தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா என்னுடைய ஃப்ரெண்டு அப்பா அம்மா மாதிரி நீயும் அப்பாவும் டிவோஸ் பண்ணினால் நான் அப்பா கூட போய் விடுவேன் என சொல்ல பாக்கியா திட்டி வருத்தப்படுகிறார். இப்படியெல்லாம் நடக்க கூடாது என கடவுளை வேண்டுகிறார்.
அதன் பின்னர் மறுநாள் காலையில் ஏதோ டென்ஷனில் வெளியே கிளம்ப அந்த நேரத்தில் எழில் பைக்கில் வேகமாக உள்ளே வருகிறார். இருவரும் எலியும் பூனையுமாக முறைத்து விட்டு கோபி எழிலை திட்டி விட்டு வெளியே சென்று விடுகிறார்.
பிறகு எழிலிடம் இது பற்றி வருத்தப்பட்டு சொல்லி அப்பாவிடம் சொல்ல சொல்லி அனுப்பி வைக்கிறார். கோபியின் ரூமுக்கு வந்த ஏழு கதவை சாற்றி லாக் செய்ய கோபி பதறுகிறார். பயப்படாதீங்க, உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும். என் படத்தோட வேலைகள் முடிந்து விட்டது. நாளைக்கு பிரீவியூ சோ என சொல்ல கோபி சந்தோஷப்படுகிறார். எல்லோரும் நாளைக்கு படம் பார்க்க வருவாங்க ரொம்ப முக்கியமான நாள் எனக்கு என கூறுகிறார். ஆனா நீங்க தயவு செஞ்சு வந்துடாதீங்க. எப்ப ஏதாவது ஒரு காரணம் சொல்லி உங்களுக்கு பிடிச்ச வேலையைச் செய்கின்றன அந்த மாதிரி ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்கள். இப்படி சொல்லும்போது உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்று எனக்கு தெரியும். எனக்கு எவ்வளவு வலிச்சா இப்படி சொல்லுவேனு உங்களுக்கு என்னைக்குமே புரியாது என கூறுகிறார்.
இந்த பக்கம் கோபி ராதிகா வீட்டில் சோகமாக இருக்க ராதிகா என்னாச்சு என்ன விஷயம் எனக் கேட்கிறார். என் பையன் அவன் நினைத்ததை செய்து விட்டான். நாளைக்கு அவனோட படம் பிரிவியூ ஷோ. ஆனா என்ன வராதீங்க என்று சொல்லிவிட்டான். எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா. இதுக்கெல்லாம் காரணம் என் முன்னாள் மனைவி தான். என் பையன் இப்படி சொல்றத கேட்டு அவ சிரிச்சுகிட்டு நின்னா. எனக்கு வீட்ல இருக்கு அது புடிக்கல, என்னை கொன்னுடுவாங்கனு பயமா இருக்கு என கூறுகிறார்.
நான் இல்லாமலேயே என் பையன் இந்த அளவிற்கு வளர்ந்து விட்டானா? வருத்தப்பட ராதிகா அதுதான் விவாகரத்துக்கு அப்ளை பண்ணி இருக்கீங்களே, வீட்டை விட்டு வெளியே வந்துடுங்க என்று கூறுகிறார். கரெக்ட் அதுதான் சரியான வழி. அதைப் பற்றி தீவிரமாக யோசிக்கணும் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
