Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமிர்தாவை திட்டிய ஈஸ்வரி. கோபத்தில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 04-02-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் எல்லோரும் பாக்கியாவை மேலே கூப்பிட அதன் பிறகு பாக்யா மேலே வர அப்பா அப்போ பையனோட அப்பா அம்மா மட்டும் இங்க இருக்கட்டும் அவங்க கொஞ்சம் பின்னாடி இருக்கட்டும் என சொல்ல ஈஸ்வரி ராதிகாவை நீ கொஞ்சம் பின்னாடி போமா என சொல்ல அவமான படும் ராதிகா பின்னாடி நகர்ந்து நிற்க ஒரு கட்டத்தில் கோபத்துடன் கீழே சென்று உட்கார்ந்து விடுகிறார்.

அதன் பிறகு கோபியும் பாக்யாவும் சேர்ந்து எழிலுக்காக முன் நின்று தட்டை மாற்றி நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர். அதன் பிறகு போட்டோ எடுக்கும்போது கோபியும் பாக்கியாவும் ஜோடியாக நிற்க இதை பார்த்த ராதிகா கோபப்பட பிறகு கோபி அங்கிருந்து நைஸாக கிளம்பி கீழே வந்து விடுகிறார்.

பிறகு எல்லோரும் சாப்பிட போக பாக்யா சாப்பிடாமல் அப்படியே உட்கார்ந்து இருக்க காரணம் கேட்கிறார் ராமமூர்த்தி. ரெண்டு மூணு ஜூஸ் குடிச்சிட்டேன் அதனால பசி இல்லை என சொல்லி அங்கிருந்து எழுந்து வந்து விடுகிறார் பாக்கியா. பிறகு அமிர்தா மண்டபத்துக்கு வந்து இறங்கி உள்ளே ஏறி வந்து எழிலை தேட அப்போது செழியனை பார்க்கிறார்.

அப்போது செழியன் மேடையில் இருந்த கேமரா மேனை கொஞ்சம் விலக சொல்ல அவர்கள் விலக அங்கு எழில், வர்ஷினி இருப்பதை பார்த்து அமிர்தா அதிர்ச்சடைகிறார். கண்ணீருடன் இருக்க அதை மேலே இருந்து பார்த்த ஈஸ்வரி கீழே இறங்கி வந்து அமிர்தாவை அழைத்துச் சென்று ஓரிடத்தில் இருக்க வைத்து இங்கே எதற்கு வந்த? எழில் உன்னை கல்யாணம் பண்ணிக்குவான் என்று நினைத்தாயா? நீ வீட்டுக்கு வரும்போது தெரியும் என் பேரனை வளைச்சி போட பாக்குறனு என திட்ட அமிர்தா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 04-02-23
baakiyalakshmi serial episode update 04-02-23