Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செல்வியிடம் கோபமாக பேசிய பாக்யா.. கோபி சொன்ன வார்த்தையால் ஈஸ்வரிக்கு வந்து சந்தேகம்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Serial Episode Update 06-07-22

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யா மொத்தமாக நனைந்தபடி வீட்டுக்குப் போக தடுமாறிய அவரை செல்வி உள்ளேன் அழைத்துச் சென்று போய் புடவை மாத்திட்டு வா என கூறுகிறார். அவருடைய மாமனார் போய் துணி மாத்திட்டு வாய் என சொல்ல பாக்கியம் மேலே சென்று மொட்டை மாடியில் பேயறைந்தார் போல நின்று கொண்டிருக்கிறார்.

இந்த பக்கம் ஹாஸ்பிடலில் கோபி பாக்கியா வரவில்லை என சொல்ல ஈஸ்வரி அப்போ பாக்கியா எங்கே போயிருப்பார் என சந்தேகப்படுகிறார். என்னம்மா ஆச்சு என்ன பிரச்சனை என கேட்க இன்னைக்கு எதுவுமே சரியா நடக்கல என கூறுகிறார். இதனால் கோபிக்கும் சந்தேகம் எழுகிறது. எழிலும் மருத்துவமனையில் விசாரிக்க அவருடைய மனைவி வந்திருந்தாங்க, இப்பதான் கிளம்பி போனாங்க என கூறுகின்றனர். ‌

இந்த பக்கம் செல்வி பாக்யாவிடம் சென்று கூப்பிட பாக்கியா கோபமாக பேச அதை கண்டு பயந்து போகிறார். பிறகு ஹாஸ்பிடல் இருந்து எழில் வீட்டுக்கு போன் போட்டு பாக்கிய குறித்து விசாரிக்க செல்வி அக்கா வந்துடுச்சு மேல இருக்கு ஆனா ரொம்ப டல்லா இருக்கு என கூறுகிறார். எழில் சரி அம்மாவ பாத்துக்கோங்க சாப்பிட வைங்க என கூறி போனை வைத்து விடுகிறார்.

ஜெனி வந்ததும் பாக்யா குறித்து கேட்க செல்வி நடந்ததை சொல்ல சரி வாங்க ஆன்ட்டி போய் பார்க்கலாம் என இருவரும் மேலே செல்கின்றனர். பாக்கியா இப்படி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைய இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் வருகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 06-07-22
Baakiyalakshmi Serial Episode Update 06-07-22