தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சந்தோஷமாக வந்து பேசிக் கொண்டிருக்க பாக்யாவும் வருகிறார் உனக்காக தான் பார்க்க காத்துகிட்டு இருக்கேன் ஒரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு நாளைக்கு எழில், செழியன் நம்ம வீட்டுக்கு வர போறாங்க எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருக்க போறோம் என்று சொல்ல ஈஸ்வரி மற்றும் இனியா சந்தோஷப்பட பாக்யா முகம் மாறுகிறது. எதுவும் சொல்லாமல் சென்று விட கோபி பாக்யாவுக்கு இதுல சந்தோஷம் இல்லையா பாக்யாவுக்காக தான் நான் இதை செஞ்சேன் ஆனால் எதுவுமே சொல்லாம போற என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி அவளே எல்லாத்தையும் பண்ணனும் நினைப்பா வேற யாராவது நல்லது பண்ணா அவளுக்கு பிடிக்காது அதுவும் நீ பண்ணிட்ட அவ ஏத்துக்க மாட்டா என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் பாக்யா தனியாக உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருக்கும் செல்வி வருகிறார். கிளம்பிட்டியா செல்வி சாப்பாடு எடுத்துக்கிட்டியா என்று சொல்ல எல்லா எடுத்துக்கிட்டேன் அக்கா என்று சொல்லிவிட்டு நான் வேணா உன் கூட கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கவா என்று கேட்டு உட்காருகிறார். ஏன் அக்கா சோகமா இருக்க என்று சொல்ல கல்யாணம் ஆனபோதும் சரி இப்ப தயவுசெய்து சரி நல்லது பண்ற நான் வர முடிவெடுத்து அவரை யோசித்து ஒரு முடிவு பண்றாரு அதனால மத்தவங்களுக்கு என்ன பிரச்சனை வரும் என்றது யோசிக்கிறது கிடையாது என்று சொல்லுகிறார். செழியன் அவரோட மாமனார் பிசினஸ் பாத்துகிட்டு சந்தோஷமா இருக்கான் எழிலும் பட வேலையை பார்த்துகிட்டு சந்தோசமா இருக்கான் அவங்க அவங்க பிரச்சனையே அவங்க அவங்க தீர்த்து வச்சுருக்காங்க ஆனா இங்க ஒரே குடும்பத்தில் இருக்கணும்னா அவங்க ஒருத்தர் பிரச்சனை குடும்ப பிரச்சனையா மாறும் எல்லாரும் ஒரு ஒரு விஷயம் சொல்லுவாங்க குழப்பி விடுவாங்க அதுதான் நடக்கும் எல்லாரும் ஒண்ணா இருக்கணும்னு யார் சொல்றது அப்படியெல்லாம் இல்ல தனித்தனியாக இருந்தாலும் நிம்மதி சந்தோஷம் இருக்கும் என்று சொல்லுகிறார்.
இது மட்டும் இல்லாம இத்தனை நாளா இனியா மட்டும் வந்தா நான் பொறுமையா எழுந்து சமைச்சேன் இப்போ வயசு ஆகுது. கொஞ்ச நேரோ சேர்ந்த மாதிரி நின்னா கால் வலிக்குது பத்து மணிக்கு மேல கண்ணு முழிச்சிருக்க முடியல தூக்கமா வருது இப்போ எல்லாரும் வந்துட்டா சீக்கிரம் எழுந்துக்க வேண்டியது இருக்கும் எனக்கு தான் வேலை அதிகமாகும் என்று சொல்ல நான் என் பசங்களுக்கு சமைச்சு போடுறது கஷ்டம்னு நினைக்கல என்னோட உடம்பு பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். இப்போ பசங்க வரணும்னு சொல்லி போராடினவரு அவங்க வந்ததுக்கு அப்புறம் என்ன செய்வாருன்னு நினைக்கிறேன் ஒன்னும் செய்ய மாட்டாரு என்று சொல்லுகிறார். எதையோ சாதிச்ச மாதிரி நெஞ்ச நிமித்து கிட்ட நிப்பாரு நான் தான் வீடு முழுக்க ஓடணும்.
உடனே பின்னால் எட்டிப் பார்க்க என்னகா ஆச்சு என்று கேட்க இல்லை யாராவது இருக்காங்களான்னு பாக்குற நான் என் மனசுல இருக்கிறதெல்லாம் கூட்டிட்டு யாராவது கேட்டாங்கன்னா நீ நல்ல தாயே இல்லைன்னு சொல்லிடுவாங்க என்று சொல்லுகிறார் உடனே செல்வி நம்ம நல்ல அம்மாவ தான் இருக்கும் ஆனா அதை இவங்க கிட்ட நிரூபிக்கிறது இருக்கே என்று சொல்லுகிறார். அவர் என்கிட்ட இத பத்தி பேச போறேன் முன்னாடியே சொல்லி இருந்தா நான் எல்லோரோட நல்லதுக்காகவும் வேணான்னு சொல்லி இருப்பேன் ஆனா இப்ப சொன்னால் தப்பாகிடும் எல்லாரும் வரட்டும் பாத்துக்கலாம் என்று சொல்லிவிட்டு நீ கிளம்பு செல்வி என்று அனுப்பி வைக்கிறார்.
மறுநாள் காலையில் பாக்யா கிட்சனில் இருக்க செல்வி எழில் தம்பி ரூம், செழியன் தம்பி ரூம் கிளீன் பண்ணிட்டேன் என்று சொல்ல சரி சாமான்ல மேல இருந்து எடுத்து வச்ச எல்லாம் என்று சொல்லி எடுத்து வைத்துவிட்டு செல்வியை கழுவ சொல்லுகிறார் கொஞ்ச நேரத்தில் கோபி செழியன் வந்துட்டான் என சொல்லி கீழே இறங்கி வர அவர்களை அனைவரும் வரவேற்று சந்தோஷப்படுகின்றனர் குழந்தைகளை கொஞ்சி விட்டு பாக்கியா கிச்சனில் வந்து எல்லாருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறார். ஜெனி தூங்கிக்கொண்டு காய்கறி கட் பண்ண செல்வி என்ன ஜெனி தூங்கிட்டு இருக்க என்று கேட்க எங்க ஆன்ட்டி குழந்தை மூணு மணிக்கு தான் தூங்குது அதுக்கப்புறம் தான் நானும் தூங்குவேன் நான் 11 மணிக்கு தான் எழுந்திரிப்பேன்.காலையில எழுந்திருச்சு வந்ததுனால எனக்கு தூக்கமா வருது என்று சொல்லுகிறார்.
நீ வேணா போய் படுத்துக்கோ என்று சொல்ல இல்ல ஆன்ட்டி அமிர்தா வந்த உடனே போறேன் என்று சொல்லிவிட்டு காய்கறி வெட்டிக் கொண்டு இருக்கிறார். உடனே கொஞ்ச நேரத்தில் எழிலும் வந்துவிட குடும்பத்தினர் அவர்களை வரவேற்கின்றனர். சரி எல்லாரும் உட்கார்ந்து பேசிக்கிட்டு இருங்க நான் காபி எடுத்துட்டு வரேன் என்று சொல்ல ஈஸ்வரி எனக்கு வேண்டாம் என சொல்லுகிறார். பாக்யா மற்றவர்களுக்கு காபி கொடுத்துவிட்டு மீண்டும் கிச்சனில் போய் வேலை செய்கிறார். பிறகு என்ன நடக்கிறது? ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? எழிலிடம் என்ன பேசுகின்றனர்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
