Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவை குஷிப்படுத்திய கோபி.!! மொட்டை மாடியில் கதறி அழும் இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

baakiyalakshmi serial episode update 02-01-23

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி ராதிகா மேடம் சென்று அது நல்லாவே இல்ல அப்பாவுக்காக பொய் சொன்னேன் என சொல்ல அந்த சாப்பாடு நல்லா தான் இருந்தது உங்களுக்கு பிடிச்சிருந்தது அதனாலதான் நீங்க நல்லா இருக்குன்னு சொன்னீங்க என கூறுகிறார்.

சரி அப்படியே இருக்கட்டும் இனிமே எந்த சாப்பாடு கொடுத்தாலும் யாரு சமைச்சது என்ன எதுவுமே முழுசா கேட்டுட்டு தான் கமெண்ட் சொல்லுவேன் இல்ல இல்ல கமெண்ட் கூட சொல்ல மாட்டேன் என சொல்ல ராதிகா சிரிக்க கோபி ஒரு வழியா ராதிகாவை சிரிக்க வச்சுட்டேன் என சந்தோஷப்படுகிறார். பாக்கியா நாம சந்தோஷமா இருக்க கூடாதுன்னு இப்படி பண்றாங்க என ராதிகா சொல்ல கோபி நாம இன்னும் சந்தோஷமா இருந்து காட்டுவோம் என கூறுகிறார்.

அடுத்து மறுபக்கம் பாக்யா எழுதிக் கொடுத்த லெட்டரை தாத்தா இனியாவிடம் கொடுக்க இனியா மொட்டை மாடியில் சென்று லெட்டரை படித்து அழுகிறார். அந்த லெட்டரில் பாக்கியா படிக்காததால் இதுவரை பட்ட அவமானங்களை எழுதி படிப்பு தான் ரொம்ப முக்கியம் நீ நல்லா படிச்சு அடுத்த முறை நல்ல மார்க் வாங்கணும் என எழுதி இருக்கிறார்.

அதன் பிறகு எழில் ஆபீஸில் தயாரிப்பாளரிடம் வர்ஷினி அப்பா செட்டில் பத்தி பேசணும் என சொல்ல படம் சூட்டிங் போகுமா என கேட்க எழில் கல்யாணத்தைப் பற்றி என்ன சொல்கிறான் என கேட்க வர்ஷினி அமைதியாகவே இருக்க அவனை வர சொல்லு நான் பேசுறேன் என கூறுகிறார். இல்லப்பா அதெல்லாம் பாட்டி பார்த்துப்பாங்க என சொல்ல தயாரிப்பாளர் எழுந்து சென்று எழிலிடம் பேசுகிறார்.

எழில் நான் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிக்கிறேன் அவ்வளவு தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன் யாருக்காகவும் அவளை விட்டு தர முடியாது என சொல்ல அப்படின்னா இந்த படம் நடக்காது. இண்டஸ்ட்ரில உன்ன பத்தி நான் ஒரு வார்த்தை தப்பா சொன்னா போதும் உன்னுடைய கரியரே போயிடும் என மிரட்டுகிறார். மேலும் உனக்கு ஒரு நாள் டைம் தரேன் யோசிச்சு பதில் சொல்லு என சொல்ல ஒரு நாள் இல்ல ஒரு நிமிஷம் கூட வேண்டாம் என்னுடைய முடிவுல நான் உறுதியாக இருக்கேன் என சொல்ல அப்படின்னா உனக்கு இந்த ஆபீஸ்ல இடம் கிடையாது ரெண்டு நிமிஷம் டைம் தரேன் உனக்கு எதை எடுக்கணுமோ அதை எடுத்துட்டு வெளியே போ என சொல்கிறார். இதனால் எழில் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi serial episode update 02-01-23
baakiyalakshmi serial episode update 02-01-23