவளை தடுத்து நிறுத்துகிறார் செல்வி.

உனக்கு வருத்தமாக இல்லையா அக்கா என செல்வி கேட்க பாக்யா சமையல் பற்றி பேச கடைசியில் இன்னும் கொஞ்ச நேரத்துல உன் புருஷன் உனக்கு இல்லைன்னு ஆயிடும். நீ ஒரு வார்த்தை சொல்லு நான் கலாட்டா பண்ணி கல்யாணத்தை நிறுத்துவேன் என சொல்ல நீ எதுக்கு இவ்வளவு வருத்தப்படுற என பாக்கியா கேட்க உன்னை இப்படி பார்க்க முடியல என அழுகிறார். செல்வியை பாக்கியா சமாதானம் செய்ய பிறகு உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா என செல்வி கேட்க போய் வேலையை பாரு என வடை போட சென்று விடுகிறார்.

பாக்யா ஒரு பக்கம் சமையல் வேலை பார்க்க மணமேடையில் இருவருக்கும் ஜோராக கல்யாண வேலைகள் நடக்கிறது.

கோபிதியின் ராதிகாவையும் உட்கார வைத்து ஐயர் மந்திரம் ஓத ராமமூர்த்தீ, ஈஸ்வரி, இனியா என மூவரும் ஆட்டோவில் வேக வேகமாக வந்து கொண்டு இருக்கின்றனர். கெட்டி மேளம் சொன்னதும் மூவரும் மண்டபத்திற்குள் வந்து இறங்க இத்துடன் பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 06-10-22
jothika lakshu

Recent Posts

ரஜினி, கமல் படத்தில் திரிஷா?

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…

17 hours ago

மோகன்லாலின் ‘த்ரிஷ்யம் 3’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “த்ரிஷ்யம்”. குடும்பத் த்ரில்லராக வெளியான…

17 hours ago

ராம் சரணின் “பெத்தி” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “பெத்தி”. பெரும் எதிர்பார்ப்பில்…

17 hours ago

ராமர், கிருஷ்ணரைப் பார்த்ததில்லை; மோடியை பார்க்கிறேன்! தெலுங்கு நடிகர்

இந்திய திரையுலகில் நடிகர், வசனகர்த்தா மற்றும் திரைக்கதை எழுத்தாளராக பன்முக திறமையுடன் திகழ்பவர் தனிகெல்லா பரணி. தெலுங்கு சினிமாவைத் தாண்டி…

17 hours ago

“அந்த காலத்திலேயே விஜய் மிகப்பெரிய ஸ்டார்” – பிரியங்கா சோப்ரா

தமிழ்நாட்டின் 13வது முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பதவியேற்றுள்ள நிலையில், அவருடன் “தமிழன்” திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா…

17 hours ago

சினிமா முதல் அரசியல் வரை.. முதல்வர் விஜய் வாழ்வில் கடந்து வந்த பாதை – ஓர் பார்வை!

1945ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் தங்கச்சிமடத்தில் தமிழ் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். திரைப்பட துறையில் பணியாற்றி வந்த…

2 days ago