தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் குடும்பப் பெண்ணாக இருந்து வரும் பாக்கியா சவால்களை எதிர்த்து எப்படி சாதிக்கிறார் என்பதுதான் கதை களமாக இருந்து வருகிறது.
சீரியலில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ராதிகாவுடன் நெருங்கி பழகி வருவது ஒரு பக்கம் இருந்து வர இன்னொரு பக்கம் இயக்குனர் அவ்வப்போது ரூட்டை மாற்றி பயணித்து வருகிறார். ஏற்கனவே ஒரு முறை இனியா பள்ளியில் படிக்கும் தோழிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இனியாவால் சர்ச்சைகளை சந்தித்தது தொடங்கியுள்ளது பாக்கியலட்சுமி சீரியல். வீட்டிற்கு பாக்கியாவின் மாமனாருக்கு சிகிச்சை அளிக்க ரஜினிகாந்த் என்ற பெயரில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் சீரியலில் புதியதாக அறிமுகமாகியுள்ளார்.
இவர் வீட்டுக்கு வந்த முதல் நாளே இவர் மீது காதல் கொள்கிறார் இனியா. இன்றைய எபிசோடில் கூட இவர் அந்த டாக்டர் வரலையா என வீட்டில் உள்ளவர்களிடம் விசாரிப்பது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகின. இதனால் பள்ளியில் படிக்கும் பெண்ணுக்கு காதலா? இதுபோன்ற காட்சிகளை சமூகத்தை சீரழித்து விடும் என பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டனர்.
இதனால் இன்னொரு முறை பாக்கியலட்சுமி சீரியல் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளது.


