அமிர்தாவை காயப்படுத்திய ஈஸ்வரி, நக்கல் அடித்த கோபி,இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா எழில் அமிர்தா ஆகியோர் கிச்சனில் உட்கார்ந்து ஹோட்டல் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். லாபம் வரவில்லை போட்ட காசு எடுக்க முடியவில்லை என்று பாக்கியம் பேசிக் கொண்டிருக்க அப்போது தண்ணீர் எடுக்க கீழே வந்த கோபி இதையெல்லாம் கேட்டு ஆனந்தம் கொள்கிறார்.

பார்க்கிங் பிரச்சினை சரியானதும் எல்லாம் சரியாகிவிடும் என்று எழில் சொல்லிக் கொண்டிருக்க கோபி கிச்சனுக்குள் வந்து தண்ணீர் பிடித்துக் கொண்டு பாக்யாவை நக்கல் அடித்து விட்டு செல்கிறார். மேலும் தன்னுடைய பிசினஸ் ஆரம்பிச்ச முதல் நாளிலிருந்து லாபம் பிச்சிக்கிட்டு போது என பீத்திக் கொள்கிறார். பாக்கியா ஒரு நாள் அவருடைய செஃப் லீவு போடட்டும் அப்போ தெரியும் அவருக்கு என எழிலிடம் பேசுகிறார்.

இவைத்தொடர்ந்து செழியன் ஆபீஸ் கல் பேசிக் கொண்டிருக்க அங்கு வந்த ஜெனி பேசி முடித்ததும் யார்கிட்ட பேசணும் எதுக்கு லொகேஷன் அனுப்ப சொன்னேன் நீ கண்டிப்பா போகணுமா அதை கிளைன்ட் ஆம்பளையா பொம்பளையா என கேள்வி மேல கேள்வி கேட்கிறார். பழைய கிளையண்ட் கூட இன்னமும் காண்டாக்ட்ல தான் இருக்கியா? அப்ப மாலினி கிட்டயும் பேசுறியா என்று கேள்வி கேட்கிறார்.

மேலும் போன் பாஸ்வேர்டு என்ன என்றெல்லாம் கேட்டு செழியன் ஃபோனை செக் பண்ணுகிறார். கீழே ஈஸ்வரி ஜெனியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அமிர்தா அங்கு வர பாக்கியாவிடம் நீ எதுக்கு அமிர்தாவை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறேன் வீட்டு வேலையெல்லாம் யார் பார்த்துக்குவா? எழில யார் பார்த்துப்பா சீக்கிரம் நீயும் ஒரு குழந்தையை பெத்துக்க என்று சொல்வது மட்டுமின்றி அந்த கணேஷ் திரும்பி வந்து பிரச்சனை பண்ணா என்ன பண்றது என பேசி அமிர்தாவை காயப்படுத்துகிறார்.

இதனால் அமிர்தா அழுது கொண்டு ரூமுக்கு சென்று விடுகிறார். அடுத்ததாக ஜெனி ஏன் பாட்டி அப்படி பேசினீங்க? என்று கேட்க பாக்ககியாவும் உங்க ஆசையை சொல்றது தப்பு இல்ல அத்தை, ஆனா அவங்கள கட்டாயப்படுத்துறது தப்பு என சொல்கிறார். அதுவும் கணேஷ் பத்தி பேசினது ரொம்ப தப்பு என சொல்ல ஈஸ்வரி எனக்கு உன்னை மாதிரி பூசி மொழுகெல்லாம் பேச தெரியாது நான் எதையும் வெளிப்படையாத்தான் பேசுவேன் அதுல நியாயம் இருக்கும் என கூறுகிறார்.

ரூமுக்கு வந்த அமிர்தா டல்லாக இருக்க அதை பார்த்த எழில் என்ன ஆச்சு என்று கேட்க ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார். யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா என்று கேட்க பாட்டி குழந்தை பெத்துக்க சொன்னாங்க என்று சொல்ல அதா இப்போதைக்கு நல்லா இருக்காளே என்று எழில் கூறுகிறார். அவ உங்க குழந்தை இல்லையே என்று அமிர்தா சொல்ல பேச்சுக்கு கூட அப்படி சொல்லாத என்று எழில் கோபப்படுகிறார்.

நாம குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று திரும்பவும் அமிர்தா சொல்ல முதல்ல கரியர்ல ஜெயிக்கணும் அதுக்கப்புறம் நமக்கு தோணும்போது பெற்றுக்கலாம் என்று எழில் சொல்கிறார். வீக் எண்டில் வெளியே போகலாம் என்று ஆசையாக பேசி அமிர்தாவை சிரிக்க வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

baakiyalakshmi serial episode update 03-04-24
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago