Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வாடகை கேட்ட பாக்கியா, கோபி சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

BaakiyaLakshmi Serial Episode Update 02-01-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகா வீட்டிற்கு வந்ததை ஒத்துக் கொள்ளாமல் சண்டை போட கோபி நெஞ்சுவலி வந்தது போல் நடிக்கிறார். சரி நான் எதுவும் கேக்கலப்பா உன் இஷ்டம் என்று சொல்லும் வரைக்கும் கோபி வலிக்குதும்மா வலிக்குதும்மா என்று சொல்லி ஆக்சன் கொடுக்கிறார்.

கிச்சனில் பாக்யா வேலை பார்த்துக் கொண்டிருக்க ஜெனி அங்கிளுக்கு நிஜமாலுமே நெஞ்சுவலி வந்துச்சா என்று கேட்க கண்டிப்பா இல்ல நடிக்கிறார் என்று சொல்லுகிறார் பாக்யா . பிறகு பெட்ரூமில் ரெஸ்டாரன்ட் குறித்து செல்வி பாக்கியாவிடம் பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து ராதிகா வருகிறார்.

பாக்கியாவிடம் நான் இங்க வந்திருக்க கூடாது அவருக்கே முதல்ல இந்த வீட்ல உரிமை இல்ல அப்படி இருக்கும்போது நானும் மயூ வந்திருக்கும் கூட கஷ்டப்படுத்துறோம் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் இல்ல வருத்தப்படாதீங்க என்று சொல்லுகிறார் பாக்யா. உடனே செல்வி ராதிகாவிடம் நீங்க வந்தது அக்காவுக்கு சந்தோஷம் தான் நீங்க அங்கேயும் கோபி சார் இங்கேயும் கஷ்டப்படுறது அக்காவால பார்க்க முடியல என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க சரி நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் கிளம்புறேன் என்று ராதிகா இருந்து கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் செழியன் கம்ப்யூட்டரில் ரெஸ்டாரன்டிற்கு தேவையான லிஸ்ட் பாக்கியாவிற்கு போட்டு உதவி செய்து கொண்டிருக்க அங்கு ஈஸ்வரி வந்து அம்மாவும் பையனும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்டு உட்காருகிறார். அதற்கு பாக்யா ரெஸ்டாரன்ட் இருக்கத் தேவையான லிஸ்ட் போடுவதாக சொல்லுகிறார். லிஸ்ட் போடாமையே தேவையில்லாத எல்லாம் பண்ணுவ இதுல லிஸ்ட் வேற போடுறியா என்று கேட்க அந்த நேரம் பார்த்து கோபி தண்ணீர் குடிக்க வருகிறார். உடனே பாக்யாவிடம் ரொம்ப நன்றி பாக்யா நீ இல்ல நான் ராதிகாவை போய் பார்த்தே இருக்க மாட்டேன் நீ சொன்னது கரெக்டு தான் என்று சொல்லுகிறார். நான் மட்டும் போகல நான் விபரீதமா என்ன வேணா நடந்து இருக்கும் என்று சொல்லுகிறார்.

இது மட்டும் இல்லாம ராதிகாவும் மயூவும் வந்தப்போ நீ எதுவுமே பேசல, அவங்க இங்க இருக்கிறதுல ஏதாவது உனக்கு பிரச்சனை இருக்கா என்று கேட்க, நீங்க உங்க பொண்டாட்டி குழந்தையோட இருக்குறதிலேயே எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா இந்த வீட்ல இருக்கிறது எனக்கு பிடிக்கல தான் ஆனாலும் இவங்க உங்களோட உடம்ப பாத்து பயப்படுறாங்க என் பசங்களும் இங்கே இருக்கணும்னு ஆசைப்படறாங்க அதனால எல்லாம் யோசிச்சு தான் நான் இந்த முடிவு எடுத்திருக்கேன் என்று சொல்லுகிறார். அப்போ இங்க தங்கிக்கலாமா என்று கேட்க தாங்கிக்கொள்ள ஆனா ஒன்னு என்று சொல்ல என்ன என்று கோபி கேட்கிறார். நீங்க இங்க தங்கணும்னா வாடகை குடுக்கணும் என்று சொல்ல ஈஸ்வரி டென்ஷன் ஆகிறார்.

கோபி வாடகை கொடுக்க சம்மதிக்க எவ்வளவு என்று கேட்கிறார் தண்ணீர், கரண்ட் அப்புறம் சாப்பிடறதுக்கு கிச்சனுக்கு 300 என்று கணக்கு போட்டு ஒரு நாளைக்கு 1300 ரூபாய் என்று சொல்லுகிறார். கோபி வாடகை கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டு சென்று விடுகிறார். உடனே ஈஸ்வரி அந்த ராதிகா இங்கே இருக்கிறதே புடிக்கலைன்னா நீ கோபி கிட்டயே வாடகை வாங்கற ராதிகா கிட்ட கேட்டு இருந்தா கூட பரவால்ல என்று சொல்லுகிறார்.இந்த வீட்ட நான் எவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கினேன்னு எனக்கு தான் தெரியும் அது யார் கிட்ட இருந்து வாங்கணும்னு உங்ககிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இருக்காதுன்னு நான் நினைக்கிறேன் என்று சொல்ல ஈஸ்வரி எதுவும் பேசாமல் சென்று விடுகிறார் செழியன் இடம் நீ வேலை பாரு என்று சொல்லி உட்காருகின்றனர்.

ஹாலில் ஈஸ்வரி உட்கார்ந்து கொண்டிருக்க ராதிகா மேலிருந்து இறங்கி வருகிறார். நேராக ஈஸ்வரி ரூமுக்கு போக ஈஸ்வரி தடுத்து நிறுத்துகிறார். எங்க போறன்னு கேட்க கோபியோட திங்ஸ் எல்லாம் எடுக்கணும் என்று சொல்லுகிற யாரை கேட்டு இந்த முடிவு எடுத்த என்று சொல்ல கோபி தான் சொன்னாரு என்று சொல்லுகிறார். அவன் படிக்கட்டில் ஏறக்கூடாது என்று சொல்ல எல்லாமே நான் டாக்டர் கிட்ட கேட்டுட்டேன்னு நான் இதுக்கு அப்புறம் கோபிய நான் பாத்துக்குறேன் என்று சொல்லுகிறார் ஈஸ்வரி நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல இவ்வளவு நாள் நீங்க பாத்துக்கிட்டீங்க இல்ல அதுவே போதும் இதுக்கு அப்புறம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு ரூமில் இருந்து பேக் எடுத்துக்கொண்டு வெளியே வர அந்த நேரம் பார்த்து கோபி வருகிறார்.

உடனே ஈஸ்வரி கோபியிடம் நீ மேல போய் தங்க போறதா சொல்றாங்க என்று சொல்ல ஆமாமா நான் மேல தாங்கிக்கிறோம் என்று சொல்ல ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். பிறகு கோபி என்ன கேட்கிறார்?அதற்கு இனியாவின் பதில் என்ன? பாக்கி எடுக்க போகும் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

BaakiyaLakshmi Serial Episode Update 02-01-25