Baakiyalakshmi serial Episode Update 01.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் இனியா அவரது பெட் ரூமில் படுத்து தாத்தாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த பக்கம் கோபி தன்னுடைய அப்பாவின் நிலைமைக்கு நாமே காரணமாகி விட்டேனே என கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறார்.
தூக்கம் வராமல் தவிக்கும் இனியா ஜெனி ரூமின் கதவை தட்ட அவர் திறக்கவில்லை. இதனையடுத்து கோபியின் ரூமுக்கு சென்று தனியாக படிக்க பயமாக இருக்கிறது நான் இங்கே தூங்கட்டுமா என கேட்கிறார். தாராளமா படுத்துக்கடா என கோபி கூறுகிறார். தாத்தா சரியாய் வந்து விடுவாரா என கேட்க இது என்னடா கேள்வி அவர் சரியாய் வந்துடுவாரு. அதுக்கு அப்புறம் பழையபடி உங்களுக்கு கதை சொல்லுவது என் கிட்ட சண்டை போடுவாரு இது எல்லாமே நடக்கும் என கூறுகிறார்.
மறுநாள் காலையில் ஈஸ்வரி சோபாவில் வந்து அமர்ந்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கோபி மற்றும் இனியா வருகின்றனர். இனியா தாத்தா எப்ப வருவாரு திரும்பவும் பழையபடி பேசுவாரா நடப்பார் என கேட்கிறார். கோபி அமைதியாக இரு என சொல்கிறார். இதைக் கேட்ட ஈஸ்வரி கண்கலங்கி அழுகிறார். பிறகு கோபியில் அப்பாவை எழில் மற்றும் செழியன் ஆகியோர் காரில் இருந்து இறங்கி கூட்டி வருகின்றனர்.
அவரைப் பார்த்த ஈஸ்வரி என்னங்க என கதறி அழுகிறார். இனியாவும் தாத்தா தாத்தா என்று அழுகிறார். கோபி அப்பா என அழைத்ததும் அவரைப் பார்த்து கோபியின் அப்பா முறைக்கிறார். பிறகு அவரை பெட்ரூமிற்கு அழைத்து சென்று படுக்க வைக்கின்றனர்.
அனைவரும் அவரை பார்த்து கண் கலங்கி நின்றனர். மீண்டும் கோபி அப்பா என சொல்ல டென்ஷனான அவரது அப்பா சத்தம் போடுகிறார். ஆனால் யாருக்கும் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. பிறகு கோபி அங்கிருந்து வெளியே வந்துவிடுகிறார்.
ஒவ்வொருவராக சென்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு வருகின்றனர். பிறகு பாக்கியா காபி எடுத்துக்கொண்டு ஈஸ்வரிக்கு கொடுக்கிறார் எனக்கு வேண்டாம் என சொல்கிறார். இப்ப நீங்க காபி குடிக்கிற டைம் தானே மாமா இப்ப காபி குடிப்பது பாருங்க என அவரை எழுப்பி உட்காரவைத்து காபி கொடுக்கின்றனர். அவரும் கண்கலங்க ஈஸ்வரி எதுக்கு அழறீங்க நான் இருக்கேன் என கூறுகிறார்.
பிறகு செல்வி கோவிலில் வேண்டிக்கிட்டு வந்தேன் சீக்கிரம் நீங்க சரியாகிடுவீங்க என சொல்கிறார். அதன்பிறகு ஜெனி இன்னைக்கு நான் தான் உங்களுக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன். ஆன்ட்டி உருண்டை குழம்பு வைக்கிறாங்க உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்ல என கூறுகிறார். அதன்பிறகு எழில், செழியன், இனியா மற்றும் ஜெனி ஆகியோர் அவரது பக்கத்தில் அமர்ந்து கேரம் போர்ட் விளையாடுகின்றனர். இத்துடன் இன்றைய சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
அதன் பிறகு வெளியான புரோமோ வீடியோவில் மாமா சீக்கிரம் குணமாகிவிடும் என ஈஸ்வரிக்கு பாக்கியா ஆறுதல் சொல்ல நீ தான் எங்களை வழிநடத்தி கொண்டு போற நீ இல்லேன்னா நாங்க என்ன ஆகியிருப்போமோ என கண் கலங்குகிறார்.
Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna
Gen Z Romeo Video Song | Kambi Katna Kathai | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini
I'm The Guy Lyrical Video | Aaryan | Vishnu Vishal & Shraddha Srinath | Ghibran,…
அருண் சீதாவை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் ஒன்று சிறகடிக்க…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…