ராதிகா வீட்டில் இருக்கும் கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. புது ஹீரோவால் இனியாவுக்கு வந்த காதல்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபி காபி குடித்துக் கொண்டிருக்க அப்போது வந்த ஈஸ்வரி அப்பா நைட்டெல்லாம் தூங்கவே இல்ல விட்டத்தை பார்த்துகிட்டு இருந்தாரு என சொல்கிறார். இந்த நேரத்தில் வந்த எழில் இன்னிக்கி பிசியோதெரபி வரதா சொல்லி இருக்காங்க என கூறுகிறார். யாருடைய ரெபரன்ஸ்ல வராங்க என கோபி ஹாஸ்பிடல்ல தான் அனுப்பி இருக்காங்க என சொல்கிறார்.

பிறகு பாக்கியாவிடம் யாரும் இல்லாத நேரம் பார்த்து எனக்கு நீ காபி கொடு. ஜெனி போட்ட காபில டிக்காஷன் அதிகம் என சொல்கிறார். அதன்பிறகு பாக்கியா அமர்ந்து கணக்குப் பார்த்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த செல்வி இன்னைக்கு ஒரு ஆர்டர் வந்தது நம்பர் வாங்கி வச்சிருக்கேன் என கூறுகிறார். ஒரு மாதத்திற்கு எந்த ஆர்டரும் எடுக்க வேண்டாம். மாமா இப்போ இருக்கிற சமயத்துல அது சரியா இருக்காது என கூறுகிறார்.

இந்த நேரத்தில் பாக்யாவின் வீட்டிற்கு அமிர்தாவின் குடும்பத்தார் வருகின்றனர். பிறகு அவர்கள் பாக்கியாவிடம் நலம் விசாரித்துவிட்டு அவருடைய மாமனாரை பார்க்கச் செல்கின்றனர். வந்தவர்களிடம் ஈஸ்வரி தன்னுடைய கணவரின் நிலைமையைப் பற்றிச் சொல்லி வருத்தப்படுகிறார். அவர்கள் சீக்கிரம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறி தனது தம்பிக்கும் இப்படித்தான் இருந்தது கொஞ்ச நாளில் சரியாகி விட்டது என கூறுகின்றனர். பிறகு துணியைக் கொடுத்து இதை அவருடைய கைகளில் நன்றாக சூடாக தேய்த்து பிறகு சுடு தண்ணீர் போற்றுங்கள் சரியாகிவிடும் என சொல்லிக் கொடுக்கின்றனர். பிறகு அவர்கள் வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர்.

அதன் பின்னர் செழியன் வீட்டிற்கு வரும் பிசியோதெரபிக்கு போனில் வழி சொல்ல அவரும் வந்து விடுகிறார். உள்ளே வந்த அவரைப் பார்த்து நீங்க உண்மையாகவே டாக்டரா என பாக்கியா கேட்கிறார். ஏனென்றால் அவர் சின்ன பையன் மாதிரி இருப்பதாக கூறுகிறார். வேணும்னா சர்ட்டிபிகேட் இருக்கு பார்க்கறீங்களா என பஃன் செய்கிறார் பிசியோதெரபி. மேலும் தன்னுடைய பெயர் ரஜினி நீங்க வேணும்னா சூப்பர் ஸ்டார் என்று கூட கூப்பிடலாம் என சொல்கிறார்.

ஜெனி சிரித்துக்கொண்டே உண்மையாகவே உங்க பேரு ரஜினிகாந்த் ஆனால் எனக் கேட்க ஆமா எங்க அப்பா ரஜினியோட தீவிர ரசிகர் அதனால தலைவரோட பேரையே எனக்கு வச்சிட்டாரு எனக் கூறுகிறார். பிறகு உள்ளே சென்ற அவர் தாத்தாவைப் பரிசோதனை செய்துவிட்டு தாத்தா சீக்கிரம் குணப்படுத்திடலாம் இதைவிட ரொம்ப அதிகமா பாதிக்கப்பட்டவங்க எல்லாம் சரியாக இருக்காங்க என கூறுகிறார். இவர் ஸ்டைலாக பேசுவதை பார்த்து இனியா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு இவர் மீது காதல் உருவாகிறது.

பிறகு செழியன் எப்படி வந்து ட்ரீட்மன்ட் கொடுப்பீர்கள் என கேட்கிறார். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் காலை மாலை என பிரித்து வருவோம் என சொல்கிறார். அப்படி இல்ல நாளும் ஒரே டைமா ஒரு மணி நேரம் கூட பண்ணிடலாம். அவர் முழுசா பழையபடி துள்ளி நடக்க வைக்கிறது என்னுடைய பொறுப்பு என கூறுகிறார். பிறகு பாக்கியா அப்பாவிடம் கேட்டு சொல்லலாம் என சொல்லிவிட சரி நீங்க பேசிட்டு சொல்லுங்க என கிளம்புகிறார்.

இந்தப்பக்கம் ராதிகா மயூவின் பிறந்த நாளுக்காக வீட்டை அலங்காரப்படுத்தி வைத்துள்ளார். மயூரன் அழகாக டிரஸ் செய்து இந்த இருப்பதை பார்த்து அவருக்கு முத்தமிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் பாக்யாவின் வீட்டில் சுமங்கலி பூஜை நடைபெறுகிறது. ராதிகா கோபி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து கொண்டிருக்கும் போது ராதாவின் கணவன் ராஜேஷ் வீட்டிற்கு வருகிறார். இதனால் அடுத்த வாரம் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

Baakiyalakshmi Serial Episode Update 05.02.22
jothika lakshu

Recent Posts

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 hour ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

23 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

2 days ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

2 days ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

2 days ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

2 days ago