தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆகாஷ் அனைவருடனும் உட்கார்ந்து டைனிங் டேபிள் சாப்பிட யோசித்து எழுந்து நின்று நான் ஹாலில் உட்கார்ந்து சாப்பிடுகிறேன் என சொல்ல பிறகு எழில் செழியன் என அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட சொல்லுகின்றனர். பிறகு சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் நின்று கொண்டு இருக்க இனியா ஆகாஷுக்கு கங்கிராஜுலேசன் சொல்லிவிட்டு வேலைக்கு கிளம்பி விடுகிறார். ஈஸ்வரி நான் செல்வி கிட்ட பேசட்டுமா பாக்யா என்று கேட்க எதுவும் பேச வேண்டாம் என பாக்யா சொல்லிவிட செல்வி சரி நாங்க கிளம்பறோம் என சொல்லிவிட்டு வாசல் வரை சென்று கொஞ்ச நேரம் யோசித்து விட்டு மீண்டும் திரும்பி வருகிறார்.
உங்க கிட்ட இத கேட்கலாமான்னு தெரியல என் பையன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும். இதுக்கு முன்னாடியே இனியாவும் ஆகாஷும் காதலிச்சாங்க ஆனா வேலைக்காரி செல்வியா என்னால் அதைக் கேட்க முடியல இப்போ கலெக்டரோட அம்மாவா கேக்கற இனியா பாப்பாவ ஆகாஷுக்கு குடுப்பீங்களா என்று கேட்க குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர் ஈஸ்வரி அமைதியாக எழுந்து வந்து நான் இதைப்பற்றி தான் உன் கிட்ட பேசணும்னு பாக்கியா கிட்ட சொன்னேனா சொல்லுகிறார். உடனே கண் கலங்கிய செல்வி அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம் என்று சொல்லுகிறார்.
உடனே கல்யாண ஏற்பாடுகள் வேக வேகமாக நடக்க குடும்பத்தினர் இனியாவுடன் சேர்ந்து சங்கீத் ஃபங்ஷனுக்கு கிளம்புகின்றனர். பிறகு மண்டபத்திலிருந்து மேளதாளத்துடன் ஆகாஷ் குடும்பத்தை வரவேற்க இனியா குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்க ஆகாஷ் வந்து குடும்பத்துடன் காரில் இறங்குகிறார். பிறகு செழியன் அவருக்கு மாலை போட்டு மரியாதை செய்ய ஜெனி சந்தனம் வைக்கிறார். பிறகு குடும்பத்தினர் அவர்களை உள்ளே அழைத்துச் செல்கின்றனர்.
செல்வியின் கணவர் செல்வியை தனியாக அழைத்து இப்ப எதுக்கு உள்ள போக விடாம இப்படி பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க நீ சாதிச்சிட்ட செல்வி என்று சொல்லுகிறார் நான் என்னத்த சாதிச்சேன் என்று கேட்க அவங்க ரெண்டு பேரும் காதலிச்ச போ இந்த குடும்பம் அவனை அடித்து இருந்தது ஆனால் இப்போ அவங்க கையாலேயே மேல தாலத்தோட மாலை மரியாதை செய்ய வச்சிட்ட என்று சொல்ல அதுக்கு காரணம் நான் இல்லை என்னோட பையன் ஆகாஷ் தான் என்று சொல்ல அவ காரணமாக இருந்தாலும் அவன் கலெக்டர் ஆகணும்னு சொன்னது நீதானே என்று சொல்லி பாராட்ட இன்னும் புதுசா என்ன பாராட்டலாம் செய்ற என்று சொல்லிவிட்டு அழைத்துச் செல்கிறார். பிறகு உள்ளே ஒருவராக வந்து விட பிஸியாக கல்யாணம் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க செல்வி பாக்யாவிடம் போட்டோக்காரன் கூப்பிட்டு எங்களை போட்டோ எடு என்று சொல்லி விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை எடுத்துக் கொள்கிறார்.
பிறகு அமிர்தாவின் அம்மா ஈஸ்வரி இடம் பேசிக் கொண்டிருக்க பாக்யா வந்தவுடன் நீங்களே சொல்லுங்க சம்மந்தி அமிர்தாவோட பிரசவம் நாங்க தானே பாக்கணும் என்று கேட்கிறார். இன்னும் அமிர்தாவுக்கு பிரசவம் ஆகல அதுக்கு என்ன ரொம்ப நாள் இருக்கு அதுக்காக இப்பவே பேசிக்கிட்டு இருக்கணுமா வாங்க ரிசப்ஷன் ஸ்டார்ட் பண்ணலாம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறார். கொஞ்ச நேரத்தில் ஆகாஷை எழில் மற்றும் செழியன் அழைத்து வர இனியாவை அமிர்தாவும் ஜெனியும் அழைத்து வருகின்றனர். பிறகு ரிசப்ஷன் தொடங்க என்ன நடக்கிறது? சந்திரிக்கா என்ன சொல்லுகிறார்?என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
