Baakiyalakshmi serial Episode Update 03.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. புதிய கட்டிலில் படுக்க வைத்து பிறகு அனைவரும் உள்ளே வந்து பார்த்த நிலையில் கோபியும் வந்தார். கோபியை பார்த்ததும் அவருடைய அப்பா டென்ஷன் ஆனதை அடுத்து அவர் வெளியே சென்றுவிட்டார்.
இதனால் பாக்யாவுக்கு சந்தேகம் வந்து அவரும் பின்னாடியே சென்று ஏன் எங்க மாமாவை பார்க்க வரவே மாட்றீங்க என கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல சுறுசுறுப்பா இருந்த அப்பாவை பார்த்துட்டு இப்படி அவளை கட்டிலில் பார்க்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என கூறுகிறார். பிறகு பாக்கியாவிடம் பிளாக் காபி கேட்கிறார்.
இந்த நேரத்தில் ராதிகா போன் செய்ய செழியன் மற்றும் ஜெனி பக்கத்தில் இருந்ததால் ஆபீஸ் கால் என சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியே கிளம்பி விடுகிறார். பிறகு ஈஸ்வரி வந்து அமர அவரை சாப்பிடச் சொல்கிறார் பாக்கியா. அவர் எனக்கு வேண்டாம் பசிக்கல என்ன சொல்ல சாப்பிடுங்க என சாப்பிட வைக்கிறார். நீங்க சாப்பிட அதனால பாக்கி அக்காவும் இன்னும் சாப்பிடாம இருக்கு என செல்வி சொல்ல நீ சாப்பிட வேண்டியதுதானே பாக்கியா என ஈஸ்வரி கூறுகிறார். நீங்க சாப்பிடுங்க என சொல்ல நீயும் உக்காந்து சாப்பிடு என ஈஸ்வரி கூறுகிறார்
கணவரை நினைத்து ஈஸ்வரி கண்கலங்க பாக்கியாவும் கண்கலங்கி அவருக்கு ஆறுதல் கூறுகிறார். நீ மட்டும் இல்லேன்னா நாங்க என்னவாயிருப்போம் என்று தெரியல. நீதான் எங்களை வழி நடத்திக் கொண்டு போற என பாக்கியாவை பாராட்டுகிறார்.
இந்த பக்கம் எழில் அமிர்தாவின் வீட்டிற்குச் சென்று அவருடைய அப்பாவிடம் பிபி மாத்திரை எல்லாம் ஒழுங்கா போறீங்களா இனி மாசம் மாசம் நானே வந்து உங்கள ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன் என கூறுகிறார். பிறகு அமிர்தாவின் அம்மா வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க என நலம் விசாரிக்க அப்போது தனது தாத்தாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு ஒரு பக்கம் கை கால் செயல் படவில்லை பேச முடியவில்லை என கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமிர்தாவின் வீட்டார் தாத்தாவை வந்து பார்க்கிறோம் என கூறுகின்றனர்.
இந்த பக்கம் இனியா ஸ்கூலில் இருந்து வந்து அவருடைய தாத்தாவிடம் சென்று நான் படித்த நல்லா எழுதி இருக்கேன் என கூறுகிறார். இதைக்கேட்டு கோபியின் அப்பா சிரிக்கிறார். நான் பத்தாவது தோடு என்னோட வா என இனிய கேட்க அவர் டென்சன் ஆகிறார் பிறகு ஈஸ்வரி அவர் சும்மா விளையாடுறா டென்ஷன் ஆகாதீங்க அவ கலெக்டர் ஆவா என கூறுகிறார். வயசான காலத்துல நாம் அவ கலெக்டர் பங்களாவில் தான் இருப்போம் என சொல்கிறார்.
இந்த பக்கம் கோபி காரில் சென்று கொண்டிருக்க அவருக்கு ராதிகாவிடம் இருந்து போன் வருகிறது. நாலு நாளா என் வீட்டு பக்கம் வரல போன் கூட பண்ணல என கேட்கிறார். கொஞ்சம் உடம்பு முடியல என கோபி கூறுகிறார் பிறகு உன் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் ராதிகா வீட்டுக்கு போன கோபியிடம் ராதிகா விவாகரத்து கிடைத்துவிட்டது இனி ராஜேஷ் தொந்தரவு இருக்காது. நீங்களும் எங்க கூட வந்துட்டா ரொம்ப சந்தோஷமா இருக்கும் என கோபியை கட்டி அணைத்துக் கொள்கிறார். கோபியும் கண்டிப்பா வந்துடறேன் என சொல்கிறார்.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna
Gen Z Romeo Video Song | Kambi Katna Kathai | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini
I'm The Guy Lyrical Video | Aaryan | Vishnu Vishal & Shraddha Srinath | Ghibran,…